Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Tuesday, October 4, 2016

புதிய ரேஷன் கார்டுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை தீபாவளி முதல் துவக்க தமிழக அரசு முடிவு

புதிய ரேஷன் கார்டுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை தீபாவளி முதல் துவக்க தமிழக அரசு முடிவு:

ரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில் இருந்தும் நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது. இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது உணவுத்துறை.

இதற்காகத் தொடங்கப்பட்டுள்ள http://www.tnpds.com என்ற இணைய தளத்திற்கு சென்று புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில் கிளிக் செய்ய வேண்டும். பிறகு கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, குடும்ப உறுப்பினரின் பெயர்களையும், அதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ரேஷன் கார்டு வகையை தேர்வு செய்த பின்னர், காஸ் சிலிண்டர் விபரம் குறித்து கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் .

இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பின் விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு பதிவு செய்யப்பட்டதற்கான தனி அடையாள எண் வழங்கப்படும் அந்த எண்ணின் மூலம் ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம். இந்த திட்டம் தீபாவளி முதல் அமலுக்கு வரவுள்ளது.

புதிய ரேஷன் கார்டுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை தீபாவளி முதல் துவக்க தமிழக அரசு முடிவு
இப்போது புதிய அட்டை விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 

புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பத்தை பின்வரும் வழிமுறைகள் மூலம் பூர்த்தி செய்யவும் : 

1. புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள "புதிய அட்டை விண்ணப்பிக்க" பொத்தானை கிளிக் செய்யவும்

2. விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், மற்றும் முகவரியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளிடவும்

3. மாவட்டம், வட்டம் மற்றும் கிராமப் பெயர்களை அந்தந்த கீழ் வரிப் பட்டியலில் இருந்து தேர்வு செய்யவும்

4. குடும்ப தலைவரின் படத்தைப் பதிவேற்றம் செய்வதற்கு, "Choose File" பொத்தானை அழுத்தவும்

5. பொத்தானை அழுத்தி குடும்ப தலைவர் படத்தைத் கணினியிலிருந்து தேர்வு செய்த பின்னர் "பதிவேற்று" பொத்தானை அழுத்தவும்

6. பதிவேற்றம் செய்யும் படம் .png .gif .jpg வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் படத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும்

7. குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, "உறுப்பினரை சேர்க்க" பொத்தானை அழுத்தவும்

8. முதலில் குடும்ப தலைவரின் விவரங்களை உள்ளீடு செய்யவும்.

9. பிறகு உறுப்பினர் விவரங்களை உள்ளிடவும் (பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், பிறந்த தேதி, பாலினம், தேசிய இனம், உறவுமுறை, தொழில், மாத வருமானம் (ருபாயில்), வாக்காளர் அட்டை எண் மற்றும் ஆதார் எண்)

10. இணைக்கப்படவுள்ள ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு, "Choose File" பொத்தானை அழுத்தி கணினியிலிருந்து ஆவணத்தைத் தேர்வு செய்த பின்னர் பதிவேற்று பொத்தானை அழுத்தவும்

11. குடியிருப்புச் சான்றைத் தேர்வு செய்த பின்னர் அதைப் பதிவேற்றம் செய்வதற்கு, "Choose File" பொத்தானை அழுத்தவும் பொத்தானை அழுத்தி கணினியிலிருந்து ஆவணத்தைத் தேர்வு செய்து "பதிவேற்று" பொத்தானை அழுத்தவும்

12. பதிவேற்றம் செய்யும் குடியிருப்புச் சான்று .pdf .doc .docx வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஆவணத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும்

13. குடியிருப்புச் சான்றுக்கான ஆவணத்தைத் தேர்வு செய்யவும் (மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை)

14. பொத்தானை அழுத்தி கணினியிலிருந்து ஆவணத்தைத் தேர்வு செய்து "பதிவேற்று" பொத்தானை அழுத்தவும்

15. பதிவேற்றம் செய்யும் குடியிருப்புச் சான்று .pdf .doc .docx வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஆவணத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும்

16. குடும்ப அட்டை வகையை தேர்வு செய்யவும் (AAY அட்டை, நீல அட்டை (B), பச்சை அட்டை (G), போலீஸ் அட்டை (K), LOF AAY அட்டை, LOF பச்சை அட்டை,LOF நீல அட்டை, பொருட்களில்லை அட்டை (N), சிறை அட்டை (P), சர்க்கரை அட்டை (S) மற்றும் தட்கல் (Tatkal) அட்டை)

17. ஏற்கனவே எரிவாயு இணைப்பு பெறப்பட்டிருந்தால், சரிகுறிப் பெட்டியைக்   கிளிக் செய்யவும்

a) எரிவாயு இணைப்பு பற்றிய கீழ்கண்ட விவரங்களை அளிக்கவும்:

b) எரிவாயு இணைப்புக்குரிய நபரின் பெயரைத் தேர்வு செய்யவும்

c) எண்ணெய் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்

d) எல்.பி.ஜி நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்

e) எரிவாயு நிறுவனத்தின் பெயரை உள்ளிடவும்

f) சிலிண்டர் எண்ணிக்கை தேர்வு செய்யவும்

குறிப்பு: 

குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கும் நபரிடம், இரண்டு எரிவாயு இணைப்பு இருந்தால், அந்த விவரங்களை உள்ளிடவும்.

18. உள்ளிட்ட விவரங்களை ஒப்புக்கொள்ள, சான்றிதழ் பகுதியில் உள்ள சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும்

19. உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள பதிவு செய்ய பொத்தானை கிளிக் செய்யவும்

20. விண்ணப்பத்தை பதிவு செய்ய பின்னர், உங்களுக்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும்.

Saturday, May 16, 2015

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்:

நேரடி விண்ணப்ப விநியோகம் இல்லை:

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 17) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்சி.), பி.டெக். உணவுத் தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய மூன்று படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எத்தனை இடங்கள்? 

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 280 இடங்கள், பி.டெக். உணவு தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்பப் படிப்புக்கு 20 என மொத்தம் 340 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்பு
கால்நடை மருத்துவப் படிப்பு


இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் மே 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கல்லூரி குறித்த விவரம், கூடுதல் விவரங்கள் அனைத்தையும் அந்த இணையதளத்தின் மூலமாகவே மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 4-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். முதல்கட்டமாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து இணையதளம் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து, புகைப்படம், சான்றொப்பம் பெறப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து, தபால் மூலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.

ஜூன் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டும்.

இதுகுறித்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தேர்வுக்குழு அலுவலர் டாக்டர் திருநாவுக்கரசு கூறியது:

கடந்த ஆண்டு நேரடி விண்ணப்ப விநியோகம், இணையதள விண்ணப்பம் இரண்டு முறைகளையும் கையாண்டோம். இந்த ஆண்டு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை அமல்படுத்தியுள்ளோம். கடந்த ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 15,500 பேரும், இதர படிப்புகளுக்கு 2,700 பேரும் என மொத்தம் 18,200 பேர் விண்ணப்பித்தனர்.
இந்த ஆண்டு அதைக் காட்டிலும் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

மேலும் விவரங்கள் முழுமையான அறிய http://www.tanuvas.ac.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.