Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Friday, December 30, 2016

BHIM Apps பிம் ஆப்ஸ் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது ?

பணமற்ற பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பாரத் இன்டர்பேஸ் பார் மணி ( பிம்) எனற் புதிய ஆப்சை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்.ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்கும் இந்த ஆப்ஸ், ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு செயல்படும். ஐஓஎஸ் (ஆப்பிள்) தளத்திற்கான இந்த ஆப்ஸ் விரைவில் வெளியிடப்படும். இந்த புதிய ஆப்ஸ் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடன் பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதர யுபிஐ மற்றும் பாங்க் கணக்குகளோடு தொடர்பு கொண்டு இந்த ஆப்சை பயன்படுத்தலாம்.

BHIM Apps பிம் ஆப்ஸ்  எப்படி பயன்படுத்துவது
BHIM Apps பிம் ஆப்ஸ்  எப்படி பயன்படுத்துவது

இந்த பிம் ஆப்சை எப்படி பயன்படுத்துவது?

இந்த பிம் ஆப்சை, பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்தபின், உங்களுடைய பாங்க் கணக்கை இதில் பதிவு செய்து அதற்கான யுபிஐ னின் எண்ணை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பயன்படுத்துபவரின் மொபைல் எண்தான், பயன்படுத்துபவரின் முகவரியாக இருக்கும். இவ்வாறு ஒருமுறை பதிவு செய்து கொண்ட பின் பிம் ஆப்சைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

பிம் ஆப்சைப் பயன்படுத்தி எப்படி பணத்தைப் பெறுவது?

பயன்படுத்துபவர், தங்களுடைய மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நுகர்வோரிடமிருந்து பணத்தைப் பெறலாம்; அவர்களுக்கு பணத்தை அனுப்பலாம். யுபிஐ தொடர்பு இல்லாத பாங்குகளுக்கும் ஐஎப்எஸ்சி எண்ணைப் பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யலாம்.

இந்த பிம் ஆப்சை ஏற்கும் பாங்குகள் எவை?

அலகாபாத் பாங்க், ஆந்திரா பாங்க், ஆக்சிஸ் பாங்க், பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா பாங்க், கத்தோலிக் சிறியன் பாங்க், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, டிசிபி பாங்க், தேனா பாங்க், பெடரல் பாங்க், எச்டிஎப்சி பாங்க், ஐசிஐசிஐ பாங்க், ஐடிபிஐ பாங்க், ஐடிஎப்சி பாங்க், இந்தியன் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், இந்துஸ் இந்த் பாங்க், கர்நாடகா பாங்க், கரூர் வைஸ்யா பாங்க், கோடக் மகிந்தரா பாங்க், ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் பாங்க், ஆர்பிஎல் பாங்க், சவுத் இந்தியன் பாங்க், ஸ்டாண்டர்டு சார்ட்டடு பாங்க், ஸ்டேட பாங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் பாங்க், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா பாங்க். இதர விவரங்கள்பயனீட்டாளர் பணபரிவரித்தனை தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மொபல் எண் தவிர வழக்கமான பணபரிவர்த்தன முகவரியையும் உருவாக்கி கொள்ளலாம். கியூஆர் குறியீட்டு மூலம் எளிதாக பண பரிவர்த்தனை செய்யாலாம்.
பிம் ஆப்ஸ் இப்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே செயல்படும். விரைவில் இதர மொழி வசதிகளும் செய்து தரப்படும்.

பிம் ஆப்சை எப்படி டவுன்லோடு செய்யலாம்?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியில் இந்த ஆப்சை டவுன்லோடு செய்ய : BHIM Apps

Tuesday, December 20, 2016

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்- 2017: மேஷ ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்?

2017 புத்தாண்டு ராசி பலன்கள் அனைத்தும் பொதுவானவை ஜன்ம லக்கின ராசியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பலன்களாகும். மேஷ ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்.

2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது. அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும். 

ஆங்கில புத்தாண்டு 2017: மேஷ ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்?
ஜாதக பலமும் சிறப்பாக இல்லாமல் கோசாரமும் அனுகூலமாக அமையாமல் போனால் கெடுபலன்கள் அதிகமாகும். இப்படிப்பட்ட கிரக நிலை அமையப் பெற்றவர்கள் கிரகப் பிரீதி கோயில் வழிபாடு தான தர்ம காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக சங்கடங்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நற்பலன் தரக்கூடிய குரு மற்றும் தீய பலன் தரக்கூடிய சனியின் கோசார நிலையைக் கொண்டு புத்தாண்டில் நிகழக்கூடிய நல்ல கெட்ட பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கோசார கிரகங்களின் நற்பலன்களை அதிகப்படுத்திக்கொள்ளவும் தீய பலன்களை குறைத்துக் கொள்ளவும் அன்பர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.

மேஷம் ராசியினருக்கு ஆங்கில புத்தாண்டு எப்படி? 

வீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே எதிலும் துணிச்சலும் தான் நினைத்த காரியம் சாதிக்கின்ற எண்ணமும் தான் நினைக்கும் எண்ணப்படி பிறர் நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே.

ஜனவரி - தொழிலில் இடமாற்றம் :

மாதக் கடைசியில் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் உத்தியோகம் சம்பந்தமாக இடமாற்றம் உண்டாகும். 14ந் தேதிக்குப் பிறகு புதிய இடத்தில் பணியில் அமரும் நிலை உண்டாகும். பணியில் கொஞ்சம் மன ஈடுபாடு குறைவாக இருக்கும். வெளியூர் பயணம் காரணமாக செலவுகள் அதிகரிக்கும் சிலர் வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மாதக் கடைசியில் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும்.

மேஷ ராசிக்கான பலன் ஜனவரி மாதம் To டிசம்பர் தெரிந்து கொள்ளலாம் : Click Here

Friday, December 16, 2016

பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு - அரசு தேர்வுத்துறை இயக்ககம்

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கும் என்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2  மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு
தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கும் என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறும்.மேலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரிவான தேர்வு அட்டவணை பின்வருமாறு:

HSC Public Exam Time Table - March 2017 :

02.03.17 - வியாழன் - தமிழ் முதல் தாள்
03.03.17 - வெள்ளி -  தமிழ் இரண்டாம் தாள்
06.03.17 - திங்கள் - ஆங்கிலம் முதல் தாள்
07.03.17 - செவ்வாய்  -  ஆங்கிலம் இரண்டாம் தாள்
10.03.17 - வெள்ளி - வணிகவியல் /  மனையியல் / புவியியல்
13.03.17 - திங்கள் - வேதியியல் / கனக்குப் பதிவியியல்
17.03.17 - வெள்ளி - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) / இந்திய கலாச்சாரம் / 
                                    கணிப்பொறி அறிவியல் / உயிர் வேதியியல் / மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ்க் தமிழ்)
21.03.17 - செவ்வாய் - இயற்பியல் / பொருளியல்
24.03.17 - வெள்ளி - தொழில் கல்வி தியரி / அரசியல் அறிவியல் /  செவிலியர் கல்வி (பொது) / புள்ளியியல்
27.03.17 - திங்கள் - கணிதம் / விலங்கியல் /  நுண்ணுயிரியியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
31.03.17 - வெள்ளி - உயிரியால் / வரலாறு / தாவரவியல் / வணிக கணிதம்

SSLC Public Exam Time Table - March 2017 :

08.03.17 - புதன் - தமிழ் முதல் தாள்
09.03.17 - வியாழன் - தமிழ் இரண்டாம் தாள்
14.03.17 - செவ்வாய் - ஆங்கிலம் முதல் தாள்
16.03.17 - வியாழன் - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.17- திங்கள் - கணிதம்
23.03.17 - வியாழன் - அறிவியல்
28.03.17 - செவ்வாய் - சமூக அறிவியல்
30.03.17 - வியாழன் - மொழி (விருப்பத் தேர்வு)

Tuesday, December 13, 2016

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 - மேஷம் இராசி முதல் மீனம் இராசி வரை பொதுப் பலன்கள் & பரிகாரங்களும்

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

மேஷ இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி விட்டீர்கள். இப்பொழுது சனி பகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பிரமாதமாக வாரி வழங்க போகிறார். இதுநாள்வரைபட்ட கஷ்டங்கள் பறந்து ஓடி விடும். 10,11-க்குரிய சனி பகவான், 9-ல் இருப்பதால் உத்தியோகம், தொழில் சிறப்பாக அமையும். பொருளாதாரம் வளர்ச்சி பெறும். பெற்றோர் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டும், உதவியும் கிடைக்கும். வழக்கில் வெற்றி தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இத்தனை நாள் இருந்த அலைச்சல் தீரும். இனி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை உயர்ந்து நிற்க்கும். 11-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி தொழில் அமோகமாக இருக்கும். 6-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்னேற்றம் நன்றாக தரும். ஓரளவு கடன் தொல்லை அகலும். அதேநேரம் புதிய கடன் வாங்கச் செய்யும். ஆகவே கடன் விஷயத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கிய சனி பதவி, அந்தஸ்து வாரி வழங்கும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு செந்தூரம் வழங்கி வணங்குங்கள். செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்குங்கள்.

ஸ்ரீ சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.

ரிஷப இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு இது அஷ்டம சனி.அய்யோ சனி 8-ம் இடத்திற்கு வந்து விட்டதே? என்று பயப்பட வேண்டாம். ரிஷப இராசிக்கு சனி யோககாரகன். அஷ்டம சனியாக வந்தாலும் நிச்சயம் கெடுக்க மாட்டான். ரிஷப இராசிக்கு சனி தர்ம-கர்மாதிபதி. அவன் 2-ம் இடத்தை பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், குழப்பங்கள் தீரும். திருமணம் தடைபட்டு இருந்தால் இனி வீட்டில் மேள சத்தம்தான். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால், தெய்வ தரிசனம் அதிகரிக்கும். தெய்வஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். இழுத்துக்கொண்டு இருந்த வழக்கு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சொத்து-சுகங்கள் தேடி வரும். பல நாட்களாக பிடித்து வந்த நோய், நொடிகள் நீங்கி நலம் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழில் ஸ்தானத்திற்கு 8-ம் இடத்தை சனி நோக்குவதால், புதிய தொழில் துவங்குவீர்கள். தொழிலில் நண்பர்களையும் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் உஷாராக இருங்கள். காரணம், 7-ம் இடத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் உள்ளார். ஆனாலும் பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாக்கும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

சனிக்கிழமையில் சனிபகவான் சந்நதியில் எள் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறமோ, அல்லது கருப்பு நிறத்திலோ ஆடை அணியுங்கள். காக்கைக்கு எள் கலந்த சாதத்தை சனி ஓரையில் வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்

மிதுன இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரையில் 6-ம் இடத்தில் இருந்த சனி பகவான், இப்போது 7-ம் இடத்திற்கு வந்திருக்கிறார். உங்கள் இராசிக்கு 9-க்குரிய சனி, 7-ல் வந்திருப்பது நன்மையே தரும். பொதுவாக பாக்கியாதிபதி, சப்தமஸ்தானத்திற்கு வந்தால் எப்பேர்பட்ட பிரச்னையாக இருந்தாலும் தீர்ந்து விடும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். கல்வியால் நல்ல யோகம் உண்டு. உயர்கல்வி அமையும். அடமானத்தில் இருந்த பொருட்கள் கைக்கு வந்து விடும். புதிய வாகனம் வாங்கக்கூடிய சாதகமான நேரம் இது. ஆனாலும், ஜென்ம இராசியை சனி நோக்குவதால் அலைச்சல் அதிகரிக்கும். காரணம், தொழில், வேலை என்று புதிதாக அமைத்து தந்துவிடுவார் சனிபகவான். அதனால் அப்படிதான் இருக்கும். அதோடு சற்று டென்ஷனும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாட்களாக குடும்பத்தினர் கேட்டு வந்ததை வாங்கி தரும் யோகம் வந்து விட்டதால் அதை பூர்த்தி செய்வீர்கள். திருமணம் ஆனவர்கள் மனைவியால் நன்மை அடைவார்கள். பொதுவாக, சப்தம சனி சாதகம் செய்யும். சாகசமும் செய்ய வைக்கும். சோதனைகள் நீங்கி சாதனை படைப்பீர்கள்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

சோமவாரத்தில் (திங்கள்கிழமை) சோமேஷ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழை முதியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
**************

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 - மேஷம்  இராசி முதல் மீனம் இராசி வரை பொதுப் பலன்கள் &  பரிகாரங்களும்  விரிவாக பார்க்க வாருங்கள் :  சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017

Monday, December 12, 2016

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்

திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவில் நாள்தோறும் காலையில் உமையாளுடன் சந்திரசேகரரும், மாலையில் பஞ்ச மூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் வீதிஉலா வந்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள்
5-ம் நாள் இரவு வெள்ளி ரி‌ஷப வாகனத்திலும், 6-ம் நாள் வெள்ளித் தேரிலும், 7-ம் நாள் மகா ரதத்திலும் அருணாசலேஸ்வரர் அபித குஜாம்பாளுடன் பக்தர்கள் வெள்ளத்தில் எழுந்தருளினார். மகாரதம் உள்பட 5 தேர்களையும் பக்தர்கள் மாட வீதிகளில் வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தியுடன் முழங்கிய லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவில் தேர்கள் அசைந்தபடி பவனி வந்தன.

தீப விழாவின் உச்சகட்டமாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌ஷம் முழங்கி தீபத்தை தரிசித்தனர்.


Sunday, December 11, 2016

மும்பை டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ரன் வித்தியாசத்தில் தொடரை வென்றது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 631 ரன் குவித்தது. கேப்டன் வீராட்கோலி இரட்டை சதமும் (235 ரன்), முரளிவிஜய் (136), ஜெயந்த்யாதவ் (104) ஆகியோர் சதமும் அடித்தனர். அதில் ரஷீத் 4 விக்கெட் கைப்பற்றினார்.

மும்பை டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது
மும்பை டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது
231 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் என்ற மோசமான நிலையில் இருந்தது. ஜோரூட் 77 ரன் எடுத்தார். பேர்ஸ்டோவ் 50 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இன்று (திங்கட்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 49 ரன் தேவை. கைவசம் 4 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. இங்கிலாந்தின் எஞ்சிய 4 விக்கெட்டை எளிதில் கைப்பற்றினால் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்திய அணி பந்துவீச்சை தொடர்ந்தது.

அஸ்வினின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி தொடர்ந்து திணறியது.

நன்றாக ஆடி வந்த போஸ்டோவ் 51 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அதை தொடர்ந்து வோக்ஸ் 107, ஆதில் ரஷித் (2), ஆண்டர்சன் (2) ஆகியோரின் விக்கெட்டையும் அஸ்வின் கைப்பற்றி முத்திரை பதித்தார்.

இங்கிலாந்து அணி 55.3 ஓவர்களில் 195 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 36 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின் 55 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்ட் முதல் இன்னிங்சில் அவர் 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். ஜடேஜாவுக்கு 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், ஜெயந்த் யாதவ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த வெற்றி மூலம் வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 246 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று இருந்தது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

மும்பை டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இந்தியா தொடரை வென்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

Wednesday, December 7, 2016

ஜெயலலிதா சமாதியில் அணையா விளக்குடன் நினைவிடம் அமைக்கப்படுகிறது அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 24 தேதி திறக்க தமிழக அரசு திட்டம்

அணையா விளக்குடன் ஜெயலலிதா சமாதியில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி திறக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சமாதி : 

மறைந்த தமிழக முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்.சமாதிக்கு பின்புறம் சுமார் 40 அடி தொலைவில் ஜெயலலிதாவின் சமாதி அமைந்துள்ளது. அவரது சமாதியை சுற்றி தற்காலிக இரும்பு தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த இடத்தில் கிரானைட் கற்களை கொண்டு சமாதி கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி விட்டன.

ஜெயலலிதா சமாதியில் அணையா விளக்குடன் நினைவிடம் அமைக்கப்படுகிறது
ஜெயலலிதா சமாதியில் அணையா விளக்குடன் நினைவிடம் அமைக்கப்படுகிறது
சமாதி கட்டுவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அளவு எடுத்தனர். வெகுவிரைவில் ஜெயலலிதாவின் சமாதி கட்டி முடிக்கப்படும் என்று தெரிகிறது. சமாதி அமைக்கப்படும் கற்களில் ஜெயலலிதா பிறந்த தேதி மற்றும் மறைந்த நாள் இடம் பெறும். அவருடைய தாரக மந்திரமான, ‘மக்களால் நான். மக்களுக்காகவே நான்’ என்ற வாசகமும் பொறிக்கப்பட உள்ளது.

அதிகாரி தகவல் :

ஜெயலலிதாவின் சமாதி கட்டும் பணி முடிவடைந்தவுடன், அவரது அடைமொழியான ‘அம்மா’ பெயரில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடத்தில் இருப்பது போன்று அணையா விளக்குடன் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது. 3 மாதிரி வரைப்படங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

கடலோர பாதுகாப்பு குழுமம் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். நினைவிடத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலையும் அமைக்கப்படும். அவருடைய வாழ்க்கை குறிப்பு, சாதனை திட்டங்களும் கல்வெட்டில் பொறிக்கப்படும். நினைவு தூணும் நிறுவப்படும்.

ஜெயலலிதா பிறந்தநாளில் திறக்க தமிழக அரசு திட்டம் :

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி அன்று நினைவிடத்தை திறக்கும் வகையில் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். தற்போது ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்

ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக அவரது உட லுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், டெல்லி மேல்-சபை தலைவர் குலாம் நபி ஆசாத், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள்.

தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி., தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த், அவரது மனைவி பிரேமலதா, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஜி.ராமகிருஷ்ணன் (மார்க். கம்யூ), முத்தரசன் (இந்திய. கம்யூ.), விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள்.

ரஜினிகாந்த், விஜய், சிவகுமார், நாசர், விஷால், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், வடிவேலு, உதயநிதி, சரோஜாதேவி, நயன்தாரா, குஷ்பு, கவுதமி, சிம்ரன் உள்பட ஏராளமான திரை உலகினர் நேரில் சென்று ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்

ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. பலர் கண்ணீர் வடித்தனர். ஏராளமான பெண்களும், தொண்டர்களும் கதறி அழுதனர். முக்கிய தலைவர்களும், பிரமுகர்களும் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் செல்ல, பொது மக்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பெரும்பாலானோர் உள்ளே சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை.

இரவு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனவே, உள்ளே யாரும் நெருங்கமுடியவில்லை. இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் தடுப்பு கம்பி வைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏராளமானோர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். நேரம் ஆக ஆக இங்கு சென்று அஞ்சலி செலுத்துவோர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஜெயலலிதா சமாதிக்கு வரும் அ.தி.மு.க. தொண்டர்கள் பலரும் இன்று மொட்டையடித்து முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர். ஏராளமான பெண்கள் அழுது அஞ்சலி செலுத்தினார்கள்.

Friday, December 2, 2016

ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் அவசியம் - RBI Bank [ரிசர்வ் வங்கி] அறிவிப்பு

வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய ஜனவரி 1 முதல் ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய ஜனவரி 1 முதல் ஆதார் எண் அவசியம்

ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகள், இணையதள வங்கி சேவைகள், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட பணப்பரிமாற்றத்திற்கு பின் நம்பர் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சேவைகளுக்கு மாற்றாக ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் ஆதார் வழி மட்டுமே செய்ய முடியும். 

ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம்

ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொறுத்த வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். வங்கிகள், வாடிக்கையாளர்கள் இடையிலான கே.ஒய்.சி திட்டத்திற்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை முழுமையாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Thursday, December 1, 2016

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை டிச. 3ல் கொடியேற்றம், தீபத்திருவிழா டிச.12ல் கார்த்திகை மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது.  நாளை கொடியேற்றம் நடக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா ஒன்று. இந்தாண்டிற்கான தீபத்திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை டிச. 3ல் கொடியேற்றம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை டிச. 3ல் கொடியேற்றம்

இதையொட்டி தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. தினமும் இரவில் வெவ்வேறு வகையான வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 9-ந் தேதியும், 12-ந் தேதி மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் சார்பில் நடைபெற்று வருகிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 நாட்கள் கார்த்திகை தீப உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு துர்க்கை அம்மன் உற்சவமும், நேற்று இரவு பிடாரிஅம்மன் உற்சவமும் நடந்தது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பிடாரிஅம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து பிடாரிஅம்மன் வீதிஉலா நடந்தது. பிடாரி அம்மன் சன்னதியில் இருந்து சிம்மவாகனத்தில் புறப்பட்டு கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் உற்சவம் நடக்கிறது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா 2016 : 

திருவண்ணமலையில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 12ம் தேதி மாலையில் மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அண்ணாமலையார் கோயிலில், துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை நவம்பர் 30ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 12ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலையில் மகா தீபமும் ஏற்றப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை நவம்பர் 30ஆம் தேதி தீபத் திருவிழா காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் மாட வீதி வர உள்ளார். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 1ஆம் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம், டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

தீபத்திருவிழா கொடியேற்றம்:

டிசம்பர் 3ஆம் தேதி காலை 7.15 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 8ஆம் தேதி முற்பகலில் 63 நாயன்மார்கள் மாட வீதியுலா நடைபெறவுள்ளது.

மகா தேரோட்டம்: 

டிசம்பர் 9ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறவுள்ளது. முதலில், விநாயகர் தேரோட்டம் காலை 6.05 - 7.05 மணிக்குள் புறப்படுகிறது. பின்னர் வள்ளி தெய்வானை சமேத முருகன், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார், பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு, மற்றொரு தேர் புறப்படும். காலை 6.30 மணியளவில் தொடங்கும், மகா தேரோட்டம் நள்ளிரவு நடைபெறும்

தீபத்திருவிழா:

அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 12ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பின்னர், அன்று மாலை ஐந்து மணியளவில் தீப தரிசன மண்டபத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்கிறார். அதனைத் தொடர்நது 2,668 உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை ஆறு மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

தெப்ப உற்சவம்: 

இதையடுத்து, 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். மேலும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் டிசம்பர் 16ஆம் தேதி மாட வீதியுலா வந்ததும், கார்த்திகை தீபத் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவையொட்டி 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்து திருவண்ணாமலைக்கு 2,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

உலக பிரசத்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா வரும் டிசம்பர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதால் அதனை முன்னிட்டு இன்று காலை அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ராஜ கோபுரம் முன்பு பந்தகால் நடப்பட்டது. ஏறாளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தீபத்திருவிழா தீபத்திருவிழா கார்த்திகை தீபத்திருவிழா
அங்கு சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் கூடி ஏகாந்தம் கண்டாடுவார்
நம்ம அண்ணாமலையப்பன் பெயரை சொல்லி சொல்லி பாடி அனந்த கூத்தாடுவார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

நாளை இரவு கார்த்திகை தீப திருவிழா அம்மன் உற்சவம் தொடங்குகிறது. நாளை காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் வீதிஉலா நடக்கிறது.

1-ந் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம், 2-ந் தேதி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம் நடக்கிறது. 3-ந் தேதி காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றபடுகிறது

நாளை முதல் தினமும் சாமி வீதி உலா நடக்கிறது. 9-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 12-ந் தேதி அதிகாலை பரணி தீபம், மாலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் மின் அங்காரத்தில் ஜொலிக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா ஒன்று. இந்தாண்டிற்கான தீபத்திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.

இதையொட்டி தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. தினமும் இரவில் வெவ்வேறு வகையான வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 9-ந் தேதியும், 12-ந் தேதி மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் சார்பில் நடைபெற்று வருகிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 நாட்கள் கார்த்திகை தீப உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு துர்க்கை அம்மன் உற்சவமும், நேற்று இரவு பிடாரிஅம்மன் உற்சவமும் நடந்தது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பிடாரிஅம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து பிடாரிஅம்மன் வீதிஉலா நடந்தது. பிடாரி அம்மன் சன்னதியில் இருந்து சிம்மவாகனத்தில் புறப்பட்டு கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் உற்சவம் நடக்கிறது.

தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட உள்ளன. 16 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க படுகின்றன. மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டுமென அறிவுறுத்தபட்டுள்ளது.

பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.