பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள சேவைகள் குறித்த பட்டியல் இதோ.
டிசம்பர் 15ம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டை சில சேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள மத்திய நிதியமைச்சகம் சலுகை அளித்துள்ளது. அப்படி சலுகை அளிக்கப்பட்டுள்ள சேவைகள் குறித்த விவரம்
![]() |
பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை நோட்டை எங்கெல்லாம் மாற்றலாம் |
1. டோல் கேட்டுகள் மற்றும் பெட்ரோல் பங்குகள்.
2. மத்திய, மாநில அரசுக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம்.
3. ரூ. 500 வரைக்கும் செல்போன்களில் டாப்அப் செய்து கொள்ள பயன்படுத்தலாம்.
4. நுகர்வோர் கூட்டுறவுக் கடைகளில் உரிய அடையாள அட்டைகளைக் காட்டி ரூ. 5000 வரை பொருட்களை வாங்கும்போது இந்த பழைய நோட்டுக்களைப் பயன்படுத்தலாம்.
5. மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பால் பூத்துகளில் பால் வாங்க பயன்படுத்தலாம்.
6. குடிநீர், மின்சாரக் கட்டணத்தை செலுத்த பயன்படுத்தலாம்.
7. அரசு மருத்துவமனைகள், மருந்தகங்களில் பயன்படுத்தலாம்.
8. மருத்தவர்களின் சீட்டுடன் அனைத்து மருந்துக் கடைகளிலும் மருந்து வாங்க பயன்படுத்தலாம்
9. ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள்.
10. விமான நிலையங்களில் டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம்.
11. மயானங்கள் இடுகாடுகளில் பயன்படுத்தலாம்.
12. காஸ் சிலிண்டர்களை வாங்கப் பயன்படுத்தலாம்.
13. ரயில்களில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தலாம்.
14. புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம்.
15. இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் நினைவிடங்களில் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம் (மாமல்லபுரம் போல)
16. மத்திய அரசு, மாநில அரசுகள் விதிக்கும் கட்டணங்கள், வரிகள், அபராதங்கள் உள்ளிட்டவற்றைக் கட்ட பயன்படுத்தலாம்.
17. கோர்ட் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம்.
18. அரசு நிறுவனங்கள் நடத்தும் விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க பயன்படுத்தலாம்.
19. அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கவுண்டர்களில் டிக்கெட் வாங்கப் பயன்படுத்தலாம்.
20. மத்திய, மாநில அரசு, நகராட்சி, ஊராட்சிப் பள்ளிகளில ரூ. 2000 வரை கல்விக் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம்.
![]() |
பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் மாற்றலாம் என்று உங்களுக்குத் தெரியுமா |
பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் மாற்றலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?
ஆயிரம் ரூபாய் நோட்டு இனி எந்தவொரு பரிவர்த்தனைக்கும் செல்லாது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 21 இடங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய 1000 ரூபாய் நோட்டுகளை இனி வங்கிகளைத் தவிர எங்கும் மாற்ற முடியாது என்ற சூழல் உள்ள நிலையில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் மாற்றலாம் என்று உங்களுக்குத் தெரியுமா..?
இதோ உங்களுக்கான பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் செல்லும் என்பதற்கான பட்டியல்.
மருத்துவமனை:
அரசு மருத்துவமனை, அரசு மருந்தகங்கள் போன்ற இடங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் செல்லும் போது பழைய 500 ரூபாய் செல்லும்.
மருந்தகங்கள்:
மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரை சீட்டு மற்றும் அவர்கள் வழங்கும் ஐடி படிவத்தைக் காண்பித்து பழைய 500 ரூபாய்களை மாற்றிக்கொள்ளலாம்.
டிக்கெட் கவுண்டர்கள்:
ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள், அரசு மற்றும் மாநில அரசு போக்குவரத்து கழகங்களின் டிக்கெட் கவுண்டர்கள் ஆகிய இடங்களில் பழைய 500 ரூபாய் செல்லும்.
பால் பூத்துகள்:
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பால் பூத்துகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலும்.
எரிசக்தி நிலையங்கள்:
அரசு நிறுவனங்கள் நடத்தும் பெட்ரோல், டீசல், எரிவாயு நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும்.
சுடுகாடு:
அரசு இயக்கி வரும் சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு 500 ரூபாய் செல்லும்.
விமான நிலையங்கள்:
வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு வரும் மற்றும் செல்லும் பயணிகளுக்கு 500 ரூபாய் நோட்டுகள் செல்லும்.
சுற்றுலாப் பயணிகள்:
வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் 5000 ரூபாய் வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
கூட்டுறவு கடைகள்:
கூட்டுறவு கடைகளில் நுகர்பொருள் வாங்கும் போது பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும்.
சமையல் எரிவாயு:
சமையல் எரிவாயு வாங்கும் போது பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.
ரயில் பயணம்:
ரயில் பயணங்களில் உணவுப் பொருட்கள் வாங்கும் போது பழைய 500 ரூபாய் செல்லும்.
புறநகர் ரயில் சேவை:
புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் டிக்கெட் கவுண்டர்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும்.
அருங்காட்சியகம்:
இந்திய தொல்பொருள் கழகம் இயக்கி வரும் அருங்காட்சியகம் போன்ற இடங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும்.
அரசு நிறுவனங்கள்:
மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள், வரி, அபராதம் போன்றவற்றிற்கு பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.
பயன்பாடுகள்:
மின்சாரம், தண்ணீர் போன்ற பயன்பாட்டுக் கட்டணங்கள் செலுத்தும் போது பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும். ஆனால் இது நடப்பு பில்கள் மற்றும் பழைய பில்களுக்கு மட்டுமே. முன்பணமாக்கச் செலுத்த இயலாது.
நீதி மன்றம்:
நீதி மன்றங்களில் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.
விதைகள்:
நியமிக்கப்பட்ட மையங்களில் இருந்து விதைகள் வாங்கப் பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.
பள்ளி கட்டணம்:
மத்திய, மாநில, நகராட்சி மற்றும் உள்ளூர் பள்ளி கட்டணங்கள் செலுத்த 2000 ரூபாய் வரை பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.
கல்லூரிகள்:
மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரிகள் கட்டணம் போன்றவற்றுக்கு பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.
மொபைல் ரீசர்ஜ்:
பீரிபெய்டு மொபைல் சிம் கார்டுகளின் டாப் அப் ரீசார்ஜ்கள் ரூ.500 செய்யும் போது செல்லும்.
கூட்டுறவு ஸ்டோர்கள்:
நுகர்பொருள் கூட்டுறவு ஸ்டோர்களில் 5,000 ரூபாய் வரை பழைய 500 ரூபாய்களை வழங்கி பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment