Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Tuesday, July 21, 2015

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வி தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவேண்டும்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகை விண்ணப்பங்களை பெற சென்னை நந்தனம் தொழில் திறனற்றோருக்கான வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொள்ளவேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 5 ஆண்டுகளுக்கும் மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.

கிண்டி மகளிர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்கவேண்டும்.

மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment