ஜிஎஸ்டி (GST Goods and Services Tax Bill) மசோதா :
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா கடைசி கட்டத்திற்கு வந்துள்ளது. புதன்கிழமை இன்று ராஜ்ய சபாவில் ஜிஎஸ்டி மசோதா பற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.
சுதந்திரம் பெற்ற பிறகு மிகப்பெரிய வரி சீர்திருத்தம் மற்றும், ஒரு தேசம் ஒரு வரி ஆட்சி என 29 மாநிலங்களுக்கும் ஒரே வரியாக வர இருக்கிறது ஜிஎஸ்டி. இதற்காக 29 மாநில முதல்வர்களும் அவர்கள் கட்சியின் அவை உறுப்பினர்களை கண்டிப்பாக இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
எனவே இந்த முறை எப்படியும் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஜிஎஸ்டி வரியால் எந்தெந்த பொருட்கள் விலை உயரும் & விலை குறையும்? என்பது பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.
![]() |
How GST may Effect Consumer |
விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படும் பொருட்கள் :
ஆட்டோமொபைல் :
சிறிய ரக கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள், எஸ்யூவி-கள் பொன்ற வாகனங்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார் பேட்டரி:
கார் பேட்டரிகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
திரைப்பட டிக்கெட்:
திரைப்பட சீட்டுகளுக்கான கேளிக்கை வரி மிக அதிகமாக உள்ளது, ஜிஎஸ்டி 18 சதவீதமாக இருக்கும் போது மல்டிப்ளக்ஸ் போன்ற நிறுவனங்களும் விலையைக் குறைத்தல் டிக்கெட் விலை குறைய வாய்ப்புள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்கள்:
ஃபேன், லைட், வாட்டர் ஹீட்டர், ஏசி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் விலை குறையலாம்.
GST Bill - Which are Costly & Cheaper Items |
விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படும் பொருட்கள் :
புகையிலை:
புகையிலை மீதான ஜிஎஸ்டி விகிதம் அதிகப்படுத்துவதால் புகையிலை பொருட்கள், சிக்ரெட் விலை உயர வாய்ப்புள்ளது.
வணிக வாகனங்கள் :
ட்ரக், பேருந்து பொன்ற வணிக வாகனங்கள் விலை உயரும்
சேவை வரி:
சேவை வரி உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மொபைல் பில் கட்டணங்கள் உயரும்.
ஆடம்பர பொருட்கள்:
ஜவுளி, ஆடம்பர நகை போன்ற பொருட்கள் விலை உயரலாம்.
No comments:
Post a Comment