Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Showing posts with label கடன். Show all posts
Showing posts with label கடன். Show all posts

Monday, October 24, 2016

பாண்ட் முதலீடு : இதர தங்கத் திட்டங்களை விட சிறந்தது ஏன்? தங்க கடன் பத்திர முதலீடு கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் :

அனைவருக்கும் தீபாவளி போனஸ் கிடைத்திருக்கும். இந்தப் பணத்தை கொண்டு பலரும் தங்கத்தை வாங்கி வைப்பார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு தங்க கடன் பத்திர (SOVEREIGN GOLD BOND)  விற்பனையை இன்று (அக்டோபர் 24, 2016) தொடங்கி இருக்கிறது. இந்த பாண்டுகளில் நவம்பர் 2, 2016 வரை முதலீடு செய்யலாம்.

பாண்ட் முதலீடு : இதர தங்கத் திட்டங்களை விட சிறந்தது ஏன்?

வழக்கத்தை விட, தீபாவளிக்காக 10 கிராம் தங்க பாண்டு முதலீட்டுக்கு ரூ.500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமம் கூட வாங்கலாம். அதற்கும் இந்த தள்ளுபடி (கிராமுக்கு ரூ.50) கிடைக்கும்.

பாண்ட் முதலீடு : இதர தங்கத் திட்டங்களை விட சிறந்தது ஏன்
பாண்ட் முதலீடு : இதர தங்கத் திட்டங்களை விட சிறந்தது ஏன்
தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், பாம்பே பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இந்த பத்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

முதிர்வு காலம் 8 ஆண்டுகள். பணம் தேவைப்படும்பட்சத்தில் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும். இந்த தங்க கடன் பத்திரங்களை கடன் வாங்கும் போது அதற்கு ஜாமீனாக கொடுக்கலாம்.

இந்த தங்க கடன் பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக கொடுக்க மாட்டார்கள். முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாக தருவார்கள். அதனை கொண்டு தேவைப்படுபவர்கள் தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த கோல்டு பாண்டு முதலீடு, இதர தங்கத் திட்ட முதலீடுகளை விட ஏன் சிறந்தது என்பதை பார்ப்போம்.

தங்கத்தில் முதலீடு செய்ய ஆபரணம், தங்க நாணயம், கோல்டு இடிஎஃப் (காகித தங்கம்), கோல்டு சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் என பல வழிகள் உள்ளன.

1. ஆபரணத்தங்கம் வாங்கும் போது செய்கூலி, சேதாரம் இருக்கும். இது கோல்டு பாண்டில் கிடையாது.

2. ஆபரணத் தங்கம், நாணயம் விற்கும் போது சேதாரம், பழைய நகை என்று விலை குறைக்கப்படும். கோல்டு பாண்டுக்கு அப்போதைய தங்கத்தின் விலை குறையாமல் கிடைக்கும்.

3. கோல்டு இடிஎஃப், கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்ட்களில் நுழைவு கட்டணம், நிர்வாகக் கட்டணம் உண்டு. கோல்டு பாண்டு திட்டத்தில் இந்தக் கட்டணங்கள் எதுவும் கிடையாது.

4. கோல்டு பாண்டில் ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு தங்கத்தின் விலை ஏற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.75% வட்டி  கிடைக்கும். ஆபரணம், தங்க நாணயம், கோல்டு இடிஎஃப் (காகித தங்கம்), கோல்டு சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் விலை ஏற்றம் மட்டுமே லாபம்.

5. தங்க முதலீட்டு திட்டங்களில், கோல்டு பாண்டுக்கு மட்டும்தான் மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்) கிடையாது.

தங்க கடன் பத்திர முதலீடு கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் :

தங்க முதலீடு மூலம் லாபம் பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக  தங்க கடன் பத்திர (SOVEREIGN GOLD BOND) முதலீடு இருக்கிறது. இதன் ஐந்தாம் கட்ட தங்கப் பத்திர வெளியீடு, தொடங்கி உள்ளது . இதில் செப்டம்பர் 9 வரை முதலீடு செய்யலாம்.

தங்க கடன் பத்திர முதலீடு கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

அதில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான 10 முக்கிய காரணங்களை பார்ப்போம்.

1. இப்போது ஒரு கிராம் மதிப்புள்ள தங்க கடன் பத்திரத்தில் கூட முதலீடு செய்யலாம். ரூ. 3150 (24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை) இருந்தால் முதலீட்டை ஆரம்பித்துவிட முடியும்.  தேவைக்கு ஏற்ப இந்த தங்க கடன் பத்திரங்களை 1, 5, 10, 50 மற்றும் 100 கிராம் மதிப்பில் வாங்கலாம்.

2. நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) ஒருவர் அதிகபட்சம் 500 கிராம் மதிப்புள்ள தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

3. இந்தத் தங்க கடன் பத்திரங்களை காகித வடிவில் அல்லது டீமேட் (எலெக்ட்ரானிக்) வடிவில் நமது வாய்ப்பு வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

4. முதலீட்டு நோக்கில் தங்க நகையாக வாங்கும் போது உள்ள செய்கூலி, சேதாரம்  இதில் இல்லை.

 5. ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு ஆண்டுக்கு 2.75% வட்டி வருமானமாக  கிடைக்கும். தங்கத்தின் விலை ஏற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.75% வட்டி  கிடைக்கும். வட்டி 6 மாதத்துக்கு ஒரு முறை தரப்படும்.

6. தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள்,  பாம்பே பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இந்த பத்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன என்பதால் முதலீடு செய்வது எளிது.

7.  பிஎஸ்இ, என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இந்த தங்க கடன் பத்திரங்கள் மீது வர்த்தகம் நடப்பதால் பணத் தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ள முடியும்.

8. மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்) கிடையாது.

9. முதிர்வு காலம் 8 ஆண்டுகள். பணம் தேவைப்படும்பட்சத்தில் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும். இந்த தங்க கடன் பத்திரங்களை கடன் வாங்கும் போது அதற்கு ஜாமீனாக கொடுக்கலாம்.

10. ரூ. 20,000 வரையிலான முதலீட்டுக்கு ரொக்கப் பணமாக செலுத்தலாம்.  இதற்கு மேல் என்றால் டிடி, செக் கொடுக்கலாம்.  ஆன்லைன் மூலமும் முதலீடு செய்ய முடியும்.

இந்த தங்க கடன் பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக தர மாட்டார்கள். முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாக தருவார்கள். அதனை கொண்டு தேவைப்படுபவர்கள் தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்.

Thursday, September 8, 2016

உங்கள் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவுள்ள பயனாளிகளின் விவரங்கள் பற்றி கூட்டுறவுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

2016-ல் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அமைந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டன.

தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே வாக்குறுதிகள் அளித்திருந்தபடி பதவியேற்ற முதல் நாளே விவசாயிகளின் சிறு குறு கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டு அறிவிப்பும் வெளியிட்டார். 

உங்கள் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவுள்ள பயனாளிகளின் விவரங்கள் :

தற்போது விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவுள்ள பயனாளிகளின் விவரங்கள் கூட்டுறவுத் துறையின் இணையதளத்தில் (www.tncu.tn.gov.in) or http://www.svnimaging.org/cooperative/ வெளியிடப் பட்டுள்ளது. 

விவசாய கடன் தள்ளுபடி விவரங்கள் பற்றி கூட்டுறவுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
கடன் தள்ளுபடி தொடர்பாக, ஏதாவது ஆட்சேபணைகள் இருந்தால் சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கலாம்.  முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டதை தொடர்ந்து, கூட்டுறவு-உணவுத் துறை சார்பில் அரசு உத்தரவும், வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. கடன் தள்ளுபடி பெறுவதற்கு 16 லட்சம் பேர் தகுதி படைத்தவர்கள் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், மாவட்டத்தின் பெயர், கடன் பெற்ற தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதை உள்ளீடு செய்தால், கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறியலாம்.  பட்டியலில், வரிசை எண், கடனின் வகை, கடன் பெற்றவரின் பெயர், சங்க உறுப்பினரின் எண், கடனின் எண், எந்த நோக்கத்துக்காக கடன் வாங்கப்பட்டது,நிலத்தின் அளவு கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளோருக்கு  கடன் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஏதேனும் விவசாயிகளின் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது கூடுதல் நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் சட்ட விரோதமாக பயன் பெற்றாலோ அது குறித்து அதிகாரிகளிடம் முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  கடன்கள் தொடர்பாக, வட்ட அளவில் முறையீடு செய்யும் காலம் முடிவடைந்துள்ளது. இதில் கோரிக்கைகள் ஏதும் ஏற்கப்படாவிட்டால், மாவட்ட பதிவாளர் அளவில் அடுத்த 2 வாரங்களுக்குள் முறையீடு செய்யலாம். அதிலும் கோரிக்கைகள் தள்ளுபடி செய்யப்பட்டால் இணைப்பதிவாளரிடம் மறு மேல்முறையீடு செய்யலாம். அக்டோபர் முதல் வாரத்துக்குள் அனைத்தும் மேல்முறையீடுகளும் செய்யப்பட்டு அவை தீர்க்கப்படும்.

கடன் வழங்கப்பட்ட தேதியில் 5 ஏக்கருக்குள் நிலம் இருந்திருப்பது அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும். மார்ச் 31-ஆம் தேதிக்குள் கடன் பெற்றோருக்கு மட்டுமே தள்ளுபடி திட்டம் பொருந்தும். அதற்குப் பிறகு யாரேனும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தியிருந்தால் அந்தப் பணம் உரிய முறையில் விவசாயிக்கு கூட்டுறவுத் துறை அளிக்கப்படும். மேலும், கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு புதிதாக கடன் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tuesday, June 2, 2015

எல்.ஐ.சி. பாலிசியை கொண்டு கடன் பெறுவது எப்படி?

உங்கள் எ.ஐ.சில் பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், அதற்கு நீங்கள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாக எல்.ஐ.சி. பாலிசியை வைத்திருப்பவர்கள் மட்டுமே கடன் பெறும் தகுதியை பெறுவார்கள்.
பாலிசியின் தொகை மற்றும் காலத்தை பொறுத்து கடன் தொகை மாறுபடும். இது பாதுகாக்கப்பட்ட கடன் என்பதால் மற்ற கடன்களை காட்டிலும் வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்.
எல்.ஐ.சி. பாலிசியை கொண்டு கடன் பெறுவது எப்படி
எல்.ஐ.சி. பாலிசியை கொண்டு கடன் பெறுவது எப்படி

எப்படி விண்ணப்பிப்பது?

எல்.ஐ.சி. பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு ஒருவர் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பம் எல்.ஐ.சி.யின் வலைத்தளத்தில் அல்லது ஏஜென்ட் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த பாரத்தை எல்.ஐ.சி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
பெயர் மாற்றம்:
பாலிசியை வைத்து வாங்கப்படும் கடனின் வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் அந்த கடனுக்கான விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் இந்த பாலிசி நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்படும்; அதாவது உங்கள் அசல் எல்.ஐ.சி. பாலிசியை ஒப்படைக்க வேண்டும்.
வட்டி விகிதங்கள்:
இந்த கடன்களுக்கு, வட்டி விகிதமாக 9-10 சதவீதம் வரை வசூலிக்கப்படும். இதனை அறையாண்டிற்கு ஒரு முறை கட்ட வேண்டும்.
கடன் தொகை:
இந்த பாலிசியின் கீழ் அதிகபட்ச கடன் தொகையாக, ஒப்படைத்த பாலிசியின் மதிப்பில் (போனஸின் ரொக்க மதிப்பு உட்பட) இருந்து 90% (பேய்ட் அப் பாலிசி என்றால் 85%) அளிக்கப்படும்.