Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Friday, June 26, 2015

சென்னை இரயில்வே தொழிற்சாலையில் (ICF ACT APPRENTICE) ஆக்ட் அப்பர்டீஷ் பயிற்சி விண்ணப்ப படிவம்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு,
பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ITI முடித்த மாணவ மாணவியர் கவணத்திற்கு.

சென்னையில் உள்ள இரயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ICF ACT APPRENTICE) ஆக்ட் அப்பர்டீஷ் தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்ப
படிவம் 11-06-2015 அன்று முதல் வழங்க பட்டுவருகிறது. பயிற்சியின் பொழுது ஒவ்வொரு மாதமும் 5500ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்க படுகிறது.


சென்னை இரயில்வே ஆக்ட் அப்பர்டீஷ் பயிற்சி
சென்னை இரயில்வே ஆக்ட் அப்பர்டீஷ் பயிற்சி

விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்:

நம் தமிழக மாணவர்களுக்கு இது சம்பந்தமான விழிப்புர்ணர்வை ஏற்படுத்த
உதவுங்கள் , வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இதனை பற்றிய
விழிப்புர்ணர்வு அதிகம், அதன் காரணமாகதான் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக முழுவதும் வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்  தகுதியில்லாத போலியான மதிப்பெண்,பிறப்பு,சாதி சான்றிதழ்களை கொண்டு வயதுமுதிர்ந்த வடநாட்டு இளைஞர்களை முறைகேடாக ஐ.சி.எப், இரயில்வே, போன்ற மத்திய அரசு நிறுவத்தில் நம் மாநிலத்துக்கு உரிய இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து பலன் பெற்று வருகிறார்கள் .


அமைதி பூங்கவான தமிழகத்தில் நிலை கொண்டு விடுகிறார்கள் . இதனை தங்களால் முடிந்த அளவுக்கு நண்பர்கள் மத்தியில் ஷேர் செய்யவும் ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புர்ணர்வு தமிழக மாணவர்களிடத்தில் ஏற்படுத்த உதவுங்கள்.

விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டிய கடைசி தேதி 04-07-2015.

Thursday, June 18, 2015

உங்கள் விரல் நுனியில் சென்னை பேருந்து, ரயில் தகவல்களை தரும் ராப்ட் கைபேசி செயலி(Raft Mobile App)

எந்த பேருந்து, எந்த இடத்திற்கு போகும் என்பது தெரியாமல் குழம்புபவர்கள் நிறைய பேர் உண்டு. பேருந்து நிறுத்தத்தில் பக்கத்தில் இருப்பவர்களை கேட்டால், பெரும்பாலும், 'தெர்ல...' என்று தான் பதில் வரும். இந்த நிலையில், சென்னையில் திக்குத் தெரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ, ஒரு கைபேசி செயலி வந்திருக்கிறது.

ஐ.ஐ.டி-., மெட்ராஸ் பட்டதாரிகளான சித்தார்த், அகிலேஷ் மற்றும் கிருஷ்ணா ஆகிய மூவரும், இந்த செயலியை உருவாக்கி இருக்கின்றனர். ஐ.ஐ.டி.,யில் இயங்கிவரும் ஆராய்ச்சிப் பூங்காவின் தொழில்முனைவு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், இந்த செயலியை அவர்கள் மூவரும் உருவாக்கியிருக்கின்றனர்.
ராப்ட் (Raft) என்ற இந்த செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும், சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகள் மற்றும் உள்ளூர் ரயில்களின் வழித்தடங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ராப்ட் கைபேசி செயலி(Raft Mobile App)
ராப்ட் கைபேசி செயலி(Raft Mobile App)

'ஏற்கனவே கூகுள் மேப்ஸ் உட்பட சில செயலிகள் சென்னைவாசிகளுக்கு உதவினாலும், எங்களுடைய, 'ராப்ட்' செயலி மிக சமீபத்திய தகவல்களுடன் இயக்கப்படுகிறது என்பது முக்கியமான வித்தியாசம். 10 பேர் கொண்ட எங்கள் அணி, பல இடங்களுக்கு நேரில் போய் பார்த்து, தகவல்களின் துல்லியத்தை மேம்படுத்தியபடி இருக்கிறோம்' என்கிறார், ராப்டின் இணை நிறுவனர்களில் ஒருவரான சித்தார்த்.

கடந்த, டிசம்பர், 2014ல் வெளிவந்த இந்த செயலிக்காக, ஆறு மாதங்களாக, சென்னையின், 6,500 பேருந்து நிறுத்தங்கள், 1,500 பேருந்து வழித்தடங்களை செயலியில் பதிந்திருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன் சென்னை மாநகர பேருந்து, 50 வழித்தட எண்களை மாற்றியது. 'நாங்கள் உடனே அந்த தகவலை எங்கள் செயலியில் ஏற்றி விட்டோம். ஆனால், கூகுள் மேப்ஸ் தளம் இன்னும் பழைய பஸ் ரூட்களையே காட்டிக் கொண்டிருக்கிறது' என்கிறார் சித்தார்த்.

ராப்டின் மூவரணியின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. இணையத்திலுள்ள, கூகுள் ப்ளே ஸ்டோரில், இலவசமாக கிடைக்கும் ராப்ட் செயலியை, இதுவரை, 75 ஆயிரம் பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். 'இதுவரை 1,800 பேருக்கும் மேற்பட்ட பயனாளிகள், 4.6 நட்சத்திர மதிப்பீடு தந்திருப்பதே எங்கள் செயலியின் தரத்திற்கு சான்று. வேறு எந்த சென்னை போக்குவரத்து செயலிக்கும், இவ்வளவு உயர்ந்த நட்சத்திர மதிப்பீடு கிடைத்ததில்லை' என்கிறார் சித்தார்த்.