திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவில் நாள்தோறும் காலையில் உமையாளுடன் சந்திரசேகரரும், மாலையில் பஞ்ச மூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் வீதிஉலா வந்தனர்.
![]() |
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள் |
5-ம் நாள் இரவு வெள்ளி ரிஷப வாகனத்திலும், 6-ம் நாள் வெள்ளித் தேரிலும், 7-ம் நாள் மகா ரதத்திலும் அருணாசலேஸ்வரர் அபித குஜாம்பாளுடன் பக்தர்கள் வெள்ளத்தில் எழுந்தருளினார். மகாரதம் உள்பட 5 தேர்களையும் பக்தர்கள் மாட வீதிகளில் வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தியுடன் முழங்கிய லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவில் தேர்கள் அசைந்தபடி பவனி வந்தன.
தீப விழாவின் உச்சகட்டமாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோஷம் முழங்கி தீபத்தை தரிசித்தனர்.
No comments:
Post a Comment