Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Thursday, July 21, 2016

தமிழக சட்டசபையில் 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நீங்கள் கவனிக்க வேண்டியவை ?

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, கடந்த பிப்ரவரி 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று திருத்தப்பட்ட முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்பார்த்ததை போலவே, வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

மேலும், வரி ஏதுமற்ற பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பட்ஜெட்டில், வரி விதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே இது வரியற்ற பட்ஜெட்டாக அமைந்தது.

தமிழ்நாட்டின் கடன் அளவு 2.52 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ஓபிஎஸ் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் அறிக்கையில் நீங்கள் கவனிக்க வேண்டியவை

தமிழக பட்ஜெட் அறிக்கையில் நீங்கள் கவனிக்க வேண்டியவை :

7 சம்பள கமிஷன் அறிவிப்பு:

மத்திய அரசின் 7 சம்பள கமிஷன் அறிவிப்புகளை விரைவாக அமல்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என நிதியமைச்சர் தமிழக அரசு சார்பாக உறுதியளித்துள்ளார்.

வறுமை ஒழிப்பு:

நாட்டில் வறுமையை ஒழிக்கும் வகையில் முக்கியப் பணிகளைச் செய்யத் தமிழ்நாடு அரசு 355.81 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

நகரப்புற வளர்ச்சி:

தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களையும் தாண்டு முக்கியமான நகரங்களில் வளர்ச்சி மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளைச் செய்ய 350 கோடி ரூபாய் நிதித்தொகையை அறிவித்துள்ளது.

டாஸ்மாக் :

தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாகக் கொண்டு வருவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்ன முதல்வர் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடினார் இதனால் தமிழக அரசுக்கு 6,636.08 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மின்சார மானியம்:

100 யூனிட் குறைவாக இருக்கும் அனைத்து வீடுகளுக்குத் தமிழக அரசு இலவச மின்சாரம் என்ற திட்டத்தை அறிவித்தது. இதனால் 1,607கோடி ரூபாய் வருவாய் இழப்பு. மின்சாரத் துறைக்கான மானியத்திற்காக 9,007 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சோலார் மின்சாரம்:

அடுத்த ஒரு வருடத்தில் தமிழ்நாட்டில் 20,000 வீடுகளுக்கான மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்யும் அளவிற்கு 420 கோடி ரூபாய் முதலீட்டு புதிய சோலார் மின்சாரத் திட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது

மின்சார துறை :

அடுத்த ஒரு ஆண்டில் அனல் மின்சாரம் 13000 மெகாவாட்டாகவும், சூரிய மின்சாரம் 3000 மெகாவாட்டாகவும் அதிகரிக்கப்படும். 5 ஆண்டுகளில் இதை 18,500 மெகாவாட்டாக உற்பத்தி அதிகரிக்கப்படும். மின் துறைக்கு ரூ.13,856 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

போக்குவரத்துறை:

புதிய பேருந்துகள் வாங்க 125 கோடி ரூபாயும், இத்துறை வளர்ச்சிகளுக்காக 1,295.08 கோடி ரூபாய் நிதியைத் தமிழக ஒதுக்கியுள்ளது. இதனுடன் வருவாய் துறைக்கு 5,600 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்துள்ளது.

உழவர் மற்றும் விவசாயம்:

உணவு தானிய உற்பத்தி இலக்கு ரூ147 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளது, இதனுடன் உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ206 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மருந்துவக் காப்பீடு:

முன் கலைஞர் காப்பீடாக இருந்து தற்போது முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக மாறியுள்ள இந்த மருந்துவக் காப்பீடு திட்டத்திப்கு ரூ 928 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டம்:

சென்னையில் பல ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த மெட்ரோ ரயில் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்த நிலையில், 2வது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்தார்

முதலீட்டாளர்கள் மாநாடு :

முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்களிடம் இருந்து இது வரை ரூ.23,500 கோடி முதலீடாக வந்துள்ளன.

ஃபோர்டு ஆராய்ச்சி மையம் :

கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு வாகனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான ஆராய்ச்சி மையத்தைத் துவங்க உள்ளது.

தொழில் துறை :

தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சிக்காக ரூ. 2,104.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலைத் துறை :

ரூ. 1541 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இருக்கும் இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலைகள் விரிவாக்கம் செய்யபடும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் :

100 நாள் வேளை திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.7.155 கோடி நிதி ஒதுக்கீடு.

ஊதியக்குழு பரிந்துரைகள் :

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும்.

No comments:

Post a Comment