குரு பெயர்ச்சி 2015 - நட்சத்திர பலன்கள் :
அசுவினி:
உறவினர்களின் அன்பும், ஆதரவும் உண்டாகும் பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். புதிய வீடு,வாகனம் வாங்க யோகமுண்டு. தொழிலில் வளர்ச்சியும் லாபமும் அதிகரிக்கும்.
பரணி:
எதிர்பார்த்த நன்மை விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் ஆடம்பர முறையில் நிறைவேறும். தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம்.
![]() |
நட்சத்திர பலன்கள் |
கார்த்திகை:
பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பணியாளர்களுக்கு பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். மாணவர்கள் வெளியூர், வெளிநாட்டில் படிக்க வாய்ப்புண்டு.
வாகன பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும்.
ரோகிணி:
எதிலும் நிதானத்தைப் பின்பற்றுவது அவசியம். பெற்றோர் உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். அத்யாவசியச் செலவுக்காக கடன் வாங்க நேரிடும்.
மிருகசீரிடம்:
வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு. மனம் போல மங்கல நிகழ்ச்சி நடத்தி மகிழலாம். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்வது நல்லது.
திருவாதிரை:
பூர்வீகச் சொத்து மூலம் லாபம் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் கூடும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
![]() |
மன்மத வருட நட்சத்திர கந்தாய பலன் |
புனர்பூசம்:
கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். பணியாளர்களுக்கு விரும்பிய சலுகை கிடைக்கும். பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து முன்னேறுவர்.
பூசம்:
பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழிலில் நேரடி கவனம் செலுத்துவது அவசியம். பெரியவர்களின் வழிகாட்டுதல் நன்மைக்கு வழிவகுக்கும். பிள்ளைகளின் செயல்பாடு மனதிற்கு ஆறுதல் தரும்.
ஆயில்யம்:
குடும்பத்தில் குழப்பம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் உயரும். சேமிக்கவும் வாய்ப்புண்டு. வாகனப் பயணத்தில் விழிப்புடன் இருக்கவும். மாணவர்களுக்கு கல்விக்கடன் எளிதாக கிடைக்கும்.
மகம்:
திறமையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். சுபவிஷயத்தில் தடை நீங்கி மளமளவென நிறைவேறும். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது. அரசு விஷயத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.
பூரம்:
குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது. பூர்வீகச் சொத்து பிரச்னை நல்ல முடிவுக்கு வரும். தொழிலுக்காக வங்கி நிதியுதவி எளிதில் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைக்க முயல்வர்.
உத்திரம்:
புதிதாக வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் கூடும். பணியாளர்களுக்கு மனம் போல இடமாற்றம் கிடைக்கும்.
பெண்களின் மனம் போல சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
No comments:
Post a Comment