Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Monday, August 17, 2015

அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் விண்ணப்பிக்க ஒரே இணையதளம் அறிமுகம்

மாணவர்கள் கல்வி உதவித்தொகைகளை எளிதாக பெறுவதற்காக ஒரே இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு வழங்கும் அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் இந்த இணையதளம் ஒன்றிலேயே விண்ணப்பிக்க முடியும். இந்த புதிய இணையதளம் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.


மாணவர்கள் கல்வி உதவித்தொகைகளை எளிதாக பெறுவதற்காக ஒரே இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது
மாணவர்கள் கல்வி உதவித்தொகைகளை எளிதாக பெறுவதற்காக ஒரே இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது

புதிய இணையதம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்தும், மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் குறித்தும் மாணவர்களிடையே விளம்பரப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.


மத்திய அரசின் உயர்கல்வித் துறை, சமூகநீதி மேம்பாட்டுத் துறை, பழங்குடியினர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை, சிறுபான்மையினர்நலத் துறை, பள்ளிக் கல்வி- எழுத்தறிவுத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்தக் கல்வி உதவித் தொகைகள் குறித்த நேரத்தில் விரைவாகவும், நேரடியாகவும் மாணவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, தேசிய இ-கல்வி உதவித்தொகை இணையதளத்தை (http//www.sholerships.gov.in) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உருவாக்கியிருக்கிறது. 

இந்தக் கல்வி உதவித்தொகைகளைப் பெற விரும்பும் மாணவர்கள் முதலில், இந்த இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களால் இணையத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம், சம்பந்தப்பட்ட அவர்களுடைய கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் சார்பில் முதலில் பரிசீலிக்கப்பட்டு பின்னர் இணையத்தில் இறுதியாக சமர்ப்பிக்கப்படும். மேலும் நாம் அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது, ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பதையும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என வசதியும் உள்ளது.

Thursday, June 18, 2015

பிரதமர் நரேந்திர மோடி மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

புதுடெல்லி:  நரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் புதிய செயலியை மோடி துவக்கியுள்ளார். பொதுமக்களுடன் எப்போதும் நேரடி தொடர்பில் இருக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பெயரில் மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, தகவல்களை தொடர்ந்து பதிவு செய்து பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

நரேந்திர மோடி ஆப்
நரேந்திர மோடி ஆப்


அரசு நிர்வாகத்தில் பொது மக்களும் பங்கு பெற வேண்டும், ஆலோசனைகள் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது அரசு என்ற புதிய இணையதளத்தை துவங்கினார். இதற்கு நரேந்திர மோடி என்ற பெயரில் புதிய செயலி துவங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்களில் நரேந்திரமோடி செயலியை டவுன்லோடு செய்து தேவையாக தகவல்கள், இமெயில்கள் மற்றும், வானொலி பேச்சுக்களையும் எப்போதும் எந்நேரமும் பெறலாம். மேலும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவிக்கலாம் மற்றும் பிரதமருடன் கலந்துரையாடலாம்.

இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்துகொண்டால், பிரதமரிடம் இருந்து தகவல்கள் மற்றும் இ-மெயில்களை நேரடியாக பெற முடியும். இத்தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வாருங்கள் மொபைலில் இணைந்திருங்கள் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.