Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label ATM. Show all posts
Showing posts with label ATM. Show all posts

Tuesday, November 8, 2016

ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது? எவ்வளவு மாற்ற முடியும்? நீங்களே வங்கிக்கு போக வேண்டுமா? : ரிசர்வ் வங்கியின் விரிவான விளக்கத்தை பாருங்கள்:

ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இவை. 

சென்னை: கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இனி உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது என யோசிக்கிறீர்களா? அல்லது மாற்றுவதற்கு வங்கிக்கு செல்லப் போகிறீர்களா? 

ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது?
ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது?
ரிசர்வ் வங்கியின் விரிவான விளக்கத்தை பாருங்கள்: 

  • கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழிக்கவே ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 


  • மத்திய அரசின் அறிவிப்பால் இனி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாதவையாகிவிட்டன. அதே நேரத்தில் உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான பணத்தை புதிய ரூ 500, ரூ 2,000 மற்றும் இதர ரூபாய் நோட்டுகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 


  • உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தலைம அஞ்சலகம் அல்லது கிளை அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான இதர ரூபாய் நோட்டுகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.


  • உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தலைம அஞ்சலகம் அல்லது கிளை அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். 


  • உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான இதர ரூபாய் நோட்டுகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.


  • உங்களிடம் உள்ள அனைத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை உடனே மாற்றிவிட முடியாது. அதிகபட்சமாக ரூ4,000 வரைதான் உங்களால் ரொக்கமாக மாற்ற முடியும். ரூ4,000க்கு மேல் மாற்ற வேண்டும் எனில் அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.


  • உங்களிடம் உள்ள அனைத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை உடனே மாற்றிவிட முடியாது. அதிகபட்சமாக ரூ4,000 வரைதான் உங்களால் ரொக்கமாக மாற்ற முடியும். ரூ4,000க்கு மேல் மாற்ற வேண்டும் எனில் அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். 


  • ரூ4,000க்கு மேல் உங்களுக்கு தேவை இருப்பின் வங்கிக் கணக்குக்கு மாற்றி செக் அல்லது நெட்பேங்கிங் அல்லது கிரெடிட்டெபிட் கார்டுகள் மூலம் பயன்படுத்தலாம்.


  •  உங்களிடம் வங்கிக் கணக்கு இல்லையெனில் உரிய ஆவணங்களைக் கொடுத்து வங்கிக் கணக்கை தொடங்கலாம்.


  •  ரூ4,000 வரை பணத்தை மாற்றுவதற்கு நீங்கள் நேரடியாக உரிய அடையாள அட்டையுடன் வங்கிக்கு நேரடியாக செல்லலாம். எந்த ஒரு வங்கியின் கிளைக்கும் சென்று நீங்கள் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.


  •  நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல முடியாத நிலையில் எழுத்துப்பூர்வமான அத்தாட்சி கடிதத்தை உரிய அடையாள அட்டைகளுடன் கொடுத்தனுப்பியும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். நீங்களே நேரடியாக வங்கிக்கு சென்று பணத்தை மாற்றிக் கொள்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். 


  • ஏடிஎம்கள் இன்று இயங்காது. ஏடிஎம்கள் செயல்பட தொடங்கும் நிலையில் நவம்பர் 18-ந் தேதி வரை உங்களால் அதிகபட்சமாக ரூ2,000 மட்டுமே எடுக்க முடியும். 


  • நவம்பர் 19-ந் தேதி முதல் ஏடிஎம்களில் ரூ4,000 வரை ஒருநாளுக்கு அதிகபட்சமாக எடுக்க முடியும். வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை நீங்கள் அதிகபட்சமாக ஒருநாளைக்கு ரூ10,000 வரை மட்டுமே எடுக்க முடியும். 


  • வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ20,000 வரை மட்டுமே உங்களால் எடுக்க முடியும். நவம்பர் 24-ந் தேதிக்கு பின்னரே இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும்.


  • ஏடிஎம் மூலமாக உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ500, ரூ1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும். ரூ500, ரூ1,000 நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதி வரை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். வர்த்தக ரீதியாக வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கி ஆகியற்றில் டிசம்பர் 30-ந் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம். 


  • டிசம்பர் 30-ந் தேதிக்குள் உங்களால் தவிர்க்க இயலாத காரணங்களால் மாற்ற முடியாமல் போனால் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் உரிய ஆவணங்களை காண்பித்து மார்ச் 31-ந் தேதி வரையும் ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்ற முடியும்.


  • நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் உரிய ஆவணங்களுடன் அத்தாட்சி கடிதம் ஒன்றை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ அலுவலக பணியாளர்களிடமோ கொடுத்து பணத்தை மாற்ற முடியும். 


  • நீங்கள் சுற்றுலா பயணியாக இருந்தால் விமான நிலையங்களில் ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்ற முடியும். அரசு மருத்துவமனைகளில் கட்டண்ம செலுத்தவும், அரசு பேருந்து டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் ஆகியவற்றை பெறவும் நள்ளிரவு முதல் 72 மணிநேரம் வரை ரூ500, ரூ1,000 நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும். 


  • ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர், ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, பான் கார்டு, அரசு அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை ஆகியவைதான் அடையாள அட்டைகளாக ஏற்கப்படும். 


கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.in, www.finmin.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம் 

பணப் பரிமாற்றம் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள எண்: 022 22602201/022 22602944.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி?

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி?

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகிறது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகிறது.

இந்தியா முழுவதும் நேற்று இரவு திடீரென 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவைகளை நாளை (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 30-ந் தேதிக்குள் தங்களது வங்கிகள், தாங்கள் கணக்கு வைத்திருக்கும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யலாம்.

அதேபோல ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டையை காண்பித்து மாற்றிக்கொள்ளவும் முடியும். 24-ந் தேதி வரை ஒருவர் ஒருசமயத்தில் அதிகபட்சம் ரூ.4 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும்.

டிசம்பர் 30-ந் தேதிக்குள் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாதவர்கள் ரிசர்வ் வங்கியில் ஒரு பிரகடனம் எழுதிக்கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். அதற்கு மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து இந்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியா நேர்மையான, ஊழலற்ற நாடாக விளங்குவதற்காக அரசு புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி 10-ந் தேதி (நாளை) முதல் இவைகளை வெளியிடுகிறது. இந்த நடவடிக்கை நாட்டின் நிதி மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு உதவும்.

உங்களை வேறு யாரும் கள்ளத்தனமான பணத்தை மாற்றிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காதீர்கள். இரவுக்கு பின்னர் ஒருவர் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்குவது அவர்களது பொறுப்பு தான். புதிய 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டை படமும், புதிய 2,000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் படமும் பொறிக்கப்பட்டு இருக்கும். கண் பார்வையற்றவர்களும் இந்த நோட்டுகளை அடையாளம் காணும் வகையில் அடையாள குறியீடுகள் இருக்கும்.

இந்த மாற்றங்களின் மூலம் இந்தியாவில் 1,000 ரூபாய் நோட்டுகள் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்கெல்லாம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லும்?

ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனை உள்ள சில இடங்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இரு தினங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:-

அரசு மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை வாங்கி கொள்வார்கள்.

அஞ்சலகங்களிலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை 100 நோட்டுகளாக மாற்றலாம்.

நவம்பர் 11-ம் தேதி வரை பெட்ரோல் பங்குகள் ரயில் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டு செல்லும்

விமான நிலையங்களில் உள்ள டிக்கெட் மையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 11-ம் தேதி வரை செல்லும் 

ரயில் டிக்கெட் புக்கிங், அரசு பேருந்து மையம் ஆகியவற்றில் மாற்றிக் கொள்ளலாம்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பால் நிலையங்களில் நோட்டுகள் பெறப்படும்.


பிரதமர் அறிவிப்பு எதிரொலி: ஏ.டி.எம். மையங்களில் அலைமோதும் கூட்டம்

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், வங்கிகளில் டிசம்பர் 30-ம் தேதிக்குள் டெபாசிட் செய்து வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனைகளில் மட்டும் 11ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நோட்டுக்கள் 10-ம் தேதி புழக்கதிற்கு வருகிறது. இந்த நடைமுறைகள் அமலுக்கு வருவதையொட்டி, நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 9, 10) ஏ.டி.எம். மையங்கள் செயல்படாது. வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ன. 

இந்த முடிவு யாருக்கும் தெரியாது என்றும், இது மிகவும் சாதகமான நடவடிக்கை என்று பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் புதிய எண்களுடன் கூடிய 10, 20, 100 மற்றும் 1000 நோட்டுக்கள் கூடுதலாக அச்சிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால் பொதுமக்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்கள் நாளை காலையில் அத்யாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். சிறிய பெட்டிக்கடை, பால் கடை முதல் பலகாரக் கடை வரையில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதை தவிர்ப்பார்கள். எனவே, 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக பொதுமக்கள் ஏடிஎம் மையங்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர். இதனால், ஏடிஎம் மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த அறிவிப்பினால் வங்கிகள் விடுமுறை : 

வங்கிகள், ஏடிஎம் இயந்திரங்கள் மூடல்.. பண பரிமாற்றத்தில் அதிரடி கட்டுப்பாட்டு.. ஆர்பிஐ அறிவிப்பு..! நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. ஏடிஎம் இயந்திரமும் இயங்காது. பண பிரமாற்றங்கள் அதிகளவில் முடக்கம்

மத்திய அரசு இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என நவம்பர் 8ஆம் தேதி இரவு அறிவித்த உள்ளது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் அதிர்ந்துபோய் உள்ளனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி மக்களின் அன்றாட பண புழக்கத்தில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

வங்கிகள் விடுமுறை : 

புதன்கிழமை (நவம்பர் 9ஆம் தேதி) இந்தியாவில் தனியார், பொதுத்துறை, கூட்டுறவு, கிராம மற்றும் ஊரக வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

ஏடிஎம் இயந்திரங்கள்: 

அதேபோல் ஏடிஎம் இயந்திரம், பணம் டெப்பாசிட் செய்யும் இயந்திரம் என அனைத்தும் இன்று செயல்படாது. ஆனால் இணையம் மற்றும் மொபைல் வங்கியியல் இயங்கும்.

வங்கிகளின் உள் வேலைகள் : 

வங்கிகள் இன்று ஒரு நாளுக்குள் தனது கஜானா மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் வேலைகளைச் செய்ய உள்ளது.

2,000 ரூபாய் மட்டுமே.. அதன்பின் நவம்பர் 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான காலத்திற்கு ஏடிஎம் இயந்திரங்களில் வெறும் 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் நவம்பர் 19ஆம் தேதி முதல் இந்த அளவுகோல் 4000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது

வங்கியில் பணம் எடுத்தல்: 

மேலும் வங்கி வைப்புக் கணக்கில் இருந்து வித்டிரா அளவு நவம்பர் 9ஆம் தேதி முதல் ஒரு நாளுக்கு 10,000 ரூபாயாகவும், ஒரு வாரத்திற்கு 20,000 ரூபாய் வரை மட்டுமே அனுமதி அளிக்கிறது.

ஆர்பிஐ: 

 நவம்பர் 10ஆம் தேதி முதல், கார்பரேட் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனகள், அறக்கட்டளைகள், என அனைத்துத் தரப்பினரும், தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு ரிசர்வ் வங்கி கிளையிலும் மொத்தமாக மாற்றிக்கொள்ளலாம். மாற்றப்படும் தொகை அவர்களது வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகள் மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் இருக்கும் கருப்புப் பணம் மட்டும் அல்லாமல் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை முழுமையாகக் குறைக்க முடியும்

Thursday, June 4, 2015

ஏ.டி.எம் -ல் பணம் எடுக்கும்போது, கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது?

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது, கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வதுஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோ ட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுக வேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன?
.
ஏ.டி.எம். ஃபிட் கரன்சி:
.
ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறை வு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த்தாள்க ளை லோடுசெய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளா க (ATM fit currency) மாற்றப் படுகின்றன. இந்தசெயல்பாட்டின் போதே கள்ளநோட்டுகள் பெரும் பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதி முறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறை யைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.
.
அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து வைத் திருப்பது அவசியம் . ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒரு முறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டு கள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத் திருந்தால் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.
.
எப்படி வருகிறது?:
.
எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது. Cash In Tranceit போன்ற பெரும் பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்து வருகின் றன. இவர்களின் பணி வங்கியி லிருந்து மொத்த மாகப் பணத்தை ப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.


ஏ.டி.எம்
ATM Center

.
யாரை அணுகுவது?
.
வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன் னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி. வி. கேமரா வில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களை க் காட்டுவது அவசியம். ஏனெ னில், ஏ.டி.எம். மெஷினுக்கு ள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற் குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியா னது உங்களைப் பற்றி விசாரி க்கும்போது உங்களின் மீதான நம்ப கத்தன்மையை அதிகரிக்கும்.
.
பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென் டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி. எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படு த்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப் பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படு த்திவிட்டு, நேரில் சென்று உறுதி ப்படுத்திக் கொள்ள லாம்.
.
வங்கி நடைமுறைகள்:
.
ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடை முறை என்ன என்று பார்ப்போம். ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த் தாளுட ன் வங்கியை அணுகியதும், அவர் கள் அந்த ரூபாய் கள்ள நோட்டு தானா என்று பரிசோதிப்பார்கள். அது கள்ள நோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இரு ந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன் றை தருவார்கள். உங்களிடம் பெறப் பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி. எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப் பதன் மூலமும், உங்களின் பின்புலன்க ளை விசா ரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள். இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தே கம் வந்தால் அவர் மீது வங்கி யானது சட்ட ரீதியான நடவடிக் கை எடுக்கத் தயங்காது.
.
எஃப்.ஐ.ஆர். ஃபைல்:


பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக் கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பண த்தை எடுத்து அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த் தாள்கள் கள்ள நோட்டுகளாக இருக்கும் பட்ச த்தில் மட்டுமே அவர்களின்மீது வங்கி உடனடியாக காவல் நிலையத் தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும். அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டு களாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக் கொண்டு விசாரிக்கும். தனது ஏ.டி.எம் -ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக் கிறது என்று நிரூப ணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும். வாடிக்கையாளர் களி டம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதி யில் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.
.
ஆர்.பி.ஐ.-ன் உதவி:
.
வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ள நோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும் போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்க ளுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு(Currency chest branches) சென்று உங்களின் சந்தேகத் தை நிவர்த்தி செய்து கொள்ள லாம். அதற்கு அடுத்தும் உங்க ளின் சந் தேகம் நீடித்தால்ஆர். பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண் மையானது தானா என்பதை பரிசோதித்து தெரி ந்து கொள்ளலாம். இதுதொடர் பாக மேலும் விவரங்களுக்கு, www.rbi.org.in, www.paisabolthahai.rbi.org.in என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்க ளை நாட லாம்.”