Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Tuesday, July 28, 2015

முன்னாள் ஜனாதிபதி A P J அப்துல் கலாம் காலமானார்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார் :
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மேகாலயாவில் காலமானார். மேகாலயாவில் கருத்தரங்கில் கலாம உரையாற்றிய போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அப்துல் கலாம் உயிர் பிரிந்தது.
எம் இனத்தின் அடையாளத்தூண் சரிந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாரடைப்பால் காலமானர்.
அப்துல் கலாம்

"உலக நாடுகளையெல்லாம் இந்தியா வை திரும்பி பாா்க்க
வைத்த நாயகன் தமிழ் தாயின் தலைமகன் அணுகுண்டு
சோதனைமூலம் இந்தியாவும் ஒரு வல்லரசுதான் என
பறைசாற்றியவனே இளைஞா் களே இந்தியா என
எடுதுததுரைத்தவனே உன் இடத்தை யாாராலும்
நிரப்ப இயலாது என் பதை நினைக்கும்பொழுது
நீயில்லா இந்தியா நீ காட்டிய வழியிலாவது நடை பயிலட்டும்"

அப்துல் கலாம்

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ..எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த அப்துல் கலாம் பெத்தானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்க தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானர். இந்த தகவலை பிடிஐ தெரிவித்துள்ளது.
84 வயதான அப்துல் கலாம் தமிழ்நாட்டின் ராமேஷ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். 2002- 2007 வரை இந்தியாவில் 11 வது குடியரசு தலைவராக அவர் இருந்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் போது பிரதமரின் தலமை அறிவியல் ஆலோசகராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சரித்திர நாயகரே


அப்துல்கலாமின் பெருமை :

அந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துட்டிருந்த விஞ்ஞானி, தன் மேலதிகாரிகிட்ட," நான் என் பிள்ளைகளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் " னு கேட்டாரு.


மேலதிகாரியும் அனுமதிச்சாரு:

வேலை மும்முரத்தில் ழூழ்கிய விஞ்ஞானி கடிகாரத்தைப் பார்த்தப்போ மணி இரவு எட்டரை. பிள்ளைகள் வீட்டில் பிரளயம் கிளப்புவார்கள்ங்கற பயத்தோட போனாரு. வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாங்க.
"குழந்தைகள் எங்கே..?"ன்னு கேட்டதும் மனைவி சொன்னா "சரியாக ஐந்தரை மணிக்குக் கிளம்பி கண்காட்சிக்குப் போய் விட்டார்கள். உங்கள் மேலதிகாரி தான் வந்து அழைச்சிட்டுப் போனாரு" னு.

விஞ்ஞானி வேலையில் ழூழ்கிவிட்டதைப் பார்த்த மேலதிகாரி, அவர் கவனத்தையும் கலைக்க விரும்பலை, குழந்தைகள் கனவையும் கலைக்க விரும்பலை. தானே சென்று குழந்தைகளை அழைத்துச் சென்றார்.

அந்த மேலதிகாரியின் பெயர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.அப்துல்கலாமின் விருதுகள்:

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 –
வீர் சவர்கார் விருது
2000 –
ராமானுஜன் விருது
2007 –
அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 –
கிங் சார்லஸ்-II பட்டம்
2008 –
பொறியியல் டாக்டர் பட்டம்
2009 –
சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 –
ஹூவர் மெடல்
2010 –
பொறியியல் டாக்டர் பட்டம்
2012 –
சட்டங்களின் டாக்டர்
2012 –
சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது


.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான
வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை.

எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்என்ற அவர் கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர். உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.