Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Thursday, October 13, 2016

புதிய ஆன்டிபயாடிக்ஸ் மருந்து கண்டு பிடித்த வேலூர் விஐடி மாணவர் பிரசாந்த் மனோகருக்கு இளம் விஞ்ஞானி விருது

வேலூர் விஐடி மாணவர் பிரசாந்த் மனோகர் 
புதிய ஆன்டிபயாடிக்ஸ் மருந்து கண்டு பிடித்து இளம் விஞ்ஞானி விருதை பெற்ற விஐடி மாணவனுக்கு ஜி.விசுவநாதன் பாராட்டு தெரிவித்தார். ஐரோப்பா மற்றும் இந்தியா நாடுகளில் அறிவியல் தொழில்நுட்ப துறையில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும் அதற்கான ஆராய்ச்சி திட்டங்களை ஒருங்கிணைந்து உருவாக்கும் வகையில் 2009ம் ஆண்டில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து இன்னோ இண்டிகா அண்டு இண்டிகோ பாலிசியை உருவாக்கின.  அதன்மூலம் எப்பி7 என்ற இளம் விஞ்ஞானிக்கான விருது வழங்குவதற்கான ஆராய்ச்சி போட்டிகளை நடத்தி வருகிறது. விஐடி பல்கலைக்கழகம், துருக்கி, நார்வே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள ஆராய்ச்சி அமைப்புகளுடன் இணைந்து ஐஐஎம்ஏஆர் என்ற அமைப்பின் மூலம் பொதுமக்களிடையே நோய் தொற்று சம்பந்தமான விழிப்புணர்வை உருவாக்குவதுடன், அதற்கான புதிய மருந்து கண்டுபிடிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

நோய் தாக்குதலை தடுக்க தற்போது கார்பாபேனியம், கொலிஸ்டின் மற்றும் டைகிசைக்ளின் ஆகிய ஆன்டிபயாடிக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இவைகளுக்கு மாற்றாக புதிய ஆன்டிபயாடிக்ஸ் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி போட்டியில் விஐடி பல்கலைக்கழகத்தின் உயிரி அறிவியல் மற்றும் பள்ளியின் ஆராய்ச்சி மாணவர் பிரசாந்த் மனோகர், பள்ளி உதவி பேராசிரியர் என்.ரமேஷ் வழிகாட்டுதலுடன் 2014ம் ஆண்டில் விஐடி ஆய்வகத்தில் ஆராய்ச்சி பணிகளை தொடங்கினார். பேஜ் தெராப்பி என்ற தலைப்பில் புதிய ஆன்டிபயாடிக்கான புதிய பாக்டிரியாக்களை உருவாக்கி 3 ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் பேஜ் தெராப்பி என்ற புதிய ஆன்டிபயாடிக் ரெஸிஸ்டெண்ட்டை கண்டுபிடித்து விஐடி மாணவர் பிரசாந்த் மனோகர் சாதனை படைத்துள்ளார்.

இவரது ஆராய்ச்சி அறிக்கையுடன், இதுதொடர்பான மேலும் பல ஆயிரம் ஆராய்ச்சி அறிக்கைகளை பெற்ற நிபுணர் குழுவினர், ஸ்பெயின் நாட்டின் கிறிஸ்டினா அவிலா, ஹைதராபாத் ஓம் பிரகாஷ் சர்க்கார், கான்பூர் ஐஐடியின் விக்ரம் சோனி, அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தின் கல்யாண் பாஸ்கர், பெங்களூரூ ஐஐஎஸ்சியின் ஹரிகிரண்முனிகாண்டி, விஐடி பல்கலைக்கழகத்தின் பிரசாந்த் மனோகர் ஆகியோரின் ஆராய்ச்சிகளை தேர்வு செய்தனர். 

விஐடி மாணவர் பிரசாந்த் மனோகருக்கு இளம் விஞ்ஞானி விருது :

கோவாவில் நடந்த இறுதி கட்ட தேர்வில் வீடியோ பிரசன்டேசன் சோசியல் மீடியா விருப்பம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கிய விஐடி மாணவர் பிரசாந்த் மனோகரின் பேஜ் தெராபியை முதலிடத்திற்கு தேர்வு செய்தனர். அதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான எப்பி 7 என்ற இளம் விஞ்ஞானிக்கான விருது பிரசாந்த் மனோகருக்கு வழங்கப்பட்டது. விருது வென்ற பிரசாந்த் மனோகரை வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டினார்.

No comments:

Post a Comment