Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Thursday, October 13, 2016

திருவண்ணாமலையில் புரட்டாசி மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் : கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் புரட்டாசி மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்:

திருவண்ணாமலையில் நாளை வரும் பவுர்ணமிக்கு எந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்பதை கீழே பார்க்கலாம்.

புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது என்று கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை போற்றப்படுகிறது. மலைதான் இறை ரூபாமாக திகழ்கிறது. எனவே இங்கு தினசரியும் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

திருவண்ணாமலையில் புரட்டாசி மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் புரட்டாசி மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள். இந்த மாதம் (புரட்டாசி) பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

பவுர்ணமி கிரிவலம் செல்ல நல்ல நேரம் அறிவிப்பு  : 

மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர். இதன் கிரிவல்ப்பாதை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து 14 கி.மீ தூரமாகும். கிரிவலம் செல்லும் போது இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருத்திலிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்யலிங்கம் ஆகிய 8 லிங்கங்களை தரிசிக்கலாம். 

வருகிற 15-ந்தேதி சனிக்கிழமை மதியம் 12.36 மணிக்கு பவுர்ணமி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 10.27 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment