Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Friday, October 14, 2016

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்க ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்குகியது

தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிகிறது. புதிய ரே‌ஷன்கார்டு ‘ஸ்மார்ட்கார்டு’ அளவில் வழங்கப்பட உள்ளது.

இதனால் பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக 2017 ஜனவரி முதல் புதிய ஸ்மார்ட் கார்டு அனைவருக்கும் வழங்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் குடும்ப அட்டையில் உள்ள விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்க ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்குகியது
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்க ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்குகியது

ரே‌ஷன் கடைகளில் நவீன விற்பனை எந்திரம் (பாயிண்டஸ் ஆப் சேல்) அமைக்கப்பட்டு அதில் குடும்ப அட்டைதாரர்களின் முழு விவரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் விவரம், செல்போன் எண், சிலிண்டர் எண்ணிக்கை போன்றவற்றோடு ஆதார் எண்களும் பதிவு செய்யப்பட வேண்டும்.

குடும்ப அட்டை எண் முதல் அனைத்து விவரங்களும் அந்த கருவி மூலமாக கடை ஊழியர் பதிவு செய்வார். ஆதார் அட்டையை அக்கருவி ஸ்கேன் செய்து கொள்ளும்.

இந்த பணி இதுவரையில் 13 மாவட்டங்களில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான அளவில் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக திருப்பூர், கோவை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தற்போது தொடங்கியுள்ளது. சென்னையில் 23 ரே‌ஷன் கடைகளில் மட்டும் பரீட்சார்ந்த முறையில் தொடங்கப்பட்டது.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் குடும்ப அட்டை தகவல்கள் பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. தென் சென்னையில் 6-ந்தேதியும், வட சென்னையில் 7-ந்தேதியும் தொடங்குகிறது. 2 ஆயிரம் ரே‌ஷன் கடைகளில் நவீன கருவி மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைகளின் விவரமும் பதிவு செய்யப்படும்.

இந்த பணி தொடங்குவதற்கு முன்பாக நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பொது மக்களிடம் இருந்து ரே‌ஷன் கார்டு விவரங் களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி கள் ஆலோசனை வழங்கு கின்றனர்.

இந்த பணி 2 மாதம் வரையும் நடைபெறும். நவம்பர் 1-ந்தேதி ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கும் பணி தொடங்கும். டிசம்பர் மாதம் ஸ்மார்ட் கார்டுகள் தயாராகிவிடும். ஜனவரியில் இருந்து பயன்படுத்த கூடிய வகையில் பழைய கார்டுகளை பெற்றுக் கொண்டு புதிய கார்டு வழங்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் நவீன கருவி மூலம் ஆதார் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் செப்டம்பர் 6-ந்தேதி இந்த பணி தொடங்குகிறது. வழங்கல் பதிவேட்டில் உள்ள குடும்ப அட்டை விவரங்களை ரே‌ஷன் கடை ஊழியர் இந்த கருவியில் முதலில் பதிவு செய்துவிடுவார்.

அதன் பின்னர் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் போது குடும்ப தலைவரிடம் சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கேட்டு பதிவு செய்யப்படும்.

அடுத்த முறை கடைக்கு வரும் போது ஆதார் அட்டை கொண்டு வந்து பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்படும். ஒவ்வொரு ரே‌ஷன் கடையிலும் தினமும் 100 முதல் 200 குடும்ப அட்டைகள் விவரம் பதிவு செய்யப்படும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை இருந்தாலும் பதிவு செய்யலாம். ஒரு மாதம் இந்த பணி நடைபெறும். அதன்பிறகும் பதிவு செய்யாதவர்களுக்கு கடைசி வாய்ப்பும் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் போது ‘பில்’ வழங்கப்படாது. அந்த கார்டை கருவியில் காட்டினால் போதும் அவர்களுக்கு உரிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

பொருட்கள் வழங்குவது குறித்த தகவல் உடனடியாக குடும்ப தலைவர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். சென்று விடும். செல்போனில் வந்த தகவலை காண்பித்து தான் பொருட்களை வாங்க முடியும். இதனால் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு இல்லை.

தமிழக அரசு பொது விநியோக திட்டத்தினை காகிதமில்லா நிர்வாகமாக மாற்றி விநியோகத்தினை மேம்படுத்தும் நோக்குடன் பொது விநியோக திட்டத்தில் அதிக வெளிப்படைதன்மை, துரித சேவை, அத்தியாவசிய பொருட்களின் எடை மற்றும் செலுத்தப்பட்ட தொகை குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், கடை திறப்பு மற்றும் இருப்பில் உள்ள பொருட்களின் அளவு ஆகியவை அறிந்து கொள்ள மேம்படுத்தப்பட்ட நுகர்வோர் இணையதள சேவை மூலம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற இயலும்.

அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள விற்பனை எந்திரத்தில் 100 சதவீத குடும்ப அட்டைகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆதார் எண் பதிவேற்றம் செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது மறுக்கப்படமாட்டாது.

இருப்பினும் ஆதார் எண் பதிவேற்றம் செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் தாங்களாக முன்வந்து நியாய விலைக்கடையில் உள்ள விற்பனையாளரிடம் விற்பனை எந்திரத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரத்தை பதிவேற்றம் செய்து இத்திட்டம் சிறப்பாகம், வெளிப்படையாகவும் நடைமுறைப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment