வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா உங்களுக்காகவே மத்திய அரசு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை 2015 ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 7 ஆண்டுகளில் 2022-க்குள் ஐந்து கோடிக்கும் அதிகமான பேருக்கு வீடு கட்டி முடிக்க வேண்டும் என்று இத்திட்டம் பிரதமர் மோடியால் துவங்கப்பட்டது. நாம் இப்போது இத்திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன் பெறலாம் என்பது குறித்து இங்குப் பார்ப்போம்.
![]() |
அனைவருக்கும் வீடு திட்டம் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா |
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டத்தை எப்படி பயன் பெறுவது?:
பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவு :
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாகவும், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவாக உள்ளவர்களும் இத்திட்டத்தின் கீழ் வீட்டைக் கட்டுவதற்கான பல சலுகைகளைப் பெறலாம்.
சொந்தமாக இடம் :
உங்களிடம் வீடு கட்டுவதற்கான சொந்தமாக இடம் இருந்தால் போதும். உங்களுடன் இணைந்து அரசு அளிக்கும் சலுகைகளைப் பயன்படுத்தி வீட்டைக் கட்டிவிடலாம்
இரண்டு அளவீடுகள் :
நீங்கள் வீடு கட்டப் போகும் இடம் 30 சதுர மீட்டராக இருந்தால் உங்களுடைய வருமானம் வருடத்திற்கு 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அதுவே 60 சதுர மீட்டராக இருந்தால் உங்கள் வருமானம் 3 முதல் 6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
வீட்டுக் கடன் :
இத்திட்டத்தின் மூலம் கடன் பெற்று வீடு கட்டுபவர்கள் 15 வருடத்திற்கு 6 லட்சம் கடனாக பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் இத்தொகைக்கான வட்டி விகிதத்தை அரசு 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.4,050 மட்டும் வட்டியாகச் செலுத்தி வந்தால் போதும். இதுவே வெளியில் கடனாக பெற்றால் 10.05 சதவீதம் வட்டியாகச் செலுத்த வேண்டும்.
ஊக்கத் தொகை :
பழங்குடியினர், பெண்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர் ஆகியோருக்கு இத்திட்டத்தின் கீழ் பெருமளவு ஊக்கத் தொகையை அரசு அறிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் மேலே குறிப்பிட்டுள்ள பிரிவினர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2.3 லட்சம் வரை ஊக்கத் தொகை பெறுவர்.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் :
நன்கு கட்டப்பட்ட வீடு இல்லை என்று மட்டும் சான்றிதழ் பின்னர் வருமான சான்றிதழ் இவை இரண்டும் சமர்ப்பித்தல் வேண்டும்.
No comments:
Post a Comment