Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label கர்ப்பிணி. Show all posts
Showing posts with label கர்ப்பிணி. Show all posts

Friday, November 25, 2016

கர்ப்பிணிகளின் பெண்களின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள்?

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள் :

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நம் நாட்டில் குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும். 

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள்
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள்

இந்த அறிகுறிகள் எல்லாம் அனுபவமிக்க பல பெண்கள் கூறியவை. மேலும் இந்த அறிகுறிகளைக் கொண்டு கணித்தப்படியே பல பெண்களுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இங்கு ஒரு பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

அறிகுறி #1:

கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே, அவர்களின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என அறியலாம். அதில் கர்ப்பிணிகளின் வயிறு கீழே இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

அறிகுறி #2:

 கர்ப்ப காலத்தில் பெண்களின் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் இருக்கும். அதில் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை. அதுவே ஒருவித மேகமூட்டமான வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் பெண் குழந்தை என்று அர்த்தம்.

அறிகுறி #3:

கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் மற்றும் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். அதில் முகத்தில் பருக்கள் அதிகம் வந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

அறிகுறி #4:

கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்ப மார்பகங்கள் பெரிதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இடது மார்பகங்கள் தான் பெரிதாகும். ஆனால் ஆண் குழந்தையைச் சுமக்கும் பெண்களுக்கு இடது மார்பகத்தை விட, வலது மார்பகம் பெரிதாகும்

அறிகுறி #5:

கர்ப்ப காலத்தில் பாதங்கள் எப்போதும் மிகவும் குளிர்ச்சியுடன் இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்

அறிகுறி #6:

கர்ப்ப காலத்தில் பரிசோதனை செய்யும் போது, மருத்துவர்கள் குழந்தையின் இதயத் துடிப்பையும் அளவிடுவார்கள். அப்போது குழந்தையின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்தித்திகு 140 முறை துடித்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

அறிகுறி #7:

வயிற்றில் ஆண் குழந்தை வளர்ந்த்ல், கர்ப்ப காலத்தில் தலைமுடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதுவும் சாதாரண நிலையை விட சற்று அதிகமாகவே முடியின் வளர்ச்சி இருக்கும்

கர்ப்பிணிகளின் பெண்களின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை
கர்ப்பிணிகளின் பெண்களின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை
அறிகுறி #8:

ஆண் குழந்தை வயிற்றில் வளர்வதாக இருந்தால், கர்ப்பிணிகளுககு புளிப்பான உணவுகள் அல்லது உப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்குமாம்

அறிகுறி #9:

கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமான சோர்வை உணரக்கூடும். இந்நிலையில் தூங்கும் போது, எப்போதும் இடது பக்கமாக தூங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்

அறிகுறி #10:

ஆண் குழந்தை வயிற்றில் வளர்வதாக இருந்தால், கைகளில் வறட்சிகள் மற்றும் வெடிப்புக்கள் அதிகம் வரும்.

அறிகுறி #11:

பொதுவாக கர்ப்ப காலத்தில் காலை வேளையில் பெண்கள் வாந்தி அல்லது குமட்டல் உணர்வால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் இம்மாதிரியான அறிகுறி ஏதும் இல்லாமல் இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

அறிகுறி #12:

கர்ப்ப காலத்தில் வயிறு வட்டமாகவும், வயிறு மட்டும் பெரியதாகவும் இருக்கும். இப்படி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

Thursday, October 20, 2016

கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் நடக்க எளிய வழிமுறைகள்?

சுகப்பிரசவத்தின் மூன்று கட்டங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கர்ப்பம் என்பது ஒரு தம்பதியின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான கட்டமாகும். பிறக்க போகும் குழந்தையை எதிர்ப்பார்க்கும் தாய்மார்களுக்கு பிரசவ நேரம் நெருங்க நெருங்க, உணர்ச்சியும் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். இது இயல்பான உணர்வே. மகப்பேறு மருத்துவர்களின் படி, முழுமையான ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முழுதாக 9 மாதங்கள் தேவைப்படும். இந்த ஒன்பது மாதங்களில் குழந்தையை எதிர்ப்பார்க்கும் தாயும் அந்த குடும்பமும் பல சந்தோஷமான மற்றும் சோகமான தருணங்களை சந்திக்க வேண்டி வரும். ஆனால் பிரசவம் என வந்து விட்டால், அது தான் மிகவும் வலிமிக்கதாகும்.

கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் நடக்க எளிய வழிமுறைகள்?
கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் நடக்க எளிய வழிமுறைகள்?
பிரவத்திற்கான கட்டங்கள் சில நாட்கள் மட்டுமே. சில சமயம் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இன்னும் சில அதிர்ஷ்டசாலிகளுக்கு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். இயற்கையான முறையில் சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களுக்கு, பிரசவத்திற்கான கட்டம் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஆனால் அதன் முடிவில் விலை மதிப்பில்லாதா அந்த பச்சிளம் குழந்தையை கையில் தூக்கும் போது அனைத்து வலியும் மறந்து சந்தோஷ வெள்ளத்தில் மிதந்திடுவர்.

யாருக்கெல்லாம் சுகப்பிரசவம் நிகழும்?

பெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும் சுகப்பிரசவம் நிகழும். ரொம்பவும் குள்ளமாக - அதாவது, 145 செ.மீக்கும் குறைவாக - உள்ள பெண்களுக்கு மட்டும்  சுகப்பிரசவம் நிகழும் எனக் காத்திருக்கக் கூடாது என்கிறது மருத்துவ அறிவியல். போலியோ தாக்கியவர்கள், இடுப்பெலும்பில் பாதிப்புள்ளவர்கள்,  முதுகெலும்பு வளைந்து, கூன் விழுந்தவர்களுக்கும் சுகப்பிரசவம் அனுமதிக்கப்படுவதில்லை. சாதாரணமாக ரத்த அழுத்தம் 120/80 என்றிருந்தால்,  சிலருக்கு பிரசவத்தின் போது அது 160/100 அல்லது 160/120 என எக்குத் தப்பாக எகிறும்.  அதன் விளைவாக அவர்களுக்கு வலிப்பு வரலாம், குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறக்கலாம் என்பதால், அவர்களுக்கும் சுகப்பிரசவம்  அனுமதிக்கப்படுவதில்லை.அளவுக்கதிக குண்டாக இருந்தாலும்  - அதாவது 100 கிலோ, 120 கிலோ எடை இருக்கும் பெண்களுக்கும் - சுகப்பிரசவம்  நிகழும் வாய்ப்புகள் குறைவு. 

அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்ன காரணம்?

சிசேரியன் அதிகரிக்க மருத்துவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. அந்தக் காலத்தில் நமது அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியில் அரைத்தார்கள்.  கிணற்றில் தண்ணீர் இறைத்தார்கள். குழாயில் தண்ணீர் அடித்து நிரப்பினார்கள். இன்றைய பெண்களுக்கு எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் வந்து  விட்டதால் உடலுழைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. வேலைக்குச் செல்கிற பெண்களும் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை  பார்க்கிறார்கள். அந்த வேலையிலேயே களைத்து விடுகிறார்கள். உடலியக்கமே இருப்பதில்லை. 

கிராமங்களில் பிரசவ நாள் வரை எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நகர வாழ்க்கையில், கர்ப்பம் என்பதை ஏதோ ஒரு நோய்  மாதிரிப் பார்க்கிறார்கள். நின்றால் ஆகாது... நடந்தால் ஆகாது... இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். உடல் நோகாமல் அப்படியே ஒரு பொம்மை மாதிரி  இருக்கிறது,உண்மையில் கர்ப்பம் தரித்த 4வது மாதத்தில் இருந்தே நமது உடல் சுகப்பிரசவத்துக்காக தயாராகத் தொடங்கும். இடுப்பெலும்பு விரிய  ஆரம்பிக்கும். 

பிரசவ நேரம் நெருங்கியதும், குழந்தையின் தலை இறங்க, இறங்க, கர்ப்பப்பை வாய் அழுத்தப்பட்டு, ‘பிராஸ்டோகிளான்டின்’ எனப்படுகிற ஹார்மோன்  சுரக்க ஆரம்பித்து, வலியைத் தூண்டும், கர்ப்பப்பை சுருங்கி, விரிந்து, தலை வெளியே தள்ளப்பட்டு குழந்தை பிறக்கும். சிலருக்கு பிரசவ தேதி  நெருங்கியும் வலி வராது. அவர்களுக்கு மருந்து அல்லது மாத்திரை வைத்து வலியை வரவழைப்பதுண்டு. இடுப்பெலும்பு மற்றும் கர்ப்பப்பை வாய்  விரிவடையாத நிலையில், அவர்களுக்கு சிசேரியன்தான் செய்ய வேண்டி வரும்.

பெண்கள் சுகப்பிரசவம் நடக்க எளிய வழிமுறைகள்
பெண்கள் சுகப்பிரசவம் நடக்க எளிய வழிமுறைகள்
சிசேரியன் முறையில் பிரசவம் என்றால் சுகப்பிரசவத்தில் ஏற்படும் அளவு வலி ஏற்படுவதில்லை. அதற்கு காரணம் பிரசவத்திற்கான முறையும் கட்டங்களும் மாறுபடும். சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை பிரசவம் என்றால் கர்ப்பிணி பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். இது முதுகு தண்டு வழியாக செலுத்தப்படும். இந்த மயக்க மருந்து உடலின் கீழ் பகுதியை மரத்து போக செய்துவிடும். அதன் பின் 15 நிமிடங்களுக்குள் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை வெளியே எடுத்து விட வேண்டும்.

சுகப்பிரசவத்தில் ஒரு கர்ப்பிணி பெண் கடக்க வேண்டிய மூன்று கட்டங்களை அவர் அறியாமல் இருந்தால், இந்த கட்டுரை அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். பிரசவ வலிக்கான அறிகுறி மற்றும் அதன் நீளத்தைப் பற்றி தாயாகப் போகும் பெண்கள் மேலும் படித்து தெரிந்து கொள்ளவும்.

பிரசவத்திற்கான அறிகுறி:

கருப்பையில் அழுத்தம் அதிகரிக்கும் போது, ஆற்றல் திறன்களில் மாற்றம் ஏற்பட்டு இரத்தம் கலந்த சளி வெளியேறினால், கருவில் உள்ள குழந்தை வெளியேறுவதற்கான நேரம் இது. சுருக்கங்களின் நேரத்தை குறித்துக் கொள்வதும் மிகவும் முக்கியமாகும். 

பிரசவத்தை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம்:

பிரசவத்தின் முதல் கட்டம் :

பிரசவத்தின் முதல் கட்டம் என்பது பிரசவத்தின் தொடக்கமாகும். இந்த கட்டத்தில் கருப்பை வாய் முழுமையாக விரிவாகும். பிரசவத்தின் முதல் கட்டத்தை மேலும் மூன்று கட்டங்களாக பிரிக்கலாம்: ஆரம்ப பிரசவம், தீவிர பிரசவம், இடைநிலை பிரசவம்.

ஆரம்ப பிரசவம் :

பிரசவ கட்டங்களில் மிகவும் வலிமிக்கதாக இருப்பது இந்த கட்டம் தான். இந்த நேரத்தில் தான் கருப்பை வாய் சன்னமானதாக மாறி, விரிவடையும். கருப்பை வாய் குறைந்தது 3-4 சென்டிமீட்டர் வரை விரிவடைய வேண்டும். ஆரம்ப பிரசவ கட்டம் என்பது சில வாரங்கள், நாட்கள் மற்றும் சில மணி நேரங்கள் வரை நீடிக்கலாம்.

தீவிர பிரசவம் :

பிரசவத்தின் இந்த கட்டத்தில், சுருக்கமும் வலியும் தீவிரமடையும். கருப்பை வாய் 10 சென்டிமீட்டருக்கு விரிவடையும்.

இடைநிலை பிரசவம் :

இடைநிலை பிரசவ கட்டத்தில், சுருக்கங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும். இது 2-3 நிமிடங்களுக்குள் நடந்து முடியும். ஒவ்வொரு கட்டத்திலும், வலியும் சுருக்கங்களும் தலா 90 நொடிகள் வரை நீடிக்கும்.

பிரசவத்தின் இரண்டாம் கட்டம் :

பெரும்பாலான தாய்மார்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் கட்டம் தான் இது. இந்த கட்டத்தில், கருப்பை வாய் முழுமையாக விரிவடைந்து விடும். கருப்பையில் இருந்து குழந்தை வெளியே வருவதற்கு தயாராகிவிடும். பிரசவத்தின் இந்த கட்டத்தில் உள்ள பெண்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும், வலியைப் பொறுத்துக் கொண்டும் இருக்க வேண்டும். (குழந்தையின் தலை பெண்ணுறுப்பில் இருந்து வர தொடங்கியவுடன் அந்த பெண்ணிற்கு அவளின் கருப்பையில் லேசான எரிச்சலும் கூச்ச உணர்வும் ஏற்படும்).

பிரசவத்தின் மூன்றாம் கட்டம் :

நஞ்சுக்கொடியை பிரசவித்தல் – குழந்தையைப் பிரசவித்த பிறகு, கருப்பையில் இருந்து நஞ்சுக்கொடியையும் எடுத்தாக வேண்டும். பிரசவத்தின் இந்த கட்டத்தை சிலர் “இரண்டாம் குழந்தையின் பிரசவம்” என்றும் அழைக்கின்றனர். இந்த கட்டத்தின் போது, லேசான சுருக்கங்களைப் பெண்கள் அனுபவிக்க வேண்டி வரும். கருப்பை சுவரில் இருந்து நஞ்சுக்கொடி தானாக பிரிந்து கொள்ளும். பின் பெண்ணுறுப்பின் வழியாக வெளியேறும். அதன் பின் அறுவை சிகிச்சை வாயிலாக அதனை வெட்டி நீக்கி விடுவர்.