Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Friday, October 30, 2015

டெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்


டெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள் :

1. 'ஏடிஸ் எஜிப்டி' என்ற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணம். இந்த கொசு அசுத்த நீர் நிலைகளில் வாழாது. நல்ல நீர்நிலைகளில் மட்டுமே வாழும்.

தேங்காய் ஓடுகள், சரடுகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் போன்றவற்றின் மழை நீர் தேங்குவதால்தான், அவ்விடங்களில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாகின்றன. எனவே வீட்டை சுற்றி இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றுங்கள்.

2. சித்த மருத்துவத்தில்  டெங்குவை தடுக்க எளிமையான் வழிகள் இருக்கிறது. நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்து கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனை பிரிவில் வாங்கி பயன்படுத்தலாம்.

3. மழைக்காலத்தில் நோய்களை தடுக்க மூலிகை டீ உதவும். சுக்கு, பனங்கற்கண்டு, துளசி, மாதுளை பழத்தோல், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள்  போன்றவற்றில் என்னென்ன பொருட்கள் இருக்கிறதோ அவற்றில் கொஞ்சம் எடுத்து குடிநீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகலாம். காபி, டீக்கு பதில் வீட்டிலேயே மூலிகை டீ செய்து குடியுங்கள்.

டெங்கு பயம் இனி வேண்டாம்


4. டெங்குவை பரப்பும் கொசு சற்று பெரிதாக இருக்கும். இது மாலை இறங்கும் வேளையில்  மற்றும் அதிகாலை வேளைகளில்தான் அதிகளவு ஊர் சுற்றுகிறதாம். எனவே தினமும் மாலை 4 மணிக்கெல்லாம் வீட்டில் உள்ள ஜன்னல்களை  அடைத்து விடுங்கள். காலை ஏழு மணிக்கு மேல் ஜன்னலை திறக்கவும்.

5 வீட்டை மற்றுமல்ல மனிதர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே தினமும் குளிப்பது அவசியம். சளி, காய்ச்சல் இருப்பவர்கள் வேண்டுமானால் மருத்துவர் பரிந்துரைப்படி குளிக்காமல் இருக்கலாம்.  ஆனால் மற்றவர்கள் மழைக்காலத்தில் சுடுதண்ணீரிலோ, குழாய் நீரிலோ கண்டிப்பாக குளிக்க வேண்டும். ஏனெனில் வியர்வை வாடை அதிகமாக இருக்கும் இடங்களில்தான் கொசுக்கள் தேங்குகிறது.

6. காலை, மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் புதிதாக சமைத்து உண்ணுங்கள். பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை நன்றாக கழுவி பயன்படுத்தவும். மசால் பூரி, பானி பூரி, பஜ்ஜி, சூப்  போன்றவற்றை ரோட்டோரக்கடைகளில் சாப்பிடுவதை அறவே தவிருங்கள்.

7. முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரைதான் டெங்கு  பாடாய் படுத்துகிறது. ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  சரிவிகித உணவுகளைச்  சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது முன் கூட்டியே தெரிந்தால் மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரை,மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

8. வீட்டை ச்சுற்றி தண்ணீர் தேங்கவிடாதீர்கள். வீட்டுச் சுவர்களின் வெளிப்புறத்தில் டி.டி.டி மருத்துகளை தெளிக்கவும். கைகால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் வகையிலான உடைகளை அணியுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு ஆற வைத்து பருகுங்கள்.

டெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவை நம்மால் ஒழிக்க முடியும் என்பதை மனதில் வைத்து செயல்படுவோம்.

Thursday, October 15, 2015

கணினிகளிடம் இருந்து கண்களை காத்துக் கொள்ளுங்கள்

கணினிகளிடம் இருந்து கண்களை காத்துக் கொள்ளுங்கள்!
***************************************************************************************
அதிக நேரம் டி.வி. பார்ப்பதும் நல்லதல்ல. அந்த நேரத்தில் கண்களில் அதிக ரத்த ஓட்டம் இருக்கும். அதனால் டி.வி. பார்க்கும்போது கண் சம்பந்தப்பட்ட நரம்பு செயலிழந்து விட வாய்ப்புண்டு. குடித்துவிட்டு டி.வி. பார்ப்பதென்பது, எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல ஆகும்.

அடிக்கடி சேனலை மாற்றிக் கொண்டு இருப்பதும் கண்ணுக்கு நல்லதல்ல. ஒரு சேனலிலிருந்து இன்னொரு சேனலுக்கு மாறும்போது முதலில் ஒரு நொடி இருட்டும், அடுத்த நொடி அதிக வெளிச்சமும் ஏற்படும். இது கண் உறுப்புக்களைத் தூண்டித் தூண்டி பார்க்கச் செய்து கண்களை சீக்கிரமே சோர்வடைய வைக்கிறது.
இதைத் தடுக்க சேனலை மாற்றாமல், ஒரே சேனலையே பாருங்கள் என்று சொன்னால், யாராவது கேட்பார்களா? கண்டிப்பாக கேட்க மாட்டார்கள். கண் பாதிக்காமல் சேனலை மாற்றி மாற்றிப் பார்க்க ஒரு புதிய வழியை சொல்கிறேன், செய்து பாருங்கள். சேனலை மாற்றுவதாக இருந்தால் முதலில் கண்ணை ஒரு நொடி மூடி வைத்துக்கொண்டு சேனலை மாற்ற ரிமோட்டை அழுத்துங்கள்.
சேனலை மாற்றியபிறகு, கண்களை நான்கைந்து முறை மூடி திறந்து மூடி திறந்து பாருங்கள். அதற்கப்புறம், ஒது பத்து முறையாவது கண்ணை சிமிட்டிவிட்டு அதற்கப்புறம் டி.வி.யைப் பார்க்க ஆரம்பியுங்கள். இந்த மாதிரி செய்தால் கண்ணுக்கு ஓரளவு களைப்பு ஏற்படாது. வெளியூர் செல்லும் பஸ்களில் இப்பொழுதெல்லாம் டி.வி. கண்டிப்பாக இருக்கிறது.
இந்த டி.வி.யை ரொம்ப கிட்டத்தில் உட்கார்ந்து கொண்டு, ரொம்ப பின்னாடி உட்கார்ந்து கொண்டு, ஓரங்களில் உட்கார்ந்து கொண்டு, எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருப்பது கண்ணுக்கு நல்லதல்ல. அடுத்து டி.வி. ஸ்கிரீன் அகலத்தை மாதிரி, குறைந்தது 7 மடங்காவது தள்ளி உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும். அதுவும் பஸ்ஸில் முடியாது.
அதற்கும்மேல், பஸ் ஆடிக்கொண்டே போவதால் டி.வி. ஒழுங்காகத் தெரியாது. இதுவும் கண்ணுக்கு கெடுதியே. எனவே பஸ்சில் டி.வி. பார்ப்பதைத் தவிர்த்து கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பது அல்லது தூங்குவது கண்ணுக்கு ரொம்ப நல்லது. "நாம் பார்க்கும் பொருள், அதிக வெளிச்சத்தில் இருந்தாலும் கண்ணுக்கு நல்லதல்ல.
மிகக் குறைவான வெளிச்சத்தில் இருந்தாலும் கண்ணுக்கு நல்லதல்ல'' என்று டெலிவிஷன் ஒளியைப் பற்றிய ஆய்வுகளை தொடரும் ஜான் புல்லோ என்கிற விஞ்ஞானி சொல்கிறார். `நான் 20 வருஷமா இருட்டு அறையிலே உட்கார்ந்துதான் டி.வி. பார்க்கிறேன், எனக்கு கண் ஒண்ணும் ஆகலையே. நல்லாத்தானே இருக்கு?' என்று சிலர் சொல்லலாம். நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன்.
வெளித்தோற்றத்திற்கு எல்லோருடைய கண்களும் நன்றாக இருப்பதுபோல்தான் தோன்றும், டெஸ்ட் பண்ணிப் பார்த்த பிறகுதான் உங்களுக்கு கண் பாதிக்கப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதைச் சொல்ல முடியும். செல்போனைப்போல கம்ப்யூட்டரும் இன்றைய உலகில் மிக மிக முக்கிய தேவையான பொருளாக ஆகி விட்டது.
கம்ப்யூட்டர் இல்லாத வீடே இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு இன்றைய உலகம் முன்னேறி வருகிறது. கம்ப்யூட்டர் உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கம்ப்யூட்டர் மாறிவிட்டது. இந்த கம்ப்யூட்டர் உபயோகம், கண்ணை எப்படிப் பாதிக்கிறது என்று தெரியாமலே பல பேர் கம்ப்யூட்டரோடு படுத்து உறங்குகிறார்கள்.
பெரிய பெரிய ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், காலையிலிருந்து இரவு வரை அதிக நேரம் கம்ப்யூட்டரைப் பார்த்துதான் ஆக வேண்டும். பார்க்கமாட்டேன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஐ.டி. கம்பெனிக்காரர்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று சம்பளம் கொடுக்கும்போது கண்டிப்பாக அவர்கள் சொல்கிற வேலையை செய்துதான் ஆக வேண்டும்.
`கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்` (சி.வி.எஸ்.) என்று சொல்லக்கூடிய ஒரு பாதிப்பு கம்ப்யூட்டரில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. கண்ணில் எரிச்சல், கண்ணில் அரிப்பு, கண் காய்ந்து போய்விடுவது, கண்ணில் நீர் வடிவது, கண் இறுக்கமாக இருப்பது, கண்ணைச் சுற்றி லேசான வீக்கம் இவையெல்லாம் இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமின் அறிகுறிகளாகும்.
இதற்கு முதல் காரணமும், முக்கிய காரணமும் என்னவென்று பார்த்தால், கம்ப்யூட்டரில் உட்கார்ந்து நாம் வேலை செய்யும்போது கண்களை சிமிட்டுவது மிக மிகக் குறைந்துவிடுவதுதான் என்று தெரியவருகிறது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் பத்து மணி நேரம் போக ஒரு நாளைக்கு சுமார் 10080 முறை (14 மணி நேரத்திற்கு) கண் சிமிட்ட வேண்டும்.
கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை செய்யும்போது கண் சிமிட்டுவது குறைந்துவிடுவதால் கண்ணீர் சுரப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது. மேலும் கண் திறந்தே இருப்பதால் சுரக்கும் கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகி விடுகிறது. இதனால் கண் அங்கும் இங்கும் நகருவதும் கஷ்டமாகி விடுகிறது.
கணினிகளிடம் இருந்து கண்களை காத்துக் கொள்ளுங்கள்
கணினிகளிடம் இருந்து கண்களை காத்துக் கொள்ளுங்கள்


இதை சரி பண்ண நாம் என்ன பண்ண வேண்டும்?
************************************************************************** 
1. கம்ப்யூட்டர் மானிட்டர் மீது வேறு வெளிச்சம் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வேறு வெளிச்சம் மானிட்டர் மீது படுவதாக இருந்தால் மானிட்டரை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திருப்பி, அட்ஜஸ்ட் செய்து வெளி வெளிச்சமோ, வேறு வெளிச்சமோ படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த வெளிச்சம் மற்றும் அதிக வெளிச்சத்தை குறைப்பதற்கென்றே ஒரு ஸ்பெஷல் கண்ணாடி ஸ்கிரீன் விற்கிறது. இதை வாங்கி உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு முன்னால் மாட்டிக்கொள்ளுங்கள்.

2. கம்ப்யூட்டரும், நீங்கள் உட்காரும் நாற்காலியும் சரியான உயரத்தில் இருக்க வேண்டும். நாற்காலி, நல்ல நாற்காலியாக இருக்க வேண்டும். நாற்காலியில் சவுகரியமாக திருப்தியாக உட்கார்ந்தால்தான் கம்ப்யூட்டரில் அதிக கவனம் செலுத்த முடியும். நாற்காலி சரியாக இல்லாவிட்டால் கவனம் குறைந்து விடும். வேகமாக வேலையை பார்க்க முடியாது. முதுகுவலி வந்து விடும். கழுத்துவலி வந்து விடும், கவனமாக இருங்கள். உங்கள் கண்களில் இருந்து சுமார் 35 செ.மீ. முதல் சுமார் 50 செ.மீ. தூரம் தள்ளி, கம்ப்யூட்டர் மானிட்டர் இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கும், மானிட்டருக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.
3. தொடர்ந்து மானிட்டரைப் பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தலைவலி, மங்கலான பார்வை இவைகள் வராமலிருக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு பின் கண்ணை நன்றாக கழுவிவிட்டு மறுபடியும் வேலையைத் தொடருங்கள். அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம், உங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் உட்காருங்கள்.
4.தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது இடைஇடையில் மானிட்டரிலிருந்து கண்ணை எடுத்து அருகிலுள்ள ஜன்னல் வழியாக, வெளியே ஒரு முறை பார்த்துவிட்டு, மறுபடியும் மானிட்டரைப் பார்க்க ஆரம்பியுங்கள்.
5. ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள், மானிட்டரிலிருந்து சுமார்
70-லிருந்து சுமார் 80 செ.மீ. தூரத்தில் உட்காரலாம்.

6. கம்ப்யூட்டரில் உள்ள எழுத்துகளின் அளவை முடிந்தவரை பெரிதாக்கிப் பாருங்கள். கண்ணுக்கு அதிக அசதி இருக்காது. எப்படி வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ளுங்கள் என்று ஊறுகாய்க்கு டிவி.யில் விளம்பரம் வருவதுபோல, எப்படி வேண்டுமானாலும் டி.வி.யிலும், கம்ப்யூட்டரிலும் உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் கண்ணுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

டி.என்.பி.எஸ்.சி - பொது சேவை மையங்கள் வழியாக குறைந்த செலவில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் சி.பாலசுப்பிரமணியன் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக (பொறுப்பு) ஆக இருந்து வந்தார். இந்த நிலையில் புதிய தலைவராக க.அருள்மொழி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை அரசு நியமித்தது. இதையொட்டி க.அருள்மொழி டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பதவி ஏற்றார். பின்னர் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.என்.பி.எஸ்.சி - பொது சேவை மையங்கள் வழியாக குறைந்த செலவில் விண்ணப்பிக்கலாம்
டி.என்.பி.எஸ்.சி - பொது சேவை மையங்கள் வழியாக குறைந்த செலவில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையவழி சேவை அனைத்தும் மிக குறைந்த செலவில் விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது இணையவழி விண்ணப்ப சேவையை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங்களில் நடத்தப்படும் “இ-சேவை மையங்களுக்கு” (பொது சேவை மையங்கள்) வழங்கியுள்ளது. முதல்கட்டமாக, நிரந்தரப்பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல், விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய 280 இ-சேவை மையங்களை அணுகலாம். மேற்படி சேவைகளைப் பெற இ-சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் பின்வருமாறு:-

நிரந்தர பதிவு கட்டணம் :

1. நிரந்தர பதிவு செய்ய ரூ.50

2. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.30

3. விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ.5

4. விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற ரூ.20

விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு செலுத்த வேண்டிய நிரந்தர பதிவு கட்டணமான ரூபாய் 50 மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களிலேயே செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பணம் செலுத்தியதற்கான ஒப்புகை சீட்டினையும் பெற்றுக்கொள்ளலாம்.

மேற்படி சேவைகள் எல்காட் நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இந்த சேவையைப் பயன்படுத்தி குறைந்த செலவில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வுகள் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்தப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நண்பனாக செயல்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் முடிவு காலதாமதமாக வராது. காலதாமதத்தை தவிர்க்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க நடத்தப்படும் தேர்வுக்கான அறிவிப்பு, குரூப்-4 தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு க.அருள்மொழி தெரிவித்தார்.

பேட்டியின்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மற்றும் அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் ஆகியோர் இருந்தனர்.


Monday, October 12, 2015

TNPSC Group 2A 1863 காலியிடங்கள் நிரப்ப தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

TNPSC குரூப் 2A தேர்வு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

TNPSC குரூப் 2A தேர்வு : 1863 காலியிடங்கள்

அறிவிப்பு நாள்:12.10.2015

கடைசி தேதி: 11.11.2015

தேர்வு நாள் : 27.12.2015

TNPSC குரூப் 2A தேர்வு :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு எழுத விரும்பும் பட்டதாரி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.தமிழ்நாடு அரசுப்பணிகளில் நிதித்துறை, சட்டத்துறை, வருவாய்த்துறை, சிறைத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை, பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவியாளர், பெர்சனல் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 1862 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான குரூப் 2 ஏ தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. குரூப் 2 தேர்வில் உள்ளதுபோல் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என்ற மூன்று கட்டத் தேர்வு முறை இதற்கு கிடையாது. ஒரே ஒரு எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஓர் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு, இளநிலை பட்டப் படிப்பை படித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள்விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியது அவசியம். இந்தப் பணிகளில் 20 சதவீதப் பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.TNPSC குரூப் 2A
TNPSC Group 2A Exam Notification


நிதித்துறையில் பெர்சனல் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியலில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் லோயர், ஹையர் என இரு நிலைகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சட்டம் மற்றும் நிதித்துறை அல்லாத பிற துறைகள், டிஎன்பிஎஸ்சி, தமிழ்நாடு சட்டப்பேரவை போன்றவற்றில் பெர்சனல் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் லோயர், ஹையர் என இரு நிலைகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வருவாய்த்துறை ஆணையாளர் அலுவலகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில்பிஏ, பிஎஸ்சி, பிகாம் படித்தவர்களும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஓஎல், மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ, சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிஎம் படித்தவர்களும், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.லிட். படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சிறைத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை, தொழிலாளர் துறை, நெடுஞ்சாலைத் துறை, வரலாற்று ஆவணத்துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அனைத்துப்பணிகளுக்கும் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.பொதுப்பிரிவினர் அல்லாத பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் மாநில அரசு அல்லது மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பின், அவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. வேறு அரசு நிறுவனங்களில் பணி அமர்த்தப்படாத நிலையில் டான்சி நிறுவனத்தில் ஆட்குறைப்பை எதிர்கொள்ளும் ஊழியர்கள் இந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்களுக்கு குறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டியது அவசியம்.

தேர்வு எப்படி இருக்கும்?

இதற்கான எழுத்துத்தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவு ஜெனரல் ஸ்டடீஸ் ஆகும். இதில் பட்டப்படிப்புத் தரத்தில், ஜெனரல் ஸ்டடிஸ் பிரிவில் 75 கேள்விகள், எஸ்எஸ்எல்சி தரத்தில் மென்டல் எபிலிட்டி பிரிவில் 25 கேள்விகள் எனமொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.ஜெனரல் ஸ்டடிஸில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாகம், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய விடுதலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

டேட்டா கலெக்ஷன், டேட்டா டேபிள்ஸ், கிராப்ஸ், அனலிட்டிக்கல் இட்னர்பிரட்டேஷன் டேட்டா, சிம்ப்ளிபிக்கேஷன், சதவீதம், நேரம், தூரம், ரீச னிங், வரைபடம் உள்பட பல்வேறு மென்டல் எபிலிட்டி பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.இரண்டாவது பிரிவு எஸ்எஸ்எல்சி தரத்தில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகும்.

இதில் 100 கேள்விகள் கேட்கப்படும்.தமிழ்ப் பகுதியில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்கள், அவர்களின் தமிழ்த் தொண்டு ஆகிய பாடப்பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள்.நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. கேள்விகள் அனைத்தும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். இதற்கான பாடத்திட்டங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நிழற்படம், கையெழுத்து ஆகியவற்றை முன்னதாகவே ஸ்கேன் செய்து வைத்திருக்க வேண்டும். இ மெயில்முகவரி, தொடர்பு கொள்ள மொபைல் எண்ணும் அவசியம். இப்பணிகளுக்கான விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் 125 (அதாவது தேர்வுக் கட்டணம் ரூ.75, விண்ணப்பக் கட்டணம் ரூ.50). ஒரு முறை பதிவு முறையில் ஏற்கனவே, ரூ. 50 செலுத்தி, விண்ணப்பித்து பதிவு எண் பெற்றவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். ஆப்லைன் முறையில் என்றால் இந்தியன் வங்கி அல்லது ஏதேனும் ஒரு தலைமை தபால் நிலையம் மூலமாக கட்டணம் செலுத்தலாம்.ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தப் பிறகு, அந்த ஃபைலை ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரிண்ட் அவுட்டையோ, அதன் நகல்களையோ எதையும் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வு நடைபெற இருப்பதற்கு, ஒருவாரம் முன்னதாக இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தகுதிகள் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் செலுத்தும் முறை குறித்த அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2015, இரவு 11.59வரை.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.12.2015.


For more information about TNPSC Group 2A Exam Notification