புதுடெல்லி: நரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் புதிய செயலியை மோடி
துவக்கியுள்ளார். பொதுமக்களுடன் எப்போதும் நேரடி தொடர்பில் இருக்கும்
வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பெயரில் மொபைல் அப்ளிகேஷனை
அறிமுகம் செய்துள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருவதில்
பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். சமூக வலைத்தளங்களான
பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு
வரும் பிரதமர் நரேந்திர மோடி, தகவல்களை தொடர்ந்து பதிவு செய்து பொது
மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
அரசு நிர்வாகத்தில் பொது மக்களும் பங்கு பெற வேண்டும், ஆலோசனைகள் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது அரசு என்ற புதிய இணையதளத்தை துவங்கினார். இதற்கு நரேந்திர மோடி என்ற பெயரில் புதிய செயலி துவங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்களில் நரேந்திரமோடி செயலியை டவுன்லோடு செய்து தேவையாக தகவல்கள், இமெயில்கள் மற்றும், வானொலி பேச்சுக்களையும் எப்போதும் எந்நேரமும் பெறலாம். மேலும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவிக்கலாம் மற்றும் பிரதமருடன் கலந்துரையாடலாம்.
இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்துகொண்டால், பிரதமரிடம் இருந்து தகவல்கள் மற்றும் இ-மெயில்களை நேரடியாக பெற முடியும். இத்தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வாருங்கள் மொபைலில் இணைந்திருங்கள் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
![]() |
நரேந்திர மோடி ஆப் |

No comments:
Post a Comment