Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Tuesday, November 8, 2016

இன்று முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது : நோட்டுகளை மாற்ற மார்ச் 31 வரை அவகாசம் : பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி:  நவம்பர் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்தியாவில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில் டெல்லியிலிருந்தபடி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வழியாக திடீரென உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது இந்த அறிப்பை வெளியிட்டார்.

ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அரசு அழிக்க உள்ளதாகவும், எனவே இன்று அதாவது நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன், அந்த நோட்டுக்கள் செல்லாது எனவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், அரசு ஆஸ்பத்திரிகள், ஏர்போர்ட், ரயில் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை நோட்டுக்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது : நோட்டுகளை மாற்ற மார்ச் 31 வரை அவகாசம் : பிரதமர் மோடி அறிவிப்பு
இன்று முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது : நோட்டுகளை மாற்ற மார்ச் 31 வரை அவகாசம் : பிரதமர் மோடி அறிவிப்பு

இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே மக்கள் தங்களிடமுள்ள 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதேநேரம், சில காரணங்களால் அதற்குள் மாற்றிக்கொள்ள இயலாதவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதிக்குள் நோட்டுக்களை மாற்ற அவகாசம் தரப்படும். தக்க அடையாள அட்டைகளை காண்பித்து பணத்தை மாற்றிக்கொள்ளலாம்.

 அதற்கு பதிலாக புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 முக மதிப்பிலான நோட்டுக்களை அரசு 10ம் தேதி முதல், வங்கிகள், அஞ்சலகங்கள் மூலமாக சப்ளை செய்ய உள்ளது. இது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே கள்ள நோட்டு புழக்கத்தையும், பண பதுக்கலையும் தடுக்க முடியும் என கூறப்படுகிறது. ரூ.2000 நோட்டுக்களில் அதிநவீன லேயர்கள் இருப்பதால் செயற்கைக்கோள் மூலமாக கூட அவற்றை கண்காணித்து பதுக்கலை தடுக்க முடியும் என்று ஒரு தகவல் உலவி வரும் நிலையில் பிரதமர் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பான சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண்கள் : 

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ள பெரும் பணக்காரர்கள் மட்டுமின்றி சாதாரண மக்கள்கூட இந்த அறிவிப்பால் குழம்பி போய் உள்ளனர். தங்களிடம் உள்ள நோட்டுகளை எங்கு மாற்றுவது என்ற விழிப்புணர்வு இன்னும் மக்களிடம் சரியாக சென்றடையாத காரணத்தால் அவர்கள் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சில மையங்களில் பணம் நிரம்பியதால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்

ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக ஏற்படும் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் மாற்றுவது தொடர்பாக சந்தேகங்களுக்கு 02222 602201, 02222 602944 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச தொலைபேசி எண்கள் இன்று காலை 8 மணி முதல் 15 நாட்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இனி கருப்பு பணம், கள்ள நோட்டை ஒழிக்க அதிரடி நடவடிக்கை : 

இந்தியாவில் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் இன்று முதல் செல்லாதவையாகிவிட்டன. பழைய நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை இரவு திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய் இரவு சுமார் 8.15 மணிக்கு டிவியில் தோன்றி நாட்டு மக்களை நோக்கி உரை நிகழ்த்தினார். அப்போது, ஊழல், கருப்பு பணம், தீவிரவாதம் ஆகியவை நாட்டின் எதிரிகள் என்றும், அவற்றை வேரறுக்க தனது அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கருப்பு பணம், கள்ள நோட்டை ஒழிக்க அதிரடி நடவடிக்கை

வறுமை, ஏழ்மையை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக கூறிய மோடி, நவம்பர் 8ம் தேதி (அதாவது நேற்று) நள்ளிரவு 12 மணியோடு, தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாதவையாகிவிடும் என்று, அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 10ம் தேதி வியாழக்கிழமை முதல், டிசம்பர் 30ம் தேதிவரை, அனைத்து வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களிலும் தற்போதுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை கொடுத்துவிட்டு, அரசு புதிதாக வழங்க உள்ள ரூ.500 அல்லது ரூ.2000 நோட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் பிரதமர் அறிவித்தார். ஒருவேளை டிசம்பர் 30ம் தேதிக்குள் பணத்தை மாற்ற இயலவில்லை எனில் அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்படி நோட்டுக்களை மாற்றும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம்.

புதன்கிழமையான இன்று நாடு முழுக்க வங்கிகள், ஏடிஎம்கள் மற்றும் அஞ்சலகங்கள் செயல்படாது எனவும், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பண பரிவர்த்தனையை மக்கள் மேற்கொள்வதில் பாதிப்பு இல்லை எனவும், மோடி தெரிவித்தார். புதிய ரூ500, ரூ2000 நோட்டுகளை வங்கிகளில் சேர்க்க இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை ஒரு சில இடங்களில் மட்டும் ஏடிஎம் செயல்படாது, பெரும்பாலான பகுதிகளில் செயல்படும். பிரதமரின் இந்த அறிவிப்பால் நேற்று இரவே வங்கி ஏடிஎம்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது. ரூ.100 முக மதிப்பில் பணத்தை எடுத்துக்கொள்ளவும் மக்கள் ஆர்வம் காட்டியதால் நீண்ட கியூ காணப்பட்டது. கருப்பு பண முதலைகளை சிக்க வைக்க மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை என்று ஒரு தரப்பும், இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று மற்றொரு தரப்பும் சமூக தளங்களில் மோதிக்கொண்டுள்ளனர்.

பண நோட்டுகளை மாற்றும் போது மக்கள் கவனிக்க வேண்டியவை : ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் :

தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததும், மக்கள் பணபரிவர்த்தனை செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன் முக்கிய அம்சங்கள் இதுதான்:

*ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற வங்கிகள் 10ம் தேதி முதல் கூடுதல் நேரம் திறந்திருக்கும். 

*வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம். ரூ.4 ஆயிரத்திற்கு மேல் தொகை என்றால் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில்தான் டெபாசிட் செய்யப்படும்.

பணம் பரிவர்த்தனை செய்ய அடையாள அட்டை கட்டாயம். இன்டெர்நெட் வழியிலான பண பரிவர்த்தனைக்கு எந்த தடையுமில்லை. 

*வரும் 18ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு ரூ.2000ம் மட்டுமே வங்கியில் எடுக்க முடியும்.,19ஆம் தேதிக்கு பிறகு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வங்கியில் எடுக்கலாம். 

*அனைவரும், வங்கி கணக்கு வைத்திருப்பது அவசியமாகிறது. அப்படியானால்தான், ரூ.4000த்துக்கும் மேற்பட்ட மதிப்பில் பணத்தை மாற்றும்போது வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய முடியும்.

*நேரில் வந்து பணத்தை மாற்ற முடியாதவர்கள் அத்தாட்சி கடிதம் மூலமாக தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி பணத்தை மாற்றம் செய்துகொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. வங்கி மூலமாக பண பரிவர்த்தனைகள் நடந்தால்தான் கருப்பு பணத்தை ஒழிக்க முடியும் என்பது அரசின் நோக்கம் என கூறப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு நிதி அமைச்சகத்தின், http://finmin.nic.in/ என்ற வெப்சைட் முகவரியை பார்க்கலாம். மேலும், 02222 602201,02222 602944 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது? எவ்வளவு மாற்ற முடியும்? நீங்களே வங்கிக்கு போக வேண்டுமா? 

ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இவை. 

சென்னை: கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இனி உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது என யோசிக்கிறீர்களா? அல்லது மாற்றுவதற்கு வங்கிக்கு செல்லப் போகிறீர்களா? 

பண நோட்டுகளை மாற்றும் போது மக்கள் கவனிக்க வேண்டியவை : ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்

ரிசர்வ் வங்கியின் விரிவான விளக்கத்தை பாருங்கள்: 

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழிக்கவே ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் அறிவிப்பால் இனி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாதவையாகிவிட்டன. அதே நேரத்தில் உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான பணத்தை புதிய ரூ 500, ரூ 2,000 மற்றும் இதர ரூபாய் நோட்டுகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தலைம அஞ்சலகம் அல்லது கிளை அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான இதர ரூபாய் நோட்டுகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தலைம அஞ்சலகம் அல்லது கிளை அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். 

உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான இதர ரூபாய் நோட்டுகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

உங்களிடம் உள்ள அனைத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை உடனே மாற்றிவிட முடியாது. அதிகபட்சமாக ரூ4,000 வரைதான் உங்களால் ரொக்கமாக மாற்ற முடியும். ரூ4,000க்கு மேல் மாற்ற வேண்டும் எனில் அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.

உங்களிடம் உள்ள அனைத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை உடனே மாற்றிவிட முடியாது. அதிகபட்சமாக ரூ4,000 வரைதான் உங்களால் ரொக்கமாக மாற்ற முடியும். ரூ4,000க்கு மேல் மாற்ற வேண்டும் எனில் அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். 

ரூ4,000க்கு மேல் உங்களுக்கு தேவை இருப்பின் வங்கிக் கணக்குக்கு மாற்றி செக் அல்லது நெட்பேங்கிங் அல்லது கிரெடிட்டெபிட் கார்டுகள் மூலம் பயன்படுத்தலாம்.

உங்களிடம் வங்கிக் கணக்கு இல்லையெனில் உரிய ஆவணங்களைக் கொடுத்து வங்கிக் கணக்கை தொடங்கலாம்.

 ரூ4,000 வரை பணத்தை மாற்றுவதற்கு நீங்கள் நேரடியாக உரிய அடையாள அட்டையுடன் வங்கிக்கு நேரடியாக செல்லலாம். எந்த ஒரு வங்கியின் கிளைக்கும் சென்று நீங்கள் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

 நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல முடியாத நிலையில் எழுத்துப்பூர்வமான அத்தாட்சி கடிதத்தை உரிய அடையாள அட்டைகளுடன் கொடுத்தனுப்பியும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். நீங்களே நேரடியாக வங்கிக்கு சென்று பணத்தை மாற்றிக் கொள்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். 

ஏடிஎம்கள் இன்று இயங்காது. ஏடிஎம்கள் செயல்பட தொடங்கும் நிலையில் நவம்பர் 18-ந் தேதி வரை உங்களால் அதிகபட்சமாக ரூ2,000 மட்டுமே எடுக்க முடியும். 

நவம்பர் 19-ந் தேதி முதல் ஏடிஎம்களில் ரூ4,000 வரை ஒருநாளுக்கு அதிகபட்சமாக எடுக்க முடியும். வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை நீங்கள் அதிகபட்சமாக ஒருநாளைக்கு ரூ10,000 வரை மட்டுமே எடுக்க முடியும். 

வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ20,000 வரை மட்டுமே உங்களால் எடுக்க முடியும். நவம்பர் 24-ந் தேதிக்கு பின்னரே இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும்.

ஏடிஎம் மூலமாக உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ500, ரூ1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும். ரூ500, ரூ1,000 நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதி வரை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். வர்த்தக ரீதியாக வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கி ஆகியற்றில் டிசம்பர் 30-ந் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம். 

டிசம்பர் 30-ந் தேதிக்குள் உங்களால் தவிர்க்க இயலாத காரணங்களால் மாற்ற முடியாமல் போனால் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் உரிய ஆவணங்களை காண்பித்து மார்ச் 31-ந் தேதி வரையும் ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்ற முடியும்.

நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் உரிய ஆவணங்களுடன் அத்தாட்சி கடிதம் ஒன்றை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ அலுவலக பணியாளர்களிடமோ கொடுத்து பணத்தை மாற்ற முடியும். 

நீங்கள் சுற்றுலா பயணியாக இருந்தால் விமான நிலையங்களில் ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்ற முடியும். அரசு மருத்துவமனைகளில் கட்டண்ம செலுத்தவும், அரசு பேருந்து டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் ஆகியவற்றை பெறவும் நள்ளிரவு முதல் 72 மணிநேரம் வரை ரூ500, ரூ1,000 நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும். 

ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர், ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, பான் கார்டு, அரசு அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை ஆகியவைதான் அடையாள அட்டைகளாக ஏற்கப்படும். 

கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.in ; www.finmin.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம் 

பணப் பரிமாற்றம் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள எண்: 022 22602201/022 22602944

No comments:

Post a Comment