படித்தவர்களோ, படிக்காதவர்களோ யாராக இருந்தாலும், எதாவது ஒரு வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் வேலை என்பது முக்கியம்.
இன்றைய காலகட்டத்தில், ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், தகுதியானவர்களுக்கு வேலை கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. தன்னுடைய எதிர்காலத்தை நல்லவிதமாக, மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள மனத்துக்குப் பிடித்த வேலை வேண்டும் என்று எல்லோரும் நினைக்கின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இன்டர்நெட் வசதி மேம்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானவர்கள் தங்களுக்கான வேலையை இன்று இன்டர்நெட் மூலம் தேடுகின்றனர். அதுவும், கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இருப்பவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே தங்களுக்கான வேலையைத் தேடுகின்றனர்.
![]() |
ஜாப்டானிக்' - இணைய வேலைவாய்ப்பு அலுவலகம் |
ஜாப்டானிக் என்ற இணையத்தளம், வேலைவாய்ப்புக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் மூலம் வேலை தேடுவோருக்கான மிகச் சிறந்த தளமாக இந்த ஜாப்டானிக் உருவாக்கப்பட்டுள்ளது. தினமும், புதுப் புது வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் இந்தத் தளத்தில் வெளியிடப்படுகின்றன.
வேலை வாய்ப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் :
பெரிய பெரிய அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய உடனடித் தகவல்களை இந்த ஜாப்டானிக் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ள முடியும். இதுதவிர, மற்றவர்களுக்கும் இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
ஜாப்டானிக் இணையத்தளத்தில், வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துத் தரப்படுகிறது. இதன்மூலம், ஒருவர் தன்னுடைய தகுதிக்கும், விருப்பத்துக்கும் ஏற்ற வேலை வாய்ப்பை எளிதாகத் தேர்ந்தெடுக்க முடியும்.
இந்த ஜாப்டானிக் இணையத்தளம், முதல்கட்டமாக தமிழகத்தில் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களைத் தொகுத்து அளிக்கிறது. அந்த வகையில், கோயம்புத்தூரில் வேலை தேடுபவர்கள் இந்த ஜாப்டானிக் இணையத்தளம் மூலம் தங்களுக்கான வேலையைத் தேடிக்கொள்ளலாம். அத்துடன், கோயம்புத்தூரில் எந்தப் பகுதியில் உங்களுக்கு வேலை வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுத் தேடிக்கொள்ளலாம்.
வேலை தேடுவோருக்காக மேலும் பல வசதிகளும் இந்தத் தளத்தில் உள்ளன. உங்களுடைய விருப்பமான வேலை என்ன, எவ்வளவு சம்பளத்தில் வேலை வேண்டும் என்பதையெல்லாம் பட்டியலிட்டால், அதற்கேற்ற வேலை வாய்ப்புகள் எங்கெங்கு உள்ளன என்பதை இந்தத் தளம் பட்டியலிட்டுக் கொடுத்துவிடும். அதில் இருந்து நீங்கள் உங்களுக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
தகவல் தொழில்நுட்பம், விற்பனை, வடிவமைப்பு, பொறியியல் என்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் இந்தத் தளத்தில் தெரிந்துகொள்ள முடியும்.
ஜாப்டானிக்கின் மாபெரும் சேவை :
ஜாப்டானிக் இணையத்தளம் மூலம் வேலை தேட விரும்புவர்கள், முதலில் தங்களைப் பற்றிய சரியான தகவல்களைக் கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யப்படும் தகவல்கள், வேறு யாருடனும் எந்த நிலையிலும் பகிர்ந்துகொள்ளப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை ஜாப்டானிக் தருகிறது. பதிவு செய்துகொண்டவர்களுக்கு, அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் என்னென்ன, எங்கெங்கு உள்ளன என்பது பற்றிய தகவல்களை இந்தத் தளம் உடனுக்குடன் அனுப்பிவைக்கும்.
இந்த ஜாப்டானிக் இணையத்தளம் முற்றிலும் இலவசமானது. யார் வேண்டுமானாலும் பதிவு செய்து, வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை இந்த இணையத்தளம் மூலம் தெரிந்துகொள்ள முடியும். உலகில் எந்த மூலையில் இருந்தாலும், எந்த நேரத்திலும் இந்த ஜாப்டானிக் இணையத்தளத்தைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.
ஜாப்டானிக்கில் பதிவு செய்யுங்கள், வேலை வாய்ப்பைப் பெறுங்கள், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள்.
No comments:
Post a Comment