Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label கார்டு. Show all posts
Showing posts with label கார்டு. Show all posts

Friday, October 14, 2016

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்க ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்குகியது

தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிகிறது. புதிய ரே‌ஷன்கார்டு ‘ஸ்மார்ட்கார்டு’ அளவில் வழங்கப்பட உள்ளது.

இதனால் பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக 2017 ஜனவரி முதல் புதிய ஸ்மார்ட் கார்டு அனைவருக்கும் வழங்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் குடும்ப அட்டையில் உள்ள விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்க ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்குகியது
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்க ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்குகியது

ரே‌ஷன் கடைகளில் நவீன விற்பனை எந்திரம் (பாயிண்டஸ் ஆப் சேல்) அமைக்கப்பட்டு அதில் குடும்ப அட்டைதாரர்களின் முழு விவரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் விவரம், செல்போன் எண், சிலிண்டர் எண்ணிக்கை போன்றவற்றோடு ஆதார் எண்களும் பதிவு செய்யப்பட வேண்டும்.

குடும்ப அட்டை எண் முதல் அனைத்து விவரங்களும் அந்த கருவி மூலமாக கடை ஊழியர் பதிவு செய்வார். ஆதார் அட்டையை அக்கருவி ஸ்கேன் செய்து கொள்ளும்.

இந்த பணி இதுவரையில் 13 மாவட்டங்களில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான அளவில் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக திருப்பூர், கோவை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தற்போது தொடங்கியுள்ளது. சென்னையில் 23 ரே‌ஷன் கடைகளில் மட்டும் பரீட்சார்ந்த முறையில் தொடங்கப்பட்டது.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் குடும்ப அட்டை தகவல்கள் பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. தென் சென்னையில் 6-ந்தேதியும், வட சென்னையில் 7-ந்தேதியும் தொடங்குகிறது. 2 ஆயிரம் ரே‌ஷன் கடைகளில் நவீன கருவி மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைகளின் விவரமும் பதிவு செய்யப்படும்.

இந்த பணி தொடங்குவதற்கு முன்பாக நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பொது மக்களிடம் இருந்து ரே‌ஷன் கார்டு விவரங் களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி கள் ஆலோசனை வழங்கு கின்றனர்.

இந்த பணி 2 மாதம் வரையும் நடைபெறும். நவம்பர் 1-ந்தேதி ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கும் பணி தொடங்கும். டிசம்பர் மாதம் ஸ்மார்ட் கார்டுகள் தயாராகிவிடும். ஜனவரியில் இருந்து பயன்படுத்த கூடிய வகையில் பழைய கார்டுகளை பெற்றுக் கொண்டு புதிய கார்டு வழங்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் நவீன கருவி மூலம் ஆதார் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் செப்டம்பர் 6-ந்தேதி இந்த பணி தொடங்குகிறது. வழங்கல் பதிவேட்டில் உள்ள குடும்ப அட்டை விவரங்களை ரே‌ஷன் கடை ஊழியர் இந்த கருவியில் முதலில் பதிவு செய்துவிடுவார்.

அதன் பின்னர் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் போது குடும்ப தலைவரிடம் சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கேட்டு பதிவு செய்யப்படும்.

அடுத்த முறை கடைக்கு வரும் போது ஆதார் அட்டை கொண்டு வந்து பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்படும். ஒவ்வொரு ரே‌ஷன் கடையிலும் தினமும் 100 முதல் 200 குடும்ப அட்டைகள் விவரம் பதிவு செய்யப்படும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை இருந்தாலும் பதிவு செய்யலாம். ஒரு மாதம் இந்த பணி நடைபெறும். அதன்பிறகும் பதிவு செய்யாதவர்களுக்கு கடைசி வாய்ப்பும் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் போது ‘பில்’ வழங்கப்படாது. அந்த கார்டை கருவியில் காட்டினால் போதும் அவர்களுக்கு உரிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

பொருட்கள் வழங்குவது குறித்த தகவல் உடனடியாக குடும்ப தலைவர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். சென்று விடும். செல்போனில் வந்த தகவலை காண்பித்து தான் பொருட்களை வாங்க முடியும். இதனால் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு இல்லை.

தமிழக அரசு பொது விநியோக திட்டத்தினை காகிதமில்லா நிர்வாகமாக மாற்றி விநியோகத்தினை மேம்படுத்தும் நோக்குடன் பொது விநியோக திட்டத்தில் அதிக வெளிப்படைதன்மை, துரித சேவை, அத்தியாவசிய பொருட்களின் எடை மற்றும் செலுத்தப்பட்ட தொகை குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், கடை திறப்பு மற்றும் இருப்பில் உள்ள பொருட்களின் அளவு ஆகியவை அறிந்து கொள்ள மேம்படுத்தப்பட்ட நுகர்வோர் இணையதள சேவை மூலம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற இயலும்.

அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள விற்பனை எந்திரத்தில் 100 சதவீத குடும்ப அட்டைகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆதார் எண் பதிவேற்றம் செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது மறுக்கப்படமாட்டாது.

இருப்பினும் ஆதார் எண் பதிவேற்றம் செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் தாங்களாக முன்வந்து நியாய விலைக்கடையில் உள்ள விற்பனையாளரிடம் விற்பனை எந்திரத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரத்தை பதிவேற்றம் செய்து இத்திட்டம் சிறப்பாகம், வெளிப்படையாகவும் நடைமுறைப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Tuesday, October 4, 2016

புதிய ரேஷன் கார்டுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை தீபாவளி முதல் துவக்க தமிழக அரசு முடிவு

புதிய ரேஷன் கார்டுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை தீபாவளி முதல் துவக்க தமிழக அரசு முடிவு:

ரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில் இருந்தும் நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது. இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது உணவுத்துறை.

இதற்காகத் தொடங்கப்பட்டுள்ள http://www.tnpds.com என்ற இணைய தளத்திற்கு சென்று புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில் கிளிக் செய்ய வேண்டும். பிறகு கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, குடும்ப உறுப்பினரின் பெயர்களையும், அதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ரேஷன் கார்டு வகையை தேர்வு செய்த பின்னர், காஸ் சிலிண்டர் விபரம் குறித்து கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் .

இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பின் விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு பதிவு செய்யப்பட்டதற்கான தனி அடையாள எண் வழங்கப்படும் அந்த எண்ணின் மூலம் ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம். இந்த திட்டம் தீபாவளி முதல் அமலுக்கு வரவுள்ளது.

புதிய ரேஷன் கார்டுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை தீபாவளி முதல் துவக்க தமிழக அரசு முடிவு
இப்போது புதிய அட்டை விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 

புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பத்தை பின்வரும் வழிமுறைகள் மூலம் பூர்த்தி செய்யவும் : 

1. புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள "புதிய அட்டை விண்ணப்பிக்க" பொத்தானை கிளிக் செய்யவும்

2. விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், மற்றும் முகவரியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளிடவும்

3. மாவட்டம், வட்டம் மற்றும் கிராமப் பெயர்களை அந்தந்த கீழ் வரிப் பட்டியலில் இருந்து தேர்வு செய்யவும்

4. குடும்ப தலைவரின் படத்தைப் பதிவேற்றம் செய்வதற்கு, "Choose File" பொத்தானை அழுத்தவும்

5. பொத்தானை அழுத்தி குடும்ப தலைவர் படத்தைத் கணினியிலிருந்து தேர்வு செய்த பின்னர் "பதிவேற்று" பொத்தானை அழுத்தவும்

6. பதிவேற்றம் செய்யும் படம் .png .gif .jpg வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் படத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும்

7. குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, "உறுப்பினரை சேர்க்க" பொத்தானை அழுத்தவும்

8. முதலில் குடும்ப தலைவரின் விவரங்களை உள்ளீடு செய்யவும்.

9. பிறகு உறுப்பினர் விவரங்களை உள்ளிடவும் (பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், பிறந்த தேதி, பாலினம், தேசிய இனம், உறவுமுறை, தொழில், மாத வருமானம் (ருபாயில்), வாக்காளர் அட்டை எண் மற்றும் ஆதார் எண்)

10. இணைக்கப்படவுள்ள ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு, "Choose File" பொத்தானை அழுத்தி கணினியிலிருந்து ஆவணத்தைத் தேர்வு செய்த பின்னர் பதிவேற்று பொத்தானை அழுத்தவும்

11. குடியிருப்புச் சான்றைத் தேர்வு செய்த பின்னர் அதைப் பதிவேற்றம் செய்வதற்கு, "Choose File" பொத்தானை அழுத்தவும் பொத்தானை அழுத்தி கணினியிலிருந்து ஆவணத்தைத் தேர்வு செய்து "பதிவேற்று" பொத்தானை அழுத்தவும்

12. பதிவேற்றம் செய்யும் குடியிருப்புச் சான்று .pdf .doc .docx வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஆவணத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும்

13. குடியிருப்புச் சான்றுக்கான ஆவணத்தைத் தேர்வு செய்யவும் (மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை)

14. பொத்தானை அழுத்தி கணினியிலிருந்து ஆவணத்தைத் தேர்வு செய்து "பதிவேற்று" பொத்தானை அழுத்தவும்

15. பதிவேற்றம் செய்யும் குடியிருப்புச் சான்று .pdf .doc .docx வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஆவணத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும்

16. குடும்ப அட்டை வகையை தேர்வு செய்யவும் (AAY அட்டை, நீல அட்டை (B), பச்சை அட்டை (G), போலீஸ் அட்டை (K), LOF AAY அட்டை, LOF பச்சை அட்டை,LOF நீல அட்டை, பொருட்களில்லை அட்டை (N), சிறை அட்டை (P), சர்க்கரை அட்டை (S) மற்றும் தட்கல் (Tatkal) அட்டை)

17. ஏற்கனவே எரிவாயு இணைப்பு பெறப்பட்டிருந்தால், சரிகுறிப் பெட்டியைக்   கிளிக் செய்யவும்

a) எரிவாயு இணைப்பு பற்றிய கீழ்கண்ட விவரங்களை அளிக்கவும்:

b) எரிவாயு இணைப்புக்குரிய நபரின் பெயரைத் தேர்வு செய்யவும்

c) எண்ணெய் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்

d) எல்.பி.ஜி நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்

e) எரிவாயு நிறுவனத்தின் பெயரை உள்ளிடவும்

f) சிலிண்டர் எண்ணிக்கை தேர்வு செய்யவும்

குறிப்பு: 

குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கும் நபரிடம், இரண்டு எரிவாயு இணைப்பு இருந்தால், அந்த விவரங்களை உள்ளிடவும்.

18. உள்ளிட்ட விவரங்களை ஒப்புக்கொள்ள, சான்றிதழ் பகுதியில் உள்ள சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும்

19. உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள பதிவு செய்ய பொத்தானை கிளிக் செய்யவும்

20. விண்ணப்பத்தை பதிவு செய்ய பின்னர், உங்களுக்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும்.

Thursday, August 27, 2015

குடும்ப அட்டை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

குடும்ப அட்டை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் :

1 ,குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம்?

தமிழக அரசு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்ணயித்துள்ளது . இப்படிவம் http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf  என்ற இணைய தளத்தில் உள்ளது. பயன்படுத்த விரும்புவோர் படிவத்தினை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து எடுத்து பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம்.

 
Family Card குடும்ப அட்டை


2, விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்பு ஆவணங்கடன் அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் (மண்டல) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவர் வசிக்கும் பகுதி எந்த உதவி ஆணையாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்தால் தொலைபேசி மூலம் இந்த அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியைச் சார்ந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வட்ட வழங்கல் அலுவலர், உதவி பங்கீட்டு அலுவலர்*, (கோயம்புத்தூர் நகரம் மட்டும்) குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வார்கள்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்புகை சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இருந்தபோதிலும் விண்ணப்பம் சென்றடைந்ததை உறுதி செய்துக் கொள்ள ஆதாரமாக ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பது நல்லது.

3, புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு விதிமுறைகள் என்னென்ன?

தனியாக புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையவர் யார்?

1). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

2). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும்.

3). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

4). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் இந்தியாவில் எங்கும் குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது.

5). விண்ணப்பதாரரோ மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ்நாட்டில் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்க கூடாது.

6). விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.

4, குடும்ப அட்டை மனுவினை பரிசீலிக்க பரிசீலனைக்காக உள்ள நடைமுறைகள் என்ன ?

தங்களால் பூர்த்தி செய்யப்*பட்ட விண்ணப்பம் தல ஆய்வுக்கு அனுப்பப்படும். தல ஆய்வுக்கு செல்லும் அலுவலர் விண்ணப்பதாரரின் வீட்டை தணிக்கை செய்து மனுதாரர் முகவரியில் வசிப்பதையும் தனியாக சமையல் செய்வதையும் மற்றும் எரிவாயு இணைப்பு இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்வார்.

மனுதாரரின் வீட்டில் ஆய்வுக்கு வரும் அலுவலரின் அடையாள அட்டையை ( அலுவலக அடையாள அட்டை) அவர் ஆய்வை துவக்குவதற்கு உட்படும் முன் மனுதாரர் கேட்கலாம். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதன் அலுவலர்களின் நேர்மை மற்றும் அவர்கள் கனிவாக நடந்துக்கொள்வதை உறுதி செய்ய விரும்புகிறது. இத்துறை அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலரின் முறையற்ற நடத்தை மற்றும் கையூட்டு கேட்பு தொடர்பான புகார்களை மனுதாரர் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அவர்களுக்கு தயக்கமின்றி தெரிவிக்கலாம்.

மனுதாரர் பூர்த்தி செய்து உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்த புதிய குடும்ப அட்டை மனு பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தணிக்கைக்கு வருவார்கள். 30 நாட்களுக்குள் தணிக்கை அலுவலர்கள் வரவில்லை என்றால் உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் கேட்கலாம்.

அதன்பிறகு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்/ உதவி அணையாளர் மேற்கூறப்பட்ட நிபந்தனைகள்படி விண்ணப்பம் தகுதியுடையதாக இருப்பின், விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்பட்டு குடும்ப அட்டை அச்சடிக்க அனுப்பப்படும்.

 5. மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா?

கூடுதல் ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டியது இருந்தால் தவிர, மனுதாரர் 30 நாட்களுக்கு முன்னதாக உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொள்ள தேவையில்லை

விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் மனுவின் மீதான இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க / மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.

விண்ணப்பம் தகுதியுடையதாக இருந்தால், குடும்ப அட்டை அச்சிட அனுப்பப்படும். அச்சிடப்பட்ட குடும்ப அட்டை உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் பெறப்பட்டவுடன்* அலுவலகத்திலிருந்து ஒப்புகைச்சீட்டுடன் 15 தினங்களுக்குள் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளுமாறு அஞ்சல் அட்டை மனுதாரருக்கு அனுப்பப்படும்.

ஒரு வேளை, விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தை விண்ணப்பித்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மனுதாரருக்கு அஞ்சல் அட்டை மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப படிவத்தில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் குறிப்பிட்டிருந்தால், விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட இறுதி முடிவின் நிலையினை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்

6, விண்ணப்பதாரர் தனது குடும்ப அட்டையினை எவ்விதம் பெற்றுக் கொள்ள வேண்டும்

குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலகத்தில் தயாராக உள்ளது என்ற தகவலை விண்ணப்பதாரர் பெறப்பட்டவுடன், 15 தினங்கக்குள் நேரடியாக திங்கள் அல்லது வெள்ளிக் கிழமை அல்லது அஞ்சல் அட்டை, சிக்கன சேமிப்பு தகவல் / மின்அஞ்சல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பம் சமர்ப்பித்த பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகை சீட்டுடன் கொடுத்து குடும்ப அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.

ஒருவேளை, அசல் குடும்ப அட்டை தொலைந்து விட்டால் , நகல் அட்டை பெற விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக மனுதாரர் குடும்ப அட்டையின் முதல் பக்கமும் கடைசி பக்கமும் நகல் எடுத்து அல்லது குடும்ப அட்டை எண் ,கடையின் குறியீடு எண் ஆகியவற்றை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வேளை, குடும்ப தலைவர் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வர இயலவில்லை என்றால் குடும்ப தலைவர் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் அதிகாரம் அளிப்பு கடிதத்துடன் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள அனுப்பலாம். குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வரும் உறுப்பினரின் கையொப்பத்தினை மனுதாரர் மேலொப்பம் செய்து அங்கீகாரம் அளிப்பு கடிதம் அளிக்க வேண்டும். இந்த அதிகாரம் வழங்கப்பட்ட நபர் விண்ணப்பம் வழங்கிய பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகைச் சீட்டினை சமர்ப்பித்து குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.

உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர் அங்கிகாரம் செய்யப்பட்ட நபர் சந்தேகப்படும் வகையில் இருப்பின் குடும்ப அட்டை வழங்குவதை மறுக்கலாம்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?

தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெற ரூ.5/- கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த தொகை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் / வட்டவழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்படும்.

 7, ரேஷன் கார்டு விண்ணப்பித்து 60 நாட்களுக்கு மேல் தாமதமானால் மனுதாரர் என்ன செய்யலாம்?

ரேஷன் கார்டு விண்ணப்பித்து 60 நாட்களுக்கு மேல் தாமதமானால் மனுதாரர் என்ன செய்யலாம்?
விண்ணப்பதாரர் உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து காலதாமதமான காரணத்தை அறியலாம்.

விண்ணப்பம் வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை நகரம் அல்லது புறநகர் பகுதிகளில் விண்ணப்பதாரர் துணை ஆணையாளர் (நகரம்)வடக்கு, துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு அவர்களிடம் பேசலாம்.
மாவட்டங்களில் மனுதாரர் சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை அணுகலாம்.

உதவி ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனில், தேவைப்படின் மனுதாரர் மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடம் முறையிடலாம்.

8, ரேஷன் கார்டு விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் யாரிடம் முறையீடு செய்வது ?

சென்னை நகர் மற்றம் புற நகர் பொறுத்த வரையில் துணை ஆணையாளர் (நகரம்) வடக்கு மற்றும் துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அவர்களிடம் மேல் முறையீடு செய்யலாம் . 

பிற பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

9, ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் பொய்யான அல்லது தவறான தகவல்களை அளித்தால்
  
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு தோராயமாக ஆண்டுக்கு ரூ.2000/- மானிய செலவு ஆகிறது என்பதை விண்ணப்பதாரர் அறிந்து கொள்ள வேண்டும். எனவே குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான விவரங்கள் மற்றும் தவறான முகவரி அளித்தல் போன்றவை பொது விநியோக திட்ட பொருட்களை கடத்துதலுக்கு வழிகோலும் என்பதுடன் 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பண்ட சட்டம் பிரிவு 7 ன் கீழ் தண்டனைக்குரியதாகும். இத்தகைய விண்ணப்பதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டப் படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் சரியான குடும்ப உறுப்பினரின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்

10, குடும்ப அட்டைகளின் வகைகள்: (விருப்பங்களின் அடிப்படையில் )

அனைத்து அத்தியாவசிய பொருட்கள் .குடும்ப அட்டைகள் ( பச்சை நிற அட்டைகள் ) அரிசி மற்றும் இதர இன்றியமையாப் பொருட்கள் பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பச்சை நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.

சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் ( வெள்ளை நிற குடும்ப அட்டைகள்) அரிசிக்கு பதிலாக சர்க்கரை பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சர்க்கரை விருப்ப அட்டை ( வெள்ளை நிறம் ) வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி*க்கு பதிலாக 3 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படுகிறது.

எந்த பொருளும் பெற விருப்பமில்லை என்ற குடும்ப அட்டைகள். வெள்ளை நிற குடும்ப அட்டைகள்: பொது விநியோக திட்டத்தின் கீழ் எந்த பொருளும் வாங்க விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு, எப்பொருளும் வேண்டா ( வெள்ளை நிறம் ) குடும்ப அட்டை வழங்கப்படுகின்றன.

Family Card Application Form


11, பெயர் நீக்கம் மற்றும் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?

ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்றால் குடும்ப தலைவர் விண்ணப்ப படிவம் மற்றும் ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும். குடும்ப தலைவர் மரணம் அடைந்திருந்தால், இறப்பு சான்றுடன் அவரது வாரிசுதாரர் மனு கொடுக்கலாம். பெயர் சேர்க்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குடும்ப தலைவர் அதற்கான விண்ணப்பிக்க படிவத்தை அளிக்க வேண்டும்.