Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Tuesday, August 18, 2015

சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 17 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணி கிடைத்தது

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 54 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 17 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணி கிடைத்தது.

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு வகையான மத்திய, மாநில அரசு பணிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2014-15 சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் கலந்துகொள்ள பல மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நேர்முக தேர்விற்கு மனிதநேய மையத்தின் சார்பில் பங்கேற்ற மாணவ-மாணவிகளில் 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 17 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணி கிடைத்தது

அதில் 54 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள நபர்களுக்கு பணி ஒதுக்கீடு நிலுவையில் உள்ளது. ஐ.எஸ்.மெர்சி ரம்யா, எம்.என்.ஹரேந்திர பிரசாத், கே.பாலகுரு, கே.லட்சுமி பிரியா, எஸ்.புவனேஷ்வரி, எஸ்.அருண்ராஜ், எஸ்.ஹரிஷ், டி.பூபாலன், ஆர்.சஜ்ஜன், ஜே.ரீபா, ஆர்.ராஜகணபதி, பி.பிரியங்கா, ஏ.தமீம் அன்சாரியா, வி.விக்னேஷ்வரி, பி.விஜய் பாஸ்கர் ரெட்டி, ஏ.விக்ரந்த் ராஜா மற்றும் சி.வான்மதி ஆகிய 17 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணி கிடைத்துள்ளது.

ஒருவர் ஐ.எப்.எஸ்., 7 பேர் ஐ.பி.எஸ்., 2 பேர் ஐ.ஏ. மற்றும் ஏ.எஸ்., 12 பேர் ஐ.ஆர்.எஸ். (சி அண்டு சி.இ.), 5 பேர் ஐ.ஆர்.எஸ். (ஐ.டி.), 4 பேர் ஐ.ஆர்.ஏ.எஸ்., ஒருவர் ஐ.பி.ஓ.எஸ், ஒருவர் ஐ.ஆர்.டி.எஸ்., ஒருவர் ஐ.ஐ.எஸ்., ஒருவர் ஐ.சி.எல்.எஸ், 2 பேர் ஏ.எப்.எச்.கியூ ஆகிய பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் மனிதநேய ஐ.ஏ.எஸ். கல்வியகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment