புதுடில்லி:
ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லாமலும், இன்டர்நெட் இணைப்பு இல்லாமலும், மூன்று ரூபாய் செலவில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி துவங்கப்பட்டு உள்ளது.
![]() |
IRCTC யின் இணையதளம் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பி டிக்கெட் பதிவு செய்யலாம். |
இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் :
இந்திய ரயில்வேயின் இணை நிறுவனமான, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் என்னும், ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளம் மூலம், வீட்டில் இருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது, இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே, பயணிகள், தங்கள் மொபைல் போனில் இருந்து, '139' என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி துவங்கப்பட்டு உள்ளது.
எஸ்.எம்.எஸ்., மூலம் :
இதற்கு, ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் கணக்கு வைத்திருக்கும் வங்கியுடன் வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்த பயணிகள், தங்கள் மொபைல் போனில் இருந்து, '139' என்ற எண்ணுக்கு டிக்கெட் முன்பதிவு குறித்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, டிக்கெட் பதிவு செய்யலாம். இதேபோல், டிக்கெட்டையும் ரத்து செய்ய முடியும்.
No comments:
Post a Comment