புதுடில்லி: 'பாமரருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும்' என்ற நோக்கத்தில், பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட, 'பிரதம மந்திரி ஜன் தன்' திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார்.இதுதொடர்பாக, அனைத்து வங்கிகளின் தலைவர்களுக்கும், அவர் அனுப்பியுள்ள மின்னஞ்சல் கடிதம்: 'அனைத்து வீடுகளுக்கும், வங்கி கணக்கு இருக்க வேண்டும்' என்ற நோக்கத்தில், நாளைக்குள் (ஜன., 26), 10 கோடி வங்கி கணக்குகள் துவக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அவசியம் :
அதற்கு முன்னதாகவே, துவக்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கை இலக்கை மிஞ்சி விட்டது. குறுகிய காலத்தில், 11.5 கோடி புதிய வங்கி கணக்குகளை துவக்கியதன் மூலம் நாட்டில் உள்ள, 99.74 சதவீத வீடுகள், வங்கிச் செயல்பாடுகளின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. அனைத்து வங்கிகளும், தங்களது நிகரற்ற சேவை மூலம் பிரதமரின் ஜன் தன் திட்டத்தை வெற்றி பெறச் செய்தது பெருத்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக, வங்கிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த விஷயத்தில், இன்னும் முனைப்புடன் செயல்பட்டு, மீதமுள்ளவர்களும் வங்கி கணக்கு துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், ஆதார் அட்டையை பரவலாக்கும் முயற்சியும் அவசியம். அதற்கு, வங்கி அதிகாரிகள், 'ரூபே' அட்டை மற்றும் ஆதார் அட்டை சார்ந்த பணப் பரிமாற்றங்களை, கிராமப்புறங்களில் இருந்து துவங்க வேண்டும்.
வங்கியின் ஒவ்வொரு வாடிக்கையாளரும், ஆதார் அட்டை பெற்றுள்ளாரா என்பதை உறுதி செய்து, அதை அவரது வங்கிக் கணக்குடன் சேர்க்க வேண்டும். வங்கிகளின் அனைத்து வாடிக்கையாளர் கணக்குகளிலும், ஆதார் விவரங்கள் இடம் பெறுவது அவசியமாகும். புதிய வங்கி கணக்குகளை துவக்குவதில் காட்டிய அக்கறையும், முனைப்பையும், அக்கணக்குகளுடன் ஆதார் அட்டை விவரங்களை சேர்ப்பதிலும் வங்கிகள் காட்டும் என, நம்புகிறேன். 'துவக்கம் என்பதே, பாதி முடிந்த மாதிரி' என்று கூறுவர். எனவே, வங்கி கணக்கு துவக்கியதில் கிடைத்த வெற்றியை கொண்டு, அனைத்து மக்களும் கடன், காப்பீடு, ஓய்வூதிய சேவைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் பெற, வழிவகை செய்ய வேண்டும். வாடிக்கையாளர் சேவையின் தரம் உயர்வாக இருக்க வேண்டும்.
இது, ஜன் தன் திட்டத்தின், இரண்டாம் கட்ட அம்சமாகும். வங்கி கணக்கு இல்லை என்பதே, முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு தடைக்கல்லாக இருந்தது. இப்போது, அந்த தடை அகன்று விட்டது. நேரடி மானிய திட்டங்கள் மூலம் ஏற்கனவே மக்களுக்கு பயன்கள் கிடைக்க துவங்கி விட்டது. இது, மக்களுக்கு மட்டுமின்றி, வங்கிகளுக்கும் பயன் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஜன் தன் திட்டம் துவங்கும்போது, இலக்கை எட்டுவது சாத்தியமா என்ற அச்சம், வங்கிகளுக்கு இருந்திருக்கும். அவை, முடியாது என்று நினைத்ததை முடித்துக் காட்டியுள்ளன. இந்த சாதனை, ஊக்குவிப்பை அளித்து, நம் கனவை நனவாக்க துணை புரியும்.
நன்றி:
ஜன் தன் திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதன் மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமான, மேம்பட்ட வாழ்வு கிடைக்க துணை புரிந்தவர்கள் ஆகியுள்ளோம். இதன் மூலம் தேசத்தை முன்னெடுத்துச் செல்வதில், வங்கிகள் ஆற்றிய பங்கிற்கு நன்றி. இவ்வாறு, மோடி தெரிவித்துள்ளார்.
ரேஷன் பொருட்கள் மானியம் எப்படி?:
ஜன் தன்' திட்டத்தை, 2014 ஆகஸ்ட் 28ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். 2015 ஜன., 26க்குள், 7.5 கோடி கணக்குகளை துவக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பின், 10 கோடியாக உயர்த்தப்பட்டது.
* ஒரு குடும்பத்திற்கு ஒரு வங்கி கணக்கு வீதம், இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு துவக்குவோருக்கு, ? லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு, ?? ஆயிரம் ரூபாய் ஆயுள் காப்பீடு, 5,000 ரூபாய் ஓவர் டிராப்ட் வசதி மற்றும், 'ரூபே' டெபிட் கார்டு போன்றவை வழங்கப்படுகின்றன.
* மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், அரசு ஓய்வூதியதாரர்கள், மூலவரி பிடித்தம் அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், 'ஆம் ஆத்மி பீமா யோஜனா' திட்ட பயனாளிகள், ஆயுள் காப்பீடு வசதி பெற முடியாது.
* மத்திய அரசின், 'பாஹல்' என்ற நேரடி மானிய திட்டத்தின் கீழ் இணைந்தோரின் வங்கி கணக்கில், இந்தாண்டு, 1ம் தேதி முதல், சமையல் எரிவாயு மானியம் வரவு வைக்கப்படுகிறது.
* இதன்படி, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு, 568 ரூபாய் மானியத் தொகை சேர்க்கப்படுகிறது.
* அடுத்து, ரேஷன் பொருட்கள் மற்றும் உரம் போன்றவற்றுக்கான மானியத்தையும் வங்கி கணக்கில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஜன் தன் திட்ட வங்கி கணக்கு |

No comments:
Post a Comment