இந்திய ரிசர்வ் வங்கியான (RBI Assistant Officers) வங்கியில் பல்வேறு மாநிலங்களின்
அலுவலகங்களில் காலியாக உள்ள 506 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னைக்கு மட்டும் 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
![]() |
RBI Assistant Officer Recruitment Exam |
காலியிடங்களின் எண்ணிக்கை: 506
பணி: உதவியாளர்
தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.06.1987 - 01.06.1997 தேதிக்கும் இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. எஸ்சி,
எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.50. இதனை
ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.07.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள்
அறிய https://goo.gl/pqYZEf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment