உங்கள் ராசிக்கு ஜோதிடப்படி உங்கள் இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் : மேஷம் ராசி – மீனம் ராசி :
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்த ஆண் மகன் தனது மனைவியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புவான். தனது துணையின் மீது அதிகளவிலான பாசத்தை பொழிவான். இவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சிறிது பிரச்சினை ஏற்படும். தனது மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆனால் அப்படி அமையப்பட்டால் மனைவி மீது அதிக சந்தேகம் கொண்டவராகவும் மேஷ ராசிக்காரர் திகழ்வார். இதனால் இவர்களுக்குள் தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.
ரிஷபம்:
இந்த ராசிக்காரர்களுக்கு விருச்சக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். அதேபோல கன்னி ராசி காரர்களுடன் வாழ்க்கை அமையும். இவர்களிடம் ஒற்றுமையற்ற வாழ்க்கை உண்டாகும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் துன்பம் நிலவிக் கொண்டிருக்கும்.
![]() |
உங்கள் ராசிக்கு ஜோதிடப்படி உங்கள் இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும்? |
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் யாராவது ஒருவர் மீது அளவுக்கதிகமான அன்பு காட்டுவார்கள். இதனால் சிலருக்கு காதல் தோல்வியும், திருமண பந்தம் முறிவதும் நிகழ வாய்ப்புண்டு. மிதுன ராசிக்காரர் தனது துணையை விட்டு மற்றொருவர் மீது அன்பு செலுத்தும் வாய்ப்பு உண்டு. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போனால்தான் இவர்களது வாழ்க்கை சிறக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர் தனது துணையை தனக்கு நிகராக பாவிப்பார். சுதந்திரத்தை அதிகம் விரும்புபவராக இருப்பார். மனைவியின் அதிகாரத்தையும், அவமரியாதையையும் சகித்துக் கொள்ள மாட்டார். சில சமயம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் பிரச்சினையை எதிர்கொள்வர். தனது துணை மற்றவர்களுடன் பேசுவதையோ பழகுவதையோ விரும்பமாட்டார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் அன்பு காட்டுவர். இவர்கள் சிறந்த கணவராக இருப்பார். இவர்களது மண வாழ்க்கை சிறப்பாக அமைந்தாலும், அடிக்கடி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும். திருமண தோஷம் இருக்க வாய்ப்புண்டு. சிம்ம ராசிக்காரர்கள் பழகுவதற்கு கடினமானவர்கள். எளிதில் கோபம் வந்துவிடும். கோபம் வந்தால் எந்த எல்லைக்கும் செல்வார்கள். பிரியமானவர்களிடம் அதிகம் கோபப்படுவர். கோபத்தை குறைத்தால் மண வாழ்க்கை சிறப்பாக அமையும்.
கன்னி:
கன்னி ராசி காரர்களுக்கு மகர ராசி, விருச்சிக ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். கன்னி ராசி உள்ளவர்கள் வாழ்வில் அவர்களுடைய உயிர் தோழனும் குழந்தையும் சம்பந்தப்பட்டிருப்பார்கள். கன்னி ராசி உடையவர்களுடையவர்களுக்கு அன்பு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கையில் பெண் உதவி சம்பந்தப்பட்டிருக்கும்.
துலாம்:
தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பது உத்தமம்.கனவு அதிகம் வரும். ஒரு குழந்தை பெற வாய்ப்புண்டு. துணைவியின் ஆலோசனையை கேட்டல் நலம். இரண்டு கல்யாணம் செய்யும் வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு காதல் தோல்வி ஏற்படும்.
விருச்சகம்:
விருட்சிக ராசிக்காரர் தனது துணையை மிகவும் விரும்புவர். தனது துணையை ஒரு காதலர்/காதலியைப் போல பாவித்து காதல் வாழ்க்கை வாழ்வர். தனது துணையை எல்லா விதத்திலும் திருப்தியாக வைத்திருப்பர். இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்தி மிகச் சிறந்த காதல் வாழ்வை அனுபவிப்பர்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு அமையும் துணைவி குணவதியாகவும், உழைப்பாளியாகவும், அமைதியானவளாகவும் இருப்பார். இவர்களது திருமண வாழ்க்கை மிக மிக இனிமையாக இருக்கும். தனு ராசி கணவர் பெண்மையை மதிப்பவராக இருப்பார். கூச்ச சுபாவம் இருப்பவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்காது. தனது துணையை முழுவதுமாக முழுவதும் நேசிப்பர். தனது துணையை சமமாக எண்ணுவர். இவர்களுக்கு காதல், திருமணம் எல்லாமே சிறப்பாக அமையும். விரைவிலேயே திருமணம் நடைபெறும்.
![]() |
உங்கள் ராசிக்கு ஜோதிடப்படி உங்கள் இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் மேஷம் - மீனம் ராசி |
மகரம்:
மகர ராசிக்காரர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும். இவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமையானதொரு பகுதியை ரசித்துக் கொண்டிருப்பர். காதல், திருமணம் இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கும். இவர்களுக்கு நண்பர்களும், காதலர்/காதலி, துணைக்கு முக்கியத்துவம் தருவர்.
கும்பம்:
தனக்கென ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு வாழ்பவர். இதனை தனது துணையும் கடைபிடிக்க வேண்டும் என்று விரும்புவார். இவர் பழகுவதற்கு இனிமையானவர். மன தைரியம் மிக்கவர். தனது துணையை மிக மகிழ்ச்சியாக வைத்திருப்பார். கும்ப ராசிக்காரரின் காதல் மற்றும் தாம்பத்ய உறவுகள் பிரகாசமாக இருக்கும். இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பர். மிதுனம், துலாம், விருட்சிகம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களை இவர்கள் துணையாகக் கொண்டால் இல்லறம் நல்லறமாக அமையும். இவர் நல்ல காதலராகவும், துணையாகவும் இருப்பார் என்பது நிச்சயம்.
மீனம்:
மீன ராசிக் காரர்களுக்கு ஒன்றிலிருந்து பல திருமணங்கள் நடைபெறும் முதல் திருமணத்தில் நிம்மதியின்றி மறுமணம் செய்து சுகத்துடன் வாழக் கூடியவர்.
No comments:
Post a Comment