தமிழகத்தில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிப்புகளை தடுக்கும் வண்ணம், அதிக வளைவு மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட விவரங்களை சென்னை, ஐஐடி உதவிப் பேராசிரியர் கீதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சாலைகள் விவாக்கம், மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை. கடந்த ஆண்டில் மட்டும் 69 ஆயிரத்து 59 விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்தில் 15 ஆயிரத்து 642 பேர் உயிரிழந்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்து - உயிரிழப்புகளின் விவரங்களை, மாவட்ட வாரியாக பார்க்கும்போது சென்னை மாவட்டத்தில் அதிகளவில் உயிரிழப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. 7 ஆயிரத்து 336 விபத்துகளில் 889 பேர் இறந்துள்ளனர். கோயம்புத்தூரில் 4 ஆயிரத்து 54 விபத்துகளில் 962 பேர் இறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
![]() |
இனி சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க புது திட்டம் |
சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க புது திட்டம் : தமிழக அரசு முடிவு :
இந்த நிலையில், தமிழகத்தில் அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் 10 மாவட்டங்களில் உள்ள குறுகிய, அதிக வளைவுகள் கொண்ட பட்டியலை சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் கீதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-
வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், சாலை விபத்துகளும், இறப்புகளும் அதிகரித்து விட்டன. வளர்ந்த நாடுகளில் போக்குவரத்துத் துறையில் அறிவுசார்ந்த புதிய முறைகளைப் பயன்படுத்துவதுபோல தற்போது நம் நாட்டிலும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் 10 மாவட்டங்களை தேர்வு செய்து, தற்போது ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளோம். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக் கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஐஐடி மாணவர்கள் 20 பேர் கடந்த 10 நாட்களாக நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் குறுகிய, அதிக வளைவுகள் கொண்ட சாலைகளின் பட்டியல் தயாரித்துள்ளோம். நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான சந்திப்பு இடங்களில் அங்குள்ள சாலையின் நடுப்பகுதியில் இருக்கும் தடுப்புகளை அகற்றிவிட்டு, உள்ளூர் மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்துகின்றனர். இதனால், நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிக விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த ஆய்வின் முழு அறிக்கையை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் காவல்துறை, போக்குவரத்துத் துறையிடம் அளிக்கவுள்ளோம். இந்த அறிக்கை மூலம் நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ள வேண்டிய புதிய கட்டுமானப் பணிகள், போக்குவரத்து வடிவமைப்பு மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு புதிய திட்டங்களை வகுக்க பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு கீதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment