ஜோதிடத்தில் பொதுவாக குருவும் சுக்கிரனும் சுப கிரகங்களாக கூறப்படுகிறார்கள். வசதி வாய்ப்புடன் வாழ்பவர்களை பார்த்து சுக்கிர தசை அடிக்கிறது என்பார்கள். சுக்கிரன் தனி மனித செல்வத்திற்க்கு காரகர் குரு பொது செல்வத்திற்க்கு காரகர் எனவே குரு பெயர்ச்சி எல்லோராலும் எதிர்பார்க்கும் தன்மையுடையதாகிறது. குரு பகவான் கொடுக்கும் பலன்களைத் தெரிந்து கொள்வோம்
குரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்து இவரது திசை இளமையில் வந்தால் கல்வியில் முதன்மை நிலை உண்டாகும். நடு வயதில் வந்தால் சகல பாக்கியங்களும் ஏற்படும். இறுதிப்பகுதியில் வந்தால் சந்ததிகள் செழிப்பார்கள். கோசாரத்தில் குரு இருக்கும் ஸ்தானத்திற்கு ஐந்தில் சூரியன் வரும் பொழுது வக்கிர கதி ஏற்படும். ஒன்பதில் வரும் பொழுது வக்ர நிவர்த்தி ஏற்படும். ஜாதகர் பிறக்கும் பொழுது குரு வக்கிரத்தில் இருந்தால் குரு வக்கிரம் அடையும் பொழுது அதிக நன்மைகளை ஏற்படும். பொதுவாக குரு இருக்கும் இடம் கெட்டுப்போகும், பார்க்கும் இடங்கள் பலம் பெறும். சனி இருக்கும் இடம் பலம் பெறும், பார்க்கும் இடம் கெடும்.
பொதுவாக ஜனன லக்கினம், சந்திரன் இருக்கும் ராசி, ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்தில் இருந்து 2-5-7-9-11 ஆகிய இடங்களில் கோசாரத்தில் குரு வந்தால் யோகம் தரும். பிற ஸ்தானங்களான 1-3-4-6-8-10-12 ஆகிய ஸ்தானங்களில் குரு வரும் போது தீய பலனைத் தருவார் என்பது நூல்களின் கருத்து. குரு பார்வை படும் ஸ்தானங்கள் பலம் பெரும். குரு தான் இருக்கும் ஸ்தானங்களிலிருந்து ஐந்து,ஏழு மற்றும் ஒன்பது ஆகிய ஸ்தானங்களைப் பார்வையிடுவார்.
குரு சிம்மத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக தனுசு ராசியையும் ஏழாம் பார்வையாக கும்பம் ராசியையும் ஒன்பதாம் பார்வையாக மேஷம் ராசியையும் பார்வையிடுகிறார்.
நல்ல பலன் அடையும் ராசிகள் மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம் தீய பலன் அடையும் ராசிகள் ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் குரு தரும்.
![]() |
ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன் அறிந்து கொள்வோம் |
ரிஷபம்:
சுக்கிரன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மிகவும் மென்மையானவர்களாகவும் மற்றவர்களை அனுசரித்து நடக்க கூடியவர்களாகவும், வசீகரப் பேச்சினால் பிறரை கவரக் கூடியவர்களாகவும் இருப்பிர்கள். நினைத்த காரியத்தை செம்மையாக முடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள் நீங்கள்.
சூழ்நிலைக்கேற்றவாறு தங்களை மாற்றி கொள்ளும் பாங்குடைய இன்பமான வாழ்க்கை வாழும் ரிஷப ராசி அன்பர்களே இது வரை மூன்றாமிடத்தில் குரு இருந்த பொழுது துரியோதனன் படை மாண்டதும் என்ற நிலை நீடிக்குமா.?அல்லது விமோசனம் கிட்டுமா என்ற ஏக்கம் தான். ராசிக்கு நான்காமிடத்தில் குரு வந்தபோது தருமபுத்திரர் வனவாசம் போனாதும் என்பது பாடல். அது போல நடக்குமா என்றால் அப்படியில்லை.
உங்கள் ராசி நாதன் சுக்கிரனுக்கு பகை கிரகமான குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டுக்கும் பதினொன்றிற்கும் அதிபதியான குரு பகவான் நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் பொழது உடல் உபாதைகள் ஏற்படும்.வீட்டில் நிம்மதியும் சுகமும் குறையும், .வாலிபர்களுக்கு பெண்களால் வீண்பழி உண்டாகும், வாகன செலவுகள் அதிகரிக்கும் தன் வீட்டில் வசிக்க முடியாமல் வெளியூர் சென்று வசிக்க நேரிடும், கல்வியில் தடை வரக் கூடும், உற்றார் உறவினர் பகை வரும். குருசிம்மம் ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக எட்டாம் வீட்டை பார்ப்பதால் உடல் உபாதைகள் விரைவில் குணமாகும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீண் வம்புகள் கஷ்டத்தைத் தராது மனதில் ஏற்பட்டிற்கும் பயம் விலகும் மற்றும் மனைவி மூலமாக தனவரவு ஏற்படும்.
சிம்மத்தில் இருந்து ஏழாம் பார்வையாக பத்தாம் பாவத்தை பார்ப்பதால் முடங்கிக்கிடந்த தொழில் வளர்ச்சி பெறும் உத்தியோகத்தில பதவி உயர்வு கிடைக்கும். சிம்மம் ராசியில் இருந்து ஒன்பதாம் பார்வையாக பன்னிரெண்டாம் இடத்தை பார்ப்பதால் குடும்பத்தில் தடைபட்டு நின்ற சுபகாரியங்கள் நடைபெறும் தீர்த்த யாத்திரை சென்று வர வாய்ப்புகள் உண்டாகும்.
உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பதால் கௌரவத்துக்கு பங்கம் ஏற்படாது.
கண்ட சனி நடப்பதால் எல்லா விசயங்களிலும் சற்று கவனமாக நடப்பது நன்று.
No comments:
Post a Comment