தமிழகம்,
புதுவையில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய பத்தாம்
வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் வியாழக்கிழமை (மே 21) காலை 10 மணிக்கு
வெளியிடப்படுகின்றன.
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்தத் தேர்வுகளின் முடிவுகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம்
வெளியிட்ட அறிவிப்பு:
ஒவ்வொரு
மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல்
மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை
இணையதளங்களில் இலவசமாக அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற
பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பம்:
பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல்
செய்ய விண்ணப்பிக்கலாம். மே 22 முதல் 27 வரை மாணவர்கள் தங்களது பள்ளி
மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய பள்ளி
மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
மொழிப்பாடம்,
ஆங்கிலப் பாடத்துக்கு ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு ரூ. 205-ம்
மறுகூட்டலுக்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கான கட்டணத்தை
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும்.
தாற்காலிகச் சான்றிதழ்:
பத்தாம்
வகுப்பு மாணவர்கள் மே 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்ட
தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொள்
ளலாம்.
மாணவர்கள்
ஜூன் 4-ஆம் தேதி முதல் இந்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பிறந்த தேதி,
பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவு |
இணையதளத்தில்...
சிறப்பு
துணைத் தேர்வு பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான
சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 26-ஆம் தேதி தொடங்குகிறது.
No comments:
Post a Comment