Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label விண்ணப்பிக்கலாம். Show all posts
Showing posts with label விண்ணப்பிக்கலாம். Show all posts

Thursday, October 15, 2015

டி.என்.பி.எஸ்.சி - பொது சேவை மையங்கள் வழியாக குறைந்த செலவில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் சி.பாலசுப்பிரமணியன் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக (பொறுப்பு) ஆக இருந்து வந்தார். இந்த நிலையில் புதிய தலைவராக க.அருள்மொழி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை அரசு நியமித்தது. இதையொட்டி க.அருள்மொழி டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பதவி ஏற்றார். பின்னர் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.என்.பி.எஸ்.சி - பொது சேவை மையங்கள் வழியாக குறைந்த செலவில் விண்ணப்பிக்கலாம்
டி.என்.பி.எஸ்.சி - பொது சேவை மையங்கள் வழியாக குறைந்த செலவில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையவழி சேவை அனைத்தும் மிக குறைந்த செலவில் விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது இணையவழி விண்ணப்ப சேவையை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங்களில் நடத்தப்படும் “இ-சேவை மையங்களுக்கு” (பொது சேவை மையங்கள்) வழங்கியுள்ளது. முதல்கட்டமாக, நிரந்தரப்பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல், விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய 280 இ-சேவை மையங்களை அணுகலாம். மேற்படி சேவைகளைப் பெற இ-சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் பின்வருமாறு:-

நிரந்தர பதிவு கட்டணம் :

1. நிரந்தர பதிவு செய்ய ரூ.50

2. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.30

3. விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ.5

4. விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற ரூ.20

விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு செலுத்த வேண்டிய நிரந்தர பதிவு கட்டணமான ரூபாய் 50 மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களிலேயே செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பணம் செலுத்தியதற்கான ஒப்புகை சீட்டினையும் பெற்றுக்கொள்ளலாம்.

மேற்படி சேவைகள் எல்காட் நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இந்த சேவையைப் பயன்படுத்தி குறைந்த செலவில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வுகள் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்தப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நண்பனாக செயல்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் முடிவு காலதாமதமாக வராது. காலதாமதத்தை தவிர்க்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க நடத்தப்படும் தேர்வுக்கான அறிவிப்பு, குரூப்-4 தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு க.அருள்மொழி தெரிவித்தார்.

பேட்டியின்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மற்றும் அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் ஆகியோர் இருந்தனர்.


Thursday, July 9, 2015

TNPSC குரூப் -1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஆகஸ்டு 9-ந்தேதி கடைசி நாள்

74 உயர் பதவிகளுக்கான TNPSC குரூப்-1 தேர்வு அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. தேர்வு எழுத இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசி நாள்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் உயர் பதவிகளுக்கான TNPSC குரூப்-1 தேர்வை நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான TNPSC குரூப்-1 தேர்வு அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

TNPSC Group 1 Exam Notification
TNPSC Group 1 Exam Notification


TNPSC Group 1 தேர்வு பணியிடங்கள் :

துணை கலெக்டர் பணியிடங்கள்-19,
போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடங்கள் -26,
உதவி வணிக வரி அலுவலர்கள் பணியிடங்கள் -21,
மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்கள்- 8
ஆகிய 74 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.

இன்று அறிவிப்பு வெளியானதும். தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தற்போது 3 அல்லது 4 ஆண்டு பட்டப்படிப்புக்கான இறுதி செமஸ்டர் தேர்வு எழுதிவிட்டு சான்றிதழுக்காக காத்திருப்போரும் இந்த தேர்வை எழுதலாம்.

இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசிநாள்.

இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 நிலைகளை கொண்டவை. ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மறுதேர்வுக்கு செல்லமுடியும்.

துணைகலெக்டர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில வருடங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்கள். அதுபோல துணை சூப்பிரண்டு பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகள் கழித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி. ஆகலாம்.

முதல் நிலை (பிரிமிலினரி) தேர்வு நவம்பர் மாதம் 8-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களில் நடக்கிறது.

TNPSC குருப்-4 தேர்வில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு 1,683 காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2014-ம் வருடம் டிசம்பர் மாதம் 21-ந்தேதி தேர்வு நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்த்தல், ஜூலை 13-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 2,176 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு தபால் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அட்டவணை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

TNPSC Group 1 Exam Notification 2015 : Click Here

TNPSC Group I Exam ஆன்லைனில் விண்ணப்பிக்க : 
தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க : http://tnpscexams.net/

Saturday, May 16, 2015

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்:

நேரடி விண்ணப்ப விநியோகம் இல்லை:

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 17) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்சி.), பி.டெக். உணவுத் தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய மூன்று படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எத்தனை இடங்கள்? 

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 280 இடங்கள், பி.டெக். உணவு தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்பப் படிப்புக்கு 20 என மொத்தம் 340 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்பு
கால்நடை மருத்துவப் படிப்பு


இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் மே 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கல்லூரி குறித்த விவரம், கூடுதல் விவரங்கள் அனைத்தையும் அந்த இணையதளத்தின் மூலமாகவே மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 4-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். முதல்கட்டமாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து இணையதளம் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து, புகைப்படம், சான்றொப்பம் பெறப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து, தபால் மூலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.

ஜூன் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டும்.

இதுகுறித்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தேர்வுக்குழு அலுவலர் டாக்டர் திருநாவுக்கரசு கூறியது:

கடந்த ஆண்டு நேரடி விண்ணப்ப விநியோகம், இணையதள விண்ணப்பம் இரண்டு முறைகளையும் கையாண்டோம். இந்த ஆண்டு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை அமல்படுத்தியுள்ளோம். கடந்த ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 15,500 பேரும், இதர படிப்புகளுக்கு 2,700 பேரும் என மொத்தம் 18,200 பேர் விண்ணப்பித்தனர்.
இந்த ஆண்டு அதைக் காட்டிலும் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

மேலும் விவரங்கள் முழுமையான அறிய http://www.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.