Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label 66. Show all posts
Showing posts with label 66. Show all posts

Monday, May 11, 2015

அரசு கல்லூரிகளில் 66 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது

66 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 66 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Thiruvalluvar University
Thiruvalluvar University


விளம்பர எண்: 426-432/26/04/2015

தேதி: 26-04-2015


பணி: உதவி பேராசிரியர்


துறைவாரியான காலியிடங்கள் விவரம்:



1. தமிழ் - 13
2. ஆங்கிலம் - 18
3. கணிதம் - 11
4. இயற்பியல் - 02
5. கணினி அறிவியல் - 11
6. வணிகவியல் - 10
7. சந்தையியல் நிர்வாகம் - 01

சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6000.

தகுதி: தமிழ், சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் மற்றும் NET அல்லது SLET, SET, JRF, Ph.D முடித்திருக்க வேண்டும்.

பணியிடம்: வேலூர், தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.thiruvalluvaruniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.