ஆதார் எண்ணை இணைச்சாச்சா? இல்லேன்னா வோட்டர் லிஸ்டுலேயிருந்தே பெயர் நீக்கம்!?
வாக்காளரின் விவரங்களை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் தமிழம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, வாக்காளர்களின் ஆதார் எண், செல்லிடைப் பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவை பெறப்பட்டு, வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும். ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் அதே நேரத்தில், அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இருந்தால் பெயரை நீக்குவது, இடம் மாறிய விவரத்தை தெரிவிப்பது, பெயர் சேர்ப்பது, இறந்தவர் பெயரை நீக்குவது போன்ற திருத்தங்களையும் செய்து கொள்ளலாம்.
இதன் பொருட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் வந்து விவரங்களை சேர்த்துள்ளனர். மேலும், ஏப்ரல் 12, 26 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களையும் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது. இறுதியாக 24-ந் தேதி (இன்று) சிறப்பு முகாம் நடத்தியது
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இல்லம் முன்பு மாநகராட்சி தேர்தல் அதிகாரிகள் சார்பில் நோட்டீசு ஓட்டப்பட்டு வருகிறது. அந்த நோட்டீசில்,”வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் வீட்டில் விபரம் சேகரிக்க வந்தபோது தங்களுடைய வீடு பூட்டப்பட்டு இருந்தது. குடியிருக்கவில்லை என்று தகவல் தரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, இந்த அறிவிப்பை கண்டவுடன் தாங்களாகவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அல்லது மாநகராட்சி பகுதி அலுவலகம்/ மண்டல அலுவலகத்தில் தங்களது ஆதார் எண், செல்போன் எண், இ–மெயில் முகவரியை எழுத்துபூர்வமாக தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் தாங்கள் குடியிருக்கவில்லை என கருதி தங்களுடைய வாக்காளர் பதிவினை நீக்கம் செய்ய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reference : http://electoralsearch.in/
No comments:
Post a Comment