Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label அனைத்து. Show all posts
Showing posts with label அனைத்து. Show all posts

Friday, December 2, 2016

ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் அவசியம் - RBI Bank [ரிசர்வ் வங்கி] அறிவிப்பு

வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய ஜனவரி 1 முதல் ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய ஜனவரி 1 முதல் ஆதார் எண் அவசியம்

ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகள், இணையதள வங்கி சேவைகள், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட பணப்பரிமாற்றத்திற்கு பின் நம்பர் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சேவைகளுக்கு மாற்றாக ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் ஆதார் வழி மட்டுமே செய்ய முடியும். 

ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம்

ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொறுத்த வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். வங்கிகள், வாடிக்கையாளர்கள் இடையிலான கே.ஒய்.சி திட்டத்திற்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை முழுமையாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Saturday, June 6, 2015

அனைத்து வங்கிகளிலும் குறை தீர்ப்பாயத்தை (ஆம்புட்ஸ்மேன்) அமைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது

வங்கி வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்த்து அவர் களுக்கு தரமான சேவை அளிப்பதற்காக அனைத்து வங்கிகளிலும் குறை தீர்ப்பாயத்தை (ஆம்புட்ஸ்மேன்) அமைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் இந்த குறைதீர்ப்பாயம் செயல்படத் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பணப்பரிவர்த்தனை, கடன்கள் பெறுதல் மற்றும் திருப்பிச் செலுத்தும் போது ஏற்படும் சிக்கல்கள், கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துதலில் சேவை குறைபாடுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வருகின்றன.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட வங்கி மேலாளர்களிடம் புகார் தெரிவித்தாலும் அவற்றின் மீது அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், வாடிக் கையாளர்கள் பாதிப்படைகின்றனர்.

(ஆம்புட்ஸ்மேன்) அமைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது :

சென்னை ரிசர்வ் வங்கியில் உள்ள வங்கி குறைதீர்ப்பாய அலுவலக அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஆம்புட்ஸ்மேன்
ஆம்புட்ஸ்மேன்


வங்கி சேவையில் ஏதேனும் குறைபாடுகள், பிரச்சினைகள் ஏற்பட்டால் அதுகுறித்து வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர், மண்டல மேலாளர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு காணவில்லை என்றால் அடுத்த கட்டமாக வாடிக்கையாளர்கள் வங்கி குறைதீர்ப்பாயத்தில் புகார் அளிக்கலாம்.

தற்போது இந்த வங்கி குறைதீர்ப்பாயம் ரிசர்வ் வங்கியில் மட்டுமே செயல்படுவதால் அனைத்துப் புகார்களும் இங்கு வந்து குவிகின்றன. இதனால், இங்குள்ள ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. இதன் காரணமாக வாடிக்கை யாளர்களின் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண முடியாத நிலை ஏற்படுகிறது.

இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விதமாக வங்கி களுக்குள்ளேயே குறைதீர்ப் பாயத்தை அமைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அனைத்து பொதுத்துறை, தனி யார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் இத்தீர்ப்பாயம் அமைக்கப்படும். இந்த அதிகாரி கள் பெரும்பாலும் வங்கிகளுக் குத் தொடர்பில்லா பிற துறை களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள். வரும் ஜூலை மாதம் முதல் இக்குறை தீர்ப்பாயம் செயல்படத் தொடங் கும் என தெரிகிறது.’’ இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்