Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Monday, November 2, 2015

உடலில் ஹீமோகுளோபின் குறைந்துவிட்டால் அதிகரிப்பது எப்படி?

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

 ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

 மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.

உடலில் ஹீமோகுளோபின் குறைந்துவிட்டால் அதிகரிப்பது எப்படி
 உடலில் ஹீமோகுளோபின் குறைந்துவிட்டால் அதிகரிப்பது எப்படி


1-வது நாள் 1, 1, 1, -3.
 2-வது நாள் 2, 2, 2, = 6.
 3-வது நாள் 3, 3, 3, = 9.
 4-வது நாள் 4, 4, 4, = 12.
 5-வது நாள் 4, 4, 4, = 12.
 6-வது நாள் 4, 4, 4, = 12.
 7-வது நாள் 3, 3, 3, = 9.
 8-வது நாள் 2, 2, 2, = 6.
 9-வது நாள் 1, 1, 1, = 3.

 ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள்
இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும்

இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.